உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. 10 மாவட்டங்களில் கனமழை!

தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

Weatherforecast

சென்னை :தென்மேற்கு வங்கக்கடலில் இன்னும் 4 நாட்களில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, நவம்பர் 21 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மேல் காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது.

அதன் தாக்கத்தால் தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாற வாய்ப்புள்ளது.

இது மேலும் வலுவடைந்து தமிழ்நாடு-இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புயலாக வலு பெறுமா? என்று இனி வரும் நாட்களில் தெரிய வரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

10 மாவட்டங்களில் கனமழை

இதனிடையே, தென் தமிழகம் மற்றும் அதளை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டய கீழடுக்கு சுழற்சி நிவலகிறது. இதன் காரணமாக, குமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும், நாகை மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.