இந்த வருட தீபாவளியை முன்னிட்டு, தளபதி விஜய் – இயக்குனர் அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படமான பிகில் மற்றும், மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கைதி திரைப்படமும் வெளியாக உள்ளது.
unknown nodeவிஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் தீபாவளி ரிலீஸ் என கூறப்பட்டது, ஆனால் பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது புதிய தகவலாக தமன்னா முதன்மை வேடத்தில் நடித்துவரும் பெட்ரோமாக்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
unknown nodeபெட்ரோமாக்ஸ் திரைப்படம் தெலுங்கில் டாப்ஸி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற பேய் திகில் திரைப்படமான ஆனந்தோ பிரம்மா என்ற படத்தின் தமிழ் ரிமேக் ஆகும். இப்படத்தை ரோஹன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.