தமிழ்நாட்டிற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்! இந்த மாவட்டங்கள் அலர்ட்டா இருங்க!

இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

thoothukudi heavy rain 2025

சென்னை :குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை வங்கக்கடல் பகுதிகளில் நாளை (நவம்பர் 25) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. மலாக்கா ஜலசந்தி, அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

அதே சமயம், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது. மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கணிப்பு.

மேலும், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.