சென்னை: தமிழ்நாடு அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால், 29 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. வாகனம் ஓட்டும் பொழுது, செல்போன் பேச கூடாது, மது அருந்த கூடாது என சாலை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. அவ்வாறு செய்வதினால், சில நேரங்களில் விபத்துகளும் நடக்கின்றன. ஆனால், அரசு பேருந்து ஓட்டுனர்கள் செல்போனை பார்த்தபடியும், அதில் தீவிரமாக பேசியபடியும் வாகனத்தை இயக்குவதாக பயணிகள் புகார்கள் அளித்திருந்த நிலையில், போக்குவரத்துத் துறை […]
திருச்சி : மாவட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பெயரிலான நூலகத்தை திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான நிர்வாக அனுமதியை முதல்வர் வழங்கியதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எக்ஸ் வலைத்தள பக்கதில் நன்றியும் தெரிவித்து இந்த திட்டத்திற்கான அரசு ஆணையையும் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் […]
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 13ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூரில் கனமழை பெய்யக்கூடும். நாளை மறுநாள், 11-ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகையில் மிக கனமழையும், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் […]
சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. அதன்படி, புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், அந்த நிவாரணத் தொகையை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் விநியோகம் நடப்பதாகவும் அரசு கூறியுள்ளது. இதில், வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட விழுப்புரத்தில் […]
திருவண்ணாமலை : ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த தொடர்மழையில் வ.உ.சி நகர் 11-வது தெருவில் நேற்று மாலை நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளன. மலையிலிருந்து உருண்டு வந்த சுமார் 40 டன் எடை கொண்ட பாறை விழுந்ததில், இரண்டு வீடுகள் சேதமடைந்தாக கூறப்படுகிறது. இதில், புதைந்த வீடுகளுக்குள் சிக்கிய 7 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம், புயல் கரையை கடந்த செய்தி ஆறுதலை தந்தாலும், மறுபுறம் விழுப்புரம், […]
சென்னை : தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் 47ஆவது பிறந்தநாள் இன்று. உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட அளவில் திமுகவினர் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும், பொதுமக்களுக்கு சில நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இந்நிலையில், முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு, தனது தந்தையான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது தாயரான துர்கா ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் […]
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதனால், தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், காற்றழுத்த தாழ்வு மையம் வடக்கு நோக்கி நகர்வதால் கடலோர மாவட்டங்களான சென்னை மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இன்று முதல் 4-5 நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார். […]
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும், நாளை கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 20 செ.மீட்டருக்கும் கூடுதலாக மழை பெய்யும் என்பதால், அதனை எதிர்கொள்ள […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் இன்னும் 4 நாட்களில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, நவம்பர் 21 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மேல் காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. அதன் தாக்கத்தால் தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த இரண்டு […]
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில், சென்னையில் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. எனவே, கனமழை வாய்ப்பு எத்தனை நாட்கள் சென்னைக்கு இருக்கிறது என மக்கள் அச்சத்துடன் வானிலை அறிவிப்பை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில், சென்னை மக்கள் கனமழை தொடர்பாக அச்சப்பட தேவையில்லை என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் […]
சென்னை : சமீபகாலமாக வெளியாகும் எந்த பெரிய படங்களுக்கும் அதிகாலை சிறப்புக் காட்சிகள் வழங்கத் தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. அதற்கு முக்கியமான காரணமே, கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே தினத்தில் வெளியான துணிவு – வாரிசு ஆகிய படங்கள் தான். இரண்டும் பெரிய நடிகர்களின் படம் என்பதால் 1 மணிக்குத் துணிவு படத்தின் திரைப்பட சிறப்புக் காட்சியும் அதிகாலை 4 மணிக்கு வாரிசு படச் சிறப்புக் காட்சிக்கும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அப்போது, […]
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பெருங்குடியில் 8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்கக்கடல், வட தமிழகத்தை நோக்கி நகர்ந்தது. இப்பொது, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, […]
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்கக்கடல், வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னையில் விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில், மழையின் தீவிரம் வேகமெடுத்து இருப்பதாக வானிலை ஆர்வலர் கூறியுள்ளார். இது குறித்து தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது, குறிப்பாக தென் சென்னையில் […]
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான “கங்குவா” படத்தில் சூர்யாவை தவிர நடிகை திஷா பதானி, ஜகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜி மாரிமுத்து, ரவி ராகவேந்திரா, கேஎஸ் ரவிக்குமார், ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா நடிபப்பில் உருவான இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நவ.14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில், இப்படம் திரையரங்குகளில் வெளியாக நாளை ஒரு மட்டுமே உள்ள நிலையில், […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்த 2 நாட்களில் தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும். மேலும், கனமழை முதல் மிக கனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து […]
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடமிருந்து ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுகள் குரூப் 2, குரூப் 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கூடுதலாக 213 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2,327 பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தற்போது மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2,540 ஆக அதிகரித்துள்ளது. கடந்த செப்.14- ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வுக்கு , 7.93 லட்சம் பேர் […]
சென்னை: வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அடிக்கடி பரவும் நோய்கள், குறிப்பாக டெங்கு, வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தவிர்க்க முடியாத நீர் தேக்கத்தின் காரணமாக அதிகரித்து வருகிறது. இந்த காலகட்டத்தில், டெங்கு பாதிப்பு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று கடலூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். அவர் இது குறித்து பேசுகையில், “பருவமழை காலங்களில் காய்ச்சல் பரவுவது இயல்புதான்.த மிழ்நாட்டில் 8 பேர் டெங்கு காய்ச்சலால் […]
சென்னை : எளிதில் அணுக முடியாத, போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 25 இரு சக்கர அவசர கால மருத்துவ வாகனங்கள் (Bike Ambulance) வாங்க ரூ.1.60 கோடி செலவில் வாங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இவ்வாகனங்கள் 108 அவசரகால ஊர்திகளுக்கு இணைப்பு வாகனங்களாக (Feeder Ambulance) செயல்பட்டு, நோயாளிகளை மருத்துவமனைக்கு துரிதமாக அழைத்துச் செல்ல இயலும். மாநிலம் […]
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூர் மரகதம் கந்தசாமி மண்டபம் முன்பு புதிதாக வெண்கலத்தால் அமைக்கப்பட்ட முன்னாள் தமிழக முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவசிலையினை தமிழ்நாடு துணை முதலமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தற்போது திறந்து வைத்தார். சிலையை […]
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பிறகு மேடையில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது நாமக்கல் மாவட்டம் தான் எனவும் நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் சிலை அமைவது மிகவும் பொருத்தமானது எனவும் உறையற்றினார். தமிழ்நாட்டில் திமுகவின் மதிப்பு சரிந்து விட்டதாக முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்தும் முதலவர் ஸ்டாலின் […]