வெற்றி.. வெற்றி.. என தொடங்கும் தவெக கொள்கை விளக்கப் பாடல் வெளியீடு.!

பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்று தொடங்கிய கொள்கை பாடலில் துப்பார்க்கு துப்பாய என்ற திருக்குறள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

Tamilaga Vettri Kazhagam Ideology Song

விழுப்புரம் : தவெக பாடல் பிண்ணனியில் ஒலிக்க 100 அடி உயர‌ கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றினார் கட்சித்தலைவர் விஜய். இதனை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடல் மாநாட்டு மேடையில் வெளியிடப்பட்டது.

பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்று தொடங்கிய கொள்கை பாடலில் துப்பார்க்கு துப்பாய என்ற திருக்குறள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற நாடு என்ற கொள்கையை வலியுறுத்தி தவெக செயல்படும் என்றும் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் வழியில் நான் பயணிப்பேன் என விஜய் குரலும் இடம்பெற்றுள்ளது.

மேலும், ” தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டை உயர்த்தும் கழகம்” என்று கொள்கை விளக்கப் பாடலில் விஜய் வாய்ஸ் இடம்பெற்றுள்ளது. அதிலும், ‘நான் வர்றேன்’ என்று சொன்னது கவனத்தை ஈர்த்துள்ளது.

கொள்கை பாடல்

” புதியதோர் விதி ஒன்றை புதுமையாய் நாம் செய்வோம். புது தொடக்கம், யார் தடுக்கும், இனி நடை நடை என நடக்கும். போர் துவக்கம் யார் தடுத்தும், இனி நட நடவென நடக்கும். பறை முழங்கிட தரை நடுங்கிட தலைமுறை தலைநிமிர்த்தும்”.  இதோ பாடல்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்