சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். திரிஷா ஹீரோயினாக நடித்திருந்தார். அர்ஜுன், ரெஜினா ஆகியோர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் வெளியான சமயத்திலேயே இது வழக்கமான அஜித் படம் போல இருக்காது என இயக்குனர் கூறிவிட்டார். அதனால் அப்படி எதிர்நோக்கியே ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்தார்கள். இப்படத்தின் புரமோஷன்களில் லைகா பெரியளவில் ஈடுபடவில்லை. அவ்வப்போது படத்தில் […]
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. பிற்பகல் 2.30 மணியளவில் லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் இல்லாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதன் பாதிப்பு ஆட்டத்திலும் […]
லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பி பிசிசிஐ மறுத்துவிட்டதால் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா விளையாடும் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதி போட்டி மட்டும் துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு விட்டது. நாளை நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் கூட துபாய் கிரிக்கெட் மைதானத்தில் தான் நடைபெற உள்ளது. இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறினால் இறுதி […]
வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க வைக்கின்றன. இதனால் அவர் செய்யும் சின்ன சின்ன விஷயம் கூட பெரும் பேசுபொருளாக மாறிவருகிறது. அதற்கொரு உதாரணமாக தற்போது ஒரு சம்பவம் நிகந்துள்ளது. அதாவது, வாஷிங்டன்னில் உள்ள ஓவல் மைதானத்தில் இருக்கும் தனது மேஜையை டொனால்ட் டிரம்ப் மாற்றுவதற்கு உத்தரவிட்டுள்ளார். ஒரு புதிய ஜனாதிபதி பொறுப்பேற்ற உடன், தனக்கு பிடித்த அலுவலக மேஜையை 7 பாரம்பரிய […]
சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும் விதமாகவே உட்கட்சி பூசல்கள் அவ்வப்போது வெளிப்படவும் செய்கின்றன. தற்போது டிரெண்டில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் இரு தரப்பு என்பது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விருதுநகர் காங்கிரஸ் எம்பிமாணிக்கம் தாகூர் தரப்பு ஆகும் . ஏற்கனவே மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மாவட்ட தலைவர்களை கலந்து ஆலோசிப்பதில்லை, தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார் என அதிருப்தி மாவட்ட செயலாளர்கள் […]
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோததின. இந்தப் போட்டி பாகிஸ்தான் கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங் தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் நிலைத்து ஆடி 106 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 103 ரன்கள் […]
கொல்கத்தா : சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும்) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி, வங்கதேசத்திற்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றது. அடுத்ததாக நாளை மறுநாள் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தியா -பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர் என மூத்த வீரர்கள் பலமான பேட்டிங் லைன் அப்பில் இருக்க, வேகப்பந்து பவுலிங் லைன் […]
கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கடலூருக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு முடிவுற்ற மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்த வருகிறார். அவ்வாறு தற்போது கடலூரில் நடைபெற்று வரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கடலூருக்கு புதிய 10 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையாக அறிவித்தார். முதலமைச்சர் அறிவித்த 10 அறிவிப்புகள் : திட்டக்குடி, விருத்தாச்சலம் பகுதியில் உள்ள வேளாண் மக்கள் பயன்பெறும் வகையில் வெலிங்டன் ஏரி கரைகள் பலப்படுத்தப்படும். அப்பகுதி […]
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி பாகிஸ்தான் கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியது. ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங் தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் நிலைத்து ஆடி […]
சென்னை : நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை கடந்த 2018 பிப்ரவரி மாதம் 21இல் ஆரம்பித்தார். இக்கட்சி தொடங்கப்பட்டு தற்போது 8வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிகழ்வு நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார். அவர் பேசுகையில், நான் அரசியலில் தோற்றுவிட்டதாக பலர் கூறுகிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பே நான் வந்திருந்தால் எனது நிலை வேறு. 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் […]
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்பதை குறிப்பிட்டு இனி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் Go Back மோடி என சொல்ல மாட்டார்கள் Get Out Modi என்று சொல்வார்கள் என கூறியிருந்தார். இதனை அடுத்து #GetOutModi எனும் ஹேஸ்டேக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. இதனை குறிப்பிட்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு […]
திருச்சி : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் PM Shri திட்டத்தின் கீழ் தமிழகம் சேராதது வரையில் தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்பது போல மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பேசியது தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. மும்மொழி கொள்கை மூலம் மத்திய அரசு ஹிந்தி மொழியை திணிக்கிறது என தமிழகத்தில் திமுக, அதிமுக , விசிக, காங்கிரஸ், நாதக, தவெக என அனைத்து கட்சியினருமே எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகின்றனர். அன்பில் […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச அணி தொடக்கம் முதலே தொடர் இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. முதல் இன்னிங்ஸ் : வங்கதேச அணியில் களமிறங்கிய சௌம்யா சர்க்கார், நஜ்முல் ஹுசைன், முஸ்தாபீர் ரஹீம், தன்சிம் ஹசன் சாஹிப் ஆகியோர் டக் அவுட் ஆகினர். மிராஜ் 5 ரன்களிலும், […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ரிஷப் பண்டிற்கு பதிலாக குல்தீப், ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்க தேச அணி, முதல் 10 பந்துகளிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் வங்கதேச […]
சென்னை : பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் இனி Go Back மோடி என சொல்ல மாட்டோம் Get Out மோடி என்று தான் சொல்வோம் என மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என குறிப்பிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னதாக ஒரு கூட்டத்தில் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு நேற்று கரூரில் நடந்த பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். Get Out மோடி : […]
நியூயார்க் : மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது புதியதாக குவாண்டம் கம்பியூட்டிங் சிப்-ஐ அறிமுகம் செய்தது. குவாண்டம் கம்ப்யூட்டர் என்பது நாம் சாதாரணமாக பயன்படுத்தும் கணினியை விட அதீத திறன் கொண்ட , நம்பத்தகாத பணிகளை செய்யும்படி உருவாக்கப்பட்ட கணினி வகைகள் ஆகும். அதில் பயன்படுத்தப்படும் வகையில் அதற்கென பிரத்யேகமாக குவாண்டம் கம்பியூட்டிங் சிப்-ஆன மஜோரானா 1-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த மஜோரானா 1 குவாண்டம் சிப்பானது டோபோலாஜிக்கல் கோர் கட்டமைப்பால் இயக்கப்படும் உலகின் முதல் குவாண்டம் சிப் […]
கராச்சி : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி எதிர்கொண்டு விளையாடியது. கராச்சி மைதானத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அனியின் தொடக்க வீரர் வில் யங் 107 ரன்கள் விளாசி, சாம்பியன்ஸ் டிராபி 2025-ன் முதல் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தினார். டெவன் கான்வே 10 […]
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றி 27 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. பிப்ரவரி 8ஆம் தேதியே ரிசல்ட் வெளியாகி இருந்தாலும், இன்று வரை அம்மாநில முதலமைச்சர் யார் என்பது தெரியாமல் இருந்தது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் முடிந்த பிறகு இதற்கான ஆலோசனை இருக்கும் என கூறப்பட்டிருந்தது. அதேபோல, இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் […]
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபிக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இன்று முதல் தொடங்கியுள்ளன. முதல் போட்டியில் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இப்போட்டி கராச்சி மைதானத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அனியின் தொடக்க வீரர் வில் யங் 113 பந்துகளை […]