சென்னை :அ.தி.மு.கவில் இருந்து வெளியில் சென்றவர்களை கட்சியில் இணைக்கும் பணியை 10 நாட்களில் மேற்கொள்ள வேண்டும். 10 நாட்களில் இணைப்புப் பணியை மேற்கொள்ளாவிட்டால், ஒருங்கிணைந்து அந்த பணியை நாங்கள் மேற்கொள்வோம்.
எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால், இ.பி.எஸ் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என்றுகே.ஏ.செங்கோட்டையன் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்நிலையில், செங்கோட்டையனின் பரபரப்பு செய்தியாளர் சந்திப்பை அடுத்து வி.கே. சசிகலா, “ஒன்றுபடுவோம் வென்றுகாட்டுவோம்” என்று குறிப்பிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சசிசலா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தொண்டர்கள் கருத்தே செங்கோட்டையன் கருத்தாக உள்ளது. செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம் என்று நிரூபித்துவிட்டார். ஒருங்கிணைந்த அதிமுக உருவாவதை யாராலும் தடுக்க முடியாது. அதிமுக ஒன்றிணையக்கூடாது எனும் திமுக சதி ஈடேறாது. ஒன்று படுவோம் வென்று காட்டுவோம்.
இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எந்த சக்தியாலும் அழிக்கமுடியாத ஒரு பேரியக்கம் என்பதை கழக மூத்த முன்னோடியும் கழக சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் அவர்கள் நிரூபித்து இருக்கிறார்.
பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களிலும் திரு செங்கோட்டையன் அவர்கள் உடனிருந்தவர். தனது உடம்பில் ஓடுவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரத்தம் தான் என்பதை திரு செங்கோட்டையன் அவர்கள் திரூபித்துள்ளார். கழகம் ஒன்றுபட வேண்டும் என திரு. செங்கோட்டையன் அவர்களின் கருத்துதான் இன்றைக்கு ஒவ்வொரு தொண்டர்களின் கருத்து. தமிழக மக்களின் கருத்தும் இதுநான் நானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன்.
செங்கோட்டையன் போன்று உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை திமுக என்ற தீயசக்தி எந்தவிதத்தில் முயற்சி செய்தாலும் அவர்களின் தீய எண்ணம் ஈடேறாது. திமுகளின் சதித்திட்டத்தை முறியடித்திட கழகத்தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றது இதனை எந்த அணை போட்டும் யாராலும் தடுக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
