தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக,அதிமுக இருக்காது...முதல்வர் விஜயின் ஜோதிடர் பேச்சு!

தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக இருக்காது 2031-ல் திமுக, அதிமுக கூட்டணி அமைக்கும் என முதல்வர் விஜயின் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் அரசியலுக்குள் களமிறங்கினால், அது தமிழக அரசியலின் பாரம்பரியக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிவிடும் என்று ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் அதிரடியான கணிப்பை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் வரவிருக்கும் தேர்தல்களில் நடிகர் விஜயின் அரசியல் எழுச்சியை எதிர்கொள்ள திமுக மற்றும் அதிமுக கட்சிகள் ஒன்றிணையக் கூடும் என்று கூறியிருந்தார். அந்த வரிசையில் தற்போது நடிகர் தனுஷ் குறித்து அவர் புதிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

தனுஷ் அரசியலில் ஈடுபடத் தீர்மானித்தால், தமிழக அரசியலில் வழக்கமாக உள்ள பிரதான எதிர்க்கட்சி இடமான இரண்டாவது இடத்தை அவர் எளிதில் பிடித்துவிடுவார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் தமிழக அரசியல் களம் என்பது நடிகர் விஜய் மற்றும் நடிகர் தனுஷ் இடையேயான நேரடிப் போட்டியாக மாறுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கணித்துள்ளார்.

மேலும், தனுஷின் ஜாதகத்தை நேரடியாகத் தான் ஆய்வு செய்துள்ளதாகவும், அவரது ஜாதகத்தில் அதற்கான உன்னதமான யோகம் வலுவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ள ஜோதிடர், அரசியலில் இறங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது நடிகர் தனுஷின் தனிப்பட்ட விருப்பம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.