தமிழகத்தை நெருங்கும் புயல்.! காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் அதிகரிப்பு.!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வேகம் அதிகரித்து 15கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வங்க கடலில் நேற்று உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அதே போல் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் … Read more

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களுக்களூக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனோடு மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதாக மையம் தெரிவித்துள்ளது. இதனால் சேலம்,தர்மபுரி,கிருஷ்ணகிரி,கள்ளக்குறிச்சி ,திருவண்ணமாலை ,காஞ்சிபுரம்,வேலூர், ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அடுத்த 24X7: 15 மாவட்டம்- இடிடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.!வானிலை தகவல்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தென்மேற்குப் பருவமழை ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலப் பகுதிகளிலிருந்து இன்று முதல் விலக தொடங்குகிறது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, … Read more

தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகம், புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது வரும் நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகரக் கூடும்.தென் தமிழகம், புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், … Read more

கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் மத்தியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் மத்தியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும், இதனால் அடுத்த மூன்று நாட்களுக்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே … Read more

கோவில்பட்டியில் பலத்த இடி, மின்னலுடன் மழை…!!

  கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது. இன்று காலையில் பலத்த வெயில் அடித்தாலும், மதியத்திற்கு மேலாக வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. தொடர்ந்து பலத்த இடி,மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.தொடர்ந்து சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததது. இந்த மழையினால் கோவில்பட்டி புதுரோடு, மார்க்கெட் சாலைகளில் மழைநீர் வெள்ளபோன்று போனதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.

வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி வடக்கு மற்றும் தென்தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு…!!

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் கர்நாடகத்தை ஒட்டி வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு மற்றும் தென்தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஓரிரு முறை இடைவெளி விட்டு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்துள்ளது.