சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட வேண்டும் என்றும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் நடத்திய மாநாடு குறித்தும், அம்மாநாட்டில் விஜய் பேசிய கருத்துக்கள் பற்றியும் […]
சென்னை : நேற்று நடைபெற்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு பற்றிய செய்திதான் தற்போது வரை தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. திமுகவினர் பற்றி நேரடியாக விமர்சனம் செய்ததால், அங்கிருந்து எதிர்ப்பு கருத்துக்களும், மற்ற கட்சியில் இருந்து ஆதரவு எதிர்ப்பு பலவகையான கருத்துக்களும் வந்து கொண்டிருக்கிறது. நேற்று பேசிய தவெக தலைவர் விஜய், திமுகவை நேரடியாகவும், பாஜகவை மறைமுகமாகவும் பேசி விமர்சனம் செய்துவிட்டு அதிமுக பற்றி எந்த விமர்சனமும் முன்வைக்காமல் இருந்துள்ளார். அதுபற்றி கூறிய […]
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்பான இடங்களில் இன்றும் சோதனை தொடர்கிறது. அதன்படி, சென்னை அசோக்நகரில் உள்ள வைத்திலிங்கம் குடும்பத்துக்கு சொந்தமான 6 இடங்களில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வைத்திலிங்கம் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, கட்டுமான நிறுவனத்திடம் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.27 கோடியை லஞ்சம் பெற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உட்பட 11 பேர் மீது, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. அதன் […]
சேலம் : திமுக கூட்டணி உடைந்து விடும், திமுக செல்வாக்கு சரிந்துள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி பகல் கனவு காண்கிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னர் விமர்சனம் செய்திருந்தார். இந்த விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று சேலத்தில் நடைபெற்ற காட்சிக்கூட்டத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அவர் கூறுகையில், ” ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து மாநிலத்தின் முதலமைச்சராக முடியும் என்றால் அது அதிமுகவில் மட்டுமே சாத்தியம். அதற்கு உதாரணம் நான். அதேபோல திமுகவில் […]
சென்னை : இன்று கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக எம்எல்ஏ கீ.வேணுவின் இல்ல திருமணவிழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக பற்றியும் , திமுக கூட்டணி பற்றியும் கூறிய பல்வேறு விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசினார். அவர் கூறுகையில், ” மக்களால் போற்றப்படும் ஆட்சியாக திமுக உள்ளது. மக்களால் ஓரங்கட்டப்பட்ட கட்சியாக அதிமுக உள்ளது. திமுகவின் செல்வாக்கு வளர்ந்து […]
சென்னை : தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உறந்தைராயன் குடிக்காடு பகுதியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினார் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சோதனை சென்னையிலும் தொடர்ந்து வருகிறது. கடந்த 2011 அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்சஒழிப்புத்துறை, ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வைத்தியலிங்கத்தின் மூத்த மகன் V.பிரபு மீதும் […]
சேலம் : கூட்டணியில் உள்ள கட்சிகளோடு திமுகவுக்கு புகைச்சல் ஏற்பட்டுள்ளது என்றும், 2026இல் கூட்டணி மாறலாம் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ” திமுக கூட்டணி வலுவாக தான் இருக்கிறது என அவர்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகைய ஆரம்பித்து விட்டது (சாம்சங் ஊழியர்கள் விவகாரத்தை மறைமுகமாக குறிப்பிட்டு). அடுத்து காங்கிரஸ் சார்பில் திமுகவின் நடவடிக்கை தொடர்ந்தால் நாங்களும் பேச வேண்டியிருக்கும் […]
சென்னை : நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கும் போது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் நடிகை கௌதமி. அதன்பிறகு, அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்து பல பொறுப்புகள் ஏற்று பல பணிகளை செய்து வந்தார். அதன் பின், பாஜகவுடன் சில முரண்பாடுகள் ஏற்பட்டதால் சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இதன் பிறகு, அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில், தற்போது அவருக்கு அதிமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக […]
சென்னை : இன்று (அக்டோபர் 17) அதிமுக கட்சியின் 53வது ஆண்டுவிழாவானது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி , முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் , தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த விழா முடிந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவரிடம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோரை சேர்க்கும் விவகாரம் […]
சென்னை : இன்றோடு (அக்டோபர் 17) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சி துவங்கி 52 ஆண்டுகள் nநிறைவு செய்து 53ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். சிலர் பிரிந்து இருக்கும் அதிமுக தலைவர்கள் ஒன்றினைய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகினர். சிலர் பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர். இப்படியாக பல்வேறு கலகட்டங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு அதிமுக எனும் கட்சி இன்றும் தமிழக […]
சென்னை : வடகிழக்கு பருவமழை , வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் கனமழை கொட்டித்தீர்த்தது. இன்றும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று மழையின் அளவு வெகுவாக குறைந்தது. கனமழை பெய்தவுடன் சென்னை புறநகர் பகுதியில் மழைநீர் தேங்கியது. இதனால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புறநகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு […]
சென்னை : விஜயதசமியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பேரணி நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் 6ஆம் தேதி ஞாயிற்று கிழமையன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ஈசாத்தி மங்கலம் பகுதியில் இருந்து பூதப்பாண்டி வரை ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. இந்த ஆர்எஸ்எஸ் பேரணியை கன்னியகுமாரி தொகுதி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார். ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனி […]
சென்னை : சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. ஏனென்றால், இந்த நிகழ்ச்சியை பார்வையிட லட்சக்கணக்கான மக்கள் கூட்டமாக வருகை தந்திருந்தார்கள். அப்போது கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால், இந்த கூட்டநெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்டதில் 7 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னதாக தெரிவித்து இருந்தார், இந்த சோகமான சம்பவம் […]
சேலம் : நேற்று சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சியை பார்வையிட லட்சக்கணக்கான மக்கள் கூடினர். இதில் கூட்டநெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 7 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். விமான சாகச நிகழ்ச்சியை காண வந்து கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி அரசியல் கட்சி தலைவர்கள், ஆளும் […]
சென்னை : தமிழக அரசியலில் அதிகம் எதிர்நோக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு’ நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. விசிக மகளிரணி சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலிருந்தும் ஏரளமான பெண்கள் கலந்துகொண்டனர். விசிக தலைவர் திருமாவளவன் இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். இந்த மாநாடு பற்றி திருமாவளவன் செய்தியாளர்களிடம் அறிவிக்கும் போதிலிருந்தே மாநாடு குறித்த பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விதமாக பேசப்பட்டன. திருமாவளவன் […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 4 புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்படி, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக 4 பட்டியலின அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை என்ற பெருமையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புதிய அமைச்சரவை பெற்றுள்ளது. இதுவரை இல்லாத வகையில், கயல்விழி செல்வராஜ், கோவி.செழியன், மதிவேந்தன், சி.வி.கணேசன் ஆகிய 4 பட்டியலின அமைச்சர்கள், அமைச்சரவையில் உள்ளனர். […]
சென்னை : தேர்தல் 2024 மீளும் ‘மக்கள்’ ஆட்சி’ என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதில் கலந்துகொண்ட அவர் பாஜகவால் பல கட்சிகள் காணாமல் போனதாக விமர்சித்து பேசினார். இது குறித்து அவர் பேசியதாவது ” ஒரு மிஸ்ட் கால் கொடுத்தாலே பாஜகவில் சேரலாம் என விளம்பரம் செய்தார்கள். ஆனால், இறுதியாக தன்னுடைய சொந்த காலில் நிற்கமுடியாமல் இன்று சந்திரபாபு நாயுடு மற்றும் […]
சென்னை : விசிக நடத்தவுள்ள மது ஒழிப்பு மாநாடு தான் தற்போது தமிழக அரசியலில் ‘ஹாட் டாபிக்’-காக மாறியுள்ளது. வரும் அக்டோபர் 2ஆம் தேதி விசிக சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அனைத்து கட்சி தலைவர்களையும் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் வாய்மொழியாக அழைப்பு விடுத்தார். அப்போது, ‘விருப்பம் இருந்தால் அதிமுகவும் கலந்து கொள்ளலாம்.’ என கூறினார். திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவனின் பேச்சு அரசியல் […]
சென்னை : வரும் அக்டோபர் 2ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது . பூரண மதுவிலக்கு என்பது இந்த மாநாட்டின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இந்த மாநாடு பற்றி அக்கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், மதுவுக்கு எதிராக குரல் கொடுக்க யார் வேண்டுமானாலும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளலாம். அதிமுகவும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளலாம் எனக் கூறியிருந்தார். திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, விசிக தலைவர் திருமாவளவன், அதிமுகவுக்கு […]
சென்னை : அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் திமுக அரசுப் பொறுப்பேற்ற கடந்த 40 மாதங்களில் சமூக விரோத குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறி, அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக மகளிரணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பாக சென்னை […]