சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, இன்று இது வலுப்பெற்று, தமிழகம் நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், உருவாக தாமதம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 5.30 மணி நிலவரப்படி அடுத்த 24 மணி நேரத்தில் தான் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, […]
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை பெய்தது. தற்பொழுது, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தி.மலை, வேலூர், கடலூர், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் விடாது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம், தூத்துக்குடி, திருப்பத்தூர், கரூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, அரியலூர், சென்னை, விழுப்புரம், […]
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், இன்று பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராமநாதபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவ.21) விடுமுறை அளிப்பது குறித்து, அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மேலும், மாவட்ட அளவில் பரவலாக கனமழை […]
ஒடிசா : மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. மத்திய கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இது நாளை மறுநாள் (அக்.23) புயலாக […]
சென்னை : மத்திய அந்தமான் கடற்பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றின் மேலடுக்கு சுழற்சியானது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அக்.22-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குவிந்து, அக்.23-ல் கிழக்கு மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நடப்பு வடகிழக்கு பருவமழையின் முதல் புயல் இதுவாகும். […]