சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு […]
சென்னை : தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரம் அதாவது 1 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]
தூத்துக்குடி : தமிழகத்தில், கடந்த சில நாட்களாகவே டெல்டா, தென்மாவட்டங்களில் இருக்கும் இடங்களில் கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. அதில், தென்மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இடைவிடாது பெய்து வரும் கனமழையின் தீவிரத்தால் தூத்துக்குடியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் (நவ-20, புதன்) மட்டும் விடுமுறை அறிவித்துள்ளனர். நேற்று முதல் மழை விட்டுவிட்டு பெய்த […]
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கோயில் யானை தெய்வானை மிதித்ததில் யானை பாகன் மற்றும் பாகனின் உறவினர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 25 வயதுடைய தெய்வானை எனும் பெண் யானை திருச்செந்தூர் முருகன் கோயிலில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த யானையை பராமரிக்கும் பொறுப்பை பாகன் உதயகுமார் என்பவர் மேற்கொண்டு வந்துள்ளார். இவரது உறவினர் சிசுபாலன் என்பவர் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்துள்ளார். இன்று பிற்பகல் 3.30 மணியளவில் […]
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலில் தெய்வானை எனும் 25 வயது மதிக்கதக்க யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் பாகனாக உதயகுமார் என்பவர் பணியாற்றி வந்தார். இன்று இவரை காண பாகனின் உறவினர் சிசுபாலன் என்பவர் களியக்காவிளை பகுதியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணியளவில், திடீரென கோயில் […]
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893 பயனாளிகளுக்கு, ரூ.206.47 கோடி மதிப்பில் பல்வேறு அரசு துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற வளர்ச்சி பணிகள் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வளர்ச்சிப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு […]
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், இன்று 2 நாள் சுற்று பயணமாக தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ளார். இன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பல்வேறு திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் துணைமுதல்வர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிந்த பிறகு, குறிச்சி நகர் மெயின்ரோட்டில் உள்ள மைதானத்தில் தமிழக அரசின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட […]
தூத்துக்குடி : தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில், அக்கட்சி தலைவர் விஜய் பேசுகையில், திராவிடமும் தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரு கண்கள் என்று பேசியிருந்தார். அவரது இந்த கருத்தை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடுமையாக எதிர்த்தார். தமிழ் தேசியமும் , திராவிடமும் ஒன்றல்ல. விஷமும், விஷ முறிவு மருந்தும் ஒன்றா.? பெண்ணியம் பேசும் திராவிடம், பெண்ணிய உரிமை கொடுக்கும் தமிழ் தேசியம் என்றும் பல்வேறு விளக்கங்களை ஆவேசமாக கூறினார் சீமான். மேலும், […]
தூத்துக்குடி : உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டியாகத் தீபாவளி கருதப்படுகிறது. இந்த தீபாவளி திருநாளில், வெடி வெடிப்பதுடன், புத்தாடை, பலகாரங்கள் என அந்நாள் முழுவதுமே களைக்கட்டும் ஒரு விழாவாகவே தமிழகம் முழுவதுமே கொண்டாடப்பட்டுகிறது. அப்படி தீபாவளியில் முக்கிய பங்காகப் பார்க்கப்படுவது இனிப்புகளும், பலகாரங்களும் தான். அதிலும், பலர் இந்த இனிப்புகள், பலகாரங்கள் என அனைத்தையும் பிரபல பரிட்சியமான கடைகளில் வாங்குவார்கள். உணவில் கலப்படம், தரமற்ற உணவு என இப்படி ஒரு சில காரணங்களுக்காகச் […]
தூத்துக்குடி : த.வெ.க தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் கட்சியின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக கட்சியின் பொதுச்செயலாளர் N. ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்) தலைமையில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் அந்த மாவட்டங்களின் பொறுப்பாளர் தலைமையில் மாநாட்டுக்கு தொண்டர்கள் கிளம்பி இருக்கிறார்கள். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா அக்னல் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட தொண்டர்கள் பலரும் அக்டோபர் 26 சனிக்கிழமை […]
சென்னை : இதுவரை திரை நட்சத்திரமாக உச்சத்தில் இருந்த நடிகர் விஜய், தற்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மூலம் அரசியல் கட்சித் தலைவராகவும் உருவெடுத்துள்ளார். அக்கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விவி சாலையில் நடைபெற உள்ளது. இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகளை தவெக தொண்டர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். நாளை மாலை தொடங்கும் இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் தனது கட்சி கொள்கை, கட்சிக்கான கோட்பாடுகளை அறிவிக்க உள்ளார். […]
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இந்த அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இங்கு பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு சிலர் அன்பளிப்பு வழங்குவதற்காக பணம் கொண்டு வந்துள்ளதாக தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறை டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையிலான காவல்துறையினர் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனை […]
தூத்துக்குடி : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. எனவே, இதன் காரணமாக மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் மும்மரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால், இதே சமயம் கடந்த ஆண்டு தூத்துக்குடி, மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்குத் தேவையான அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை, தூத்துக்குடி எம்பி […]
தூத்துக்குடி : மஞ்சள் மூட்டைகள் பீடி இலைகள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவை தூத்துக்குடி முள்ளக்காடு கோவளம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சிலர் கடத்த உள்ளதாக க்யூப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து க்யூ பிரிவு காவல்துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். இன்று அதிகாலை 2 மணியளவில் க்யூ பிரிவு போலீசார் தூத்துக்குடி கோவளம் கடற்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கொண்டு செல்வதற்காக வந்த சரக்கு வாகனத்தை மடக்கி […]
தூத்துக்குடி : தேசிய அளவிலான கயாக் (Kayak) மற்றும் ஸ்டாண்ட் அப் பெடலிங் (Stand Up paddling) கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள் இன்று தூத்துக்குடியில் உள்ள முத்துநகர் கடற்கரையில் தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்தியா முழுவதிலிருந்தும் 22 மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இன்று தொடங்கிய இந்த கடல் சாகச போட்டிகளைத் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் […]
தூத்துக்குடி : புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் கோயிலில் மூலவரான பெருமாள், வெங்கடாசலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்றபடி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகவும், அதிலும், புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் வைணவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இம்மாதம் பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு […]
தூத்துக்குடி : தசராவிற்கு உலக புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவில் மாலை அணிந்துகொண்டு பக்தர்கள் அம்மன், முருகன், விநாயகர், குரங்கு, கரடி போன்ற வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்படி, 10 நாட்கள் நடைபெற்ற தசரா திருவிழாவில் பக்தர்கள் விரதம் இருந்து, வேடமணிந்து காணிக்கை எடுத்து வந்தனர். இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான […]
தூத்துக்குடி : இன்று நாடு முழுவதும் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயதசமி நாளன்று கல்வி, புதிய தொழில்கள் என நல்லவற்றை துவங்கினால் அத்துறையில் வெற்றிகள் கிடைக்கும் என்பது இந்துக்களின் ஐதீகமாக உள்ளது. இந்நிலையில் இன்று விஜயதசமி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள 150 ஆண்டுகள் பழமையான எஸ்.ஏ.வி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பழமையான கலைமகள் (சரஸ்வதி) ஆலயத்தில் குழந்தைகள் கல்வியை துவங்கும் ‘வித்யா (அறிவு) ஆரம்பம்’ எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த […]
தூத்துக்குடி : தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தவெக கட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களைச் சார்ந்த ஏராளமான பெண்கள் இணையும் நிகழ்ச்சி தூத்துக்குடி பால விநாயகர் கோவில் தெருவில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் நேற்று (அக்டோபர் 10) நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அஜிதா ஆக்னல் தலைமையில் தூத்துக்குடி மாநகர், திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று தங்களை தமிழக வெற்றிக்கழக கட்சியில் இணைத்துக் […]
தூத்துக்குடி : நாளை (ஆகஸ்ட் 20-08-2024) செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி அது எந்தெந்த இடங்கள் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட் பகுதிகள், மட்டக்கடை, வடக்கு பீச் ரோடு, ரெயில்வே ஸ்டேசன் ரோடு, எட்.டயபுரம் ரோடு, தெப்பக்குளம் தெரு, சிவன்கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, ஜெயிலானி தெரு, […]