சென்னை : இன்றோடு (அக்டோபர் 17) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சி துவங்கி 52 ஆண்டுகள் nநிறைவு செய்து 53ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். சிலர் பிரிந்து இருக்கும் அதிமுக தலைவர்கள் ஒன்றினைய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகினர். சிலர் பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர். இப்படியாக பல்வேறு கலகட்டங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு அதிமுக எனும் கட்சி இன்றும் தமிழக […]
சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக கட்சியானது எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தனித்தனியாக பிரிந்தது. இதில் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் , எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்ததால், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து 2022இல் நீக்கப்பட்டனர். இதனை அடுத்து, நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தோல்வி அடைந்தது. 7 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் சூழல் […]
மதுரை : அதிமுகவை ஒன்று சேர்ப்பது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க தென்காசியில் நேற்று முதல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் விகே சசிகலா. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரான ஆர்.பி. உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார். மேலும், அந்த சந்திப்பில் தென்காசியில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள சசிகலாவை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் அவர் பதிலளித்தார். இதனை குறித்து அவர் கூறியதாவது, “சசிகலாவின் இந்த ஆடி மாத சுற்றுப்பயணம் என்பது ஒரு சுற்றுலா […]
தென்காசி; முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கட்சியை அப்போது வழிநடத்தியவர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பராக இருந்த சசிகலா. அவர் தலைமையில் தான் ஓ.பன்னீர்செல்வம் முதலைவரானார். பின்னர், ஓபிஎஸ் தர்ம யுத்தத்திற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரானார். அந்த சமயம் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை சென்றார் சசிகலா. சிறையில் இருந்து 4 ஆண்டுகள் கழித்து 2021இல் வெளியில் வந்த சசிகலா, அதிமுக கட்சி நலனை கருத்தில் கொண்டு அரசியலில் இருந்து ஒதுங்கி […]
சென்னை : அதிமுகவில் தனது அரசியல் பிரவேசம் தொடங்கியதாக சசிகலா அறிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் தனது ஆதரவாளர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வி.கே.சசிகலா, “அதிமுகவில் ஜாதி பார்க்கப்படுவதாக முதன்முதலாக கேள்விப்படுகிறேன். அதிமுகவில் இருந்துகொண்டு அவ்வாறு செய்வதை யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து வந்த பிறகு, அரசியல் குறித்து எம்.ஜி.ஆர். என்னிடம் பேசுவார். இந்தியாவின் 3வது பெரிய இயக்கமான அதிமுக சிலரின் சுயநலத்தால் வீழ்ச்சி யாரையும் கட்சியில் இருந்து நீக்கக் கூடாது […]
கே.பி.முனுசாமி: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்விக்கு பிறகு சசிகலா நேற்று அழைப்பு விடுத்திருந்த நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் X தளத்தில் பதிவிட்டு அழைப்பு விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து அதிமுக துணை பொதுச்செயலாளரான கே.பி.முனுசாமி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி இருந்தார். அவர் கூறுகையில், “அதிமுகவில் எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்று சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் முயற்சி செய்கின்றனர். அவர் அறிக்கை வெளியாகி இதுவரை எத்தனை தொண்டர்கள் அவரை சந்தித்துள்ளனர்? அதிமுக தொண்டர்களை அழைப்பதற்கோ, […]
Udhayanidhi Stalin : சசிகலா காலில் சில்லறை தேடிய எடப்பாடி பழனிச்சாமி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம். வடசென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வடசென்னை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அப்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை மக்கள் கடந்த தேர்தலில் ஒரு மனதாக […]
Seeman: சசிகலாவை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா? என டிடிவி தினகரனுக்கு சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தேனியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மருத்துவர் மதன் ஜெயபாலனுக்கு ஆதரவாக அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது சீமான் கூறியதாவது, சசிகலாவை நான்கரை ஆண்டுகள் சிறையில் வைத்தவர்கள் யார்? என கேள்வி உங்களை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா என்றார். […]
EPS : நான் ஏன் சசிகலா காலில் விழுந்து வணங்கினேன் என எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் விளக்கம் அளித்துள்ளார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவருமே ஒருவருக்கொருவர் வார்த்தை போரிலும், புகைப்படங்கள் காட்டியும் விமர்சனம் செய்து வருகின்றனர். “செங்கலை காட்டத்தப்பா. போர் அடிக்குது” என இபிஎஸும், “நான் கல்ல காட்டுறேன், எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் பல்ல காட்டுறாரு” என உதயநிதியும் மாறி மாறி விமர்சனம் செய்து வந்தனர். […]
சசிகலாவுடனான சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அறிஞர் அண்ணாவின் நினைவுநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். அங்கு சசிகலாவும் வந்திருந்த நிலையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். பன்னீர்செல்வம் உடனான சந்திப்பு குறித்து சசிகலா கூறும்போது, “குடும்பத்தில் ஒருவர் என்ற முறையில் இந்த சந்திப்பு நடந்தது” என கூறினார். பின்னர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், “அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு கிளம்பும் […]
பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அண்ணாவின் நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு, நினைவு இடத்திற்கும் சென்று அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், திமுக சார்பி அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதி பேரணி இன்று காலை நடைபெற்றது. இந்த பேரணியில் அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். சேப்பாக்கத்தில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி சென்ற திமுக பேரணி, சென்னை மெரினாவில் […]
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனத் தலைவருமான பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர். பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் திமுகவினர் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி மேற்கொள்ளப்பட்டது. பிப்.8 திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம்! இதற்கிடையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி […]
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக சசிகலா, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கொடநாடு எஸ்டேட்டுக்கு நேற்று மாலை வந்தடைந்தார். கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா பெயரில் தியான மடம் மற்றும் சிலை அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக, சசிகலா அங்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. அதன்படி, கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவச்சிலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் சசிகலா, எஸ்டேட் […]
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து பல்வேறு கோணங்களில் நடைபெற்று வரும் நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டுக்கு இன்று புறப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அடுத்த சில நாட்களிலேயே அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர், சொத்துக்குவிப்பு […]
கடந்த 2 நாட்களாக மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை சென்னையையே புரட்டி போட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் பெரும்பாலான மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அனைத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை […]
அதிமுகவில் இருந்து விகே சசிகலாவை நீக்கியது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து, விகே சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இதன்பிறகு, அதிமுகவில் ஒன்றை தலைமை பிரச்சனை பூகம்பமாக வெடித்து ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக […]
அதிமுக பொதுச்செயலாளர் பதிவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து, சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இதன்பின், ஜெயலலிதா மறைவிற்கு ஒன்றை தலைமை பிரச்சனையால் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக பிளவுபட்டது. கடந்த ஆண்டு ஓபிஎஸ் […]
அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அதிமுகவின் மூத்த தலைவர்களாக இருந்த மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போன்றவர்களால் முன்மொழியப்பட்டும், வழிமொழியப்பட்டும் அதிமுக […]
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி விகே சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து விகே சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, அதிமுகவின் மூத்த தலைவர்களாக இருந்த மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போன்றவர்களால் முன்மொழியப்பட்டும் வழிமொழியப்பட்டும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த சசிகலாவை நீக்கியது செல்லாது, […]
ஆன்மிக பக்தர்கள் மத்தியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனின் மருஉருவமாக பார்க்கப்படும் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் நேற்று மாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல், பிரதமர் நரேந்திர மோடி வரையில் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர் . முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையிலேயே நேரில் வந்து பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார். அதே போல மற்ற சில அமைச்சர்களும் , அரசியல் தலைவர்களும் பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். […]