சென்னை: அம்பேத்கரின் 68-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்றைய தினம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். நூலை விஜய் வெளியிட, அதனை ஆனந்த் டெல்டும்டே, ஓய்வு பெற்ற நீதிபதி சந்தூரு பெற்றுக்கொண்டனர். முன்னதாக, இந்த நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொள்வதாக கூறப்பட்டது. பின்னர் அவர் கலந்து […]
சென்னை : பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. முன்னதாக, கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், இறுதியில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் முதல் மாநில மாநாடு அண்மையில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள், நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 10 மணிக்கு […]
சென்னை : அக்-27ம் தேதி விழுப்புரம் விக்ரவாண்டியில் தவெகவின் முதல் மாநாடு மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று முடிவடைந்தது. மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் மற்றும் கட்சியின் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டது. அதைப்போல மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்களும் பெரிய அளவில் தொண்டர்களுக்கு மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில். மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்கள் அவர்களுடைய தொண்டர்களிடையே எவ்வளவு ஆதரவு பெற்று வந்ததோ அதே சமயம் அதற்கு எதிராக அரசியல் தலைவர்களிடம் எழுந்த கருத்துக்கள் பல விஜயின் பேச்சுக்கு எதிர்மறையான […]
சென்னை : கடந்த அக்-27ம் தேதி விழுப்புரம் விக்ரவாண்டியில் தவெகவின் முதல் மாநில மாநாடானது பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சகணக்கான தொண்டர்கள் பங்கேற்று தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். அந்த மாநாட்டில் விஜய் பேசியது தான் அடுத்த 2 நாளாக தமிழகத்தில் தவெகவின் முதல் மாநாடு தான் பேசுபொருளாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், மாநாடு முடிந்து 2 நாட்களுக்கு பிறகு விஜய் அவரது எக்ஸ் பக்கத்தில், தனது தவெக கட்சித் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து […]
சென்னை : விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக மாநாட்டில் திமுக குறித்து விஜய் பேசியதற்கு திமுக ஆதரவாளர்கள் எதிர்வினையாற்றி வருகிறனர். அதாவது, திமுக தான் அரசியல் எதிரி.. பாஜக கொள்கை எதிரி என விஜய் வெளிப்படையாக பேசியிருந்தார். மேலும், “திராவிட மாடல் என பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள், என்ன தான் மோடி மஸ்தான் வேலை செய்தாலும் ஒன்னும் நடக்கப்போவதில்லை. திராவிட மாடல் என்ற பெயரில், பெரியார், அண்ணா பெயரில் நம்மை சுரண்டி கொள்ளையடிக்கும் குடும்ப, சுயநல கூட்டம் தான் […]
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்ற தவெகவின் முதல் அரசியல் மாநாடு சில குறைபாடுகள் இருந்த போதிலும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மாநாட்டில் விஜய்யின் பேச்சு பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. அவரின் பேச்சு எளிமையாகவும், இளைஞர்களுக்கு புரியும் மொழியிலும் இருந்தது. தவெக கொள்கை விளக்க மாநாட்டில் விஜய்யின் பேச்சு மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, கடவுள் மறுப்பு தவிர்த்து பெரியாரின் மற்ற கொள்கைகளை ஏற்பதாக அறிவித்திருப்பது மக்களின் மனநிலையை அவர் அறிந்திருப்பதைக் காட்டுகிறது. இந்நிலையில், அரசியல் […]
விழுப்புரம் : த.வெ.க கட்சியானது 5 கொள்கை தலைவர்களாக பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில் அரசியல் அமைக்க உள்ளதாக கட்சித் தலைவர் விஜய் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “போராட்ட களத்தில் இறங்கி போராடிய ராணி வேலுநாச்சியார், பகுத்தறிவு தந்தை பெரியார, பச்சை தமிழன் காமராஜர், சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர், கர்ப்பவதியாக இருந்தும் போராடிய பெண் தெய்வம் அஞ்சலை அம்மாள் என்று கொள்கை தலைவர்களின் வழியில் அரசியல் அமைக்க உள்ளதாக […]
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் ஆரவாரத்துடன் நடைபெற்று வரும் தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், பாம்பு கதையடன் தனது உரையை தொடங்கியதோடு, கொக்கை விளக்கத்தையும் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், தன் மீதான விமர்சனம், ட்ரோல், தமிழகத்தில் நடக்கின்ற அரசியல் பற்றியும், திராவிடத்தை பற்றியும் பேசியிருக்கிறார். அத்துடன் தான் அரசியலுக்கு வந்தது ஏன்? என்கிற விளக்கத்தையும் அளித்திருக்கிறார். அரசியலுக்கு வந்தது ஏன்? “இந்த அரசியல் நமக்கு எதற்கு…? நடித்தோமா நாலு காசு பார்த்தோமா என்றுதான் ஆரம்பத்தில் […]
விழுப்புரம் : தவெக மாநாட்டு நிகழ்வுகள் ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. கட்சியின் கொள்கை பிரகடனம் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது தலைவர் விஜய்யை உரையாற்ற மேடைக்கு அழைக்கப்பட்டார். ஆனால், நேரே அவர் மைக் முன் செல்லாமல், மேடைக்கு கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்த பெற்றோர் சந்திரசேகர் – ஷோபாவிடம் சென்று கட்டி அணைத்து ஆசிபெற்றார். பின் மேடைக்கு திரும்பிய அவர் அதிரடியாக பேசத் தொடங்கியுள்ளார். மேடையில் பேச தொடங்கிய விஜய், “பாம்பு தான் அரசியல், பாம்பாக இருந்தாலும் பயமில்லை என்பதுதான் […]
விழுப்புரம் : தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடானது தற்போது பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு வருகை தந்த கட்சி தலைவர் விஜய் கொடியேற்றி மாநாட்டைத் தொடங்கினார். அதன்பிறகு, கட்சியின் இரண்டாவது பாடலும் மாநாட்டில் வைத்து வெளியிடப்பட்டது. இந்த பாடல் தொண்டர்கள் வேண்டுகோளுக்கு இணங்க 2 முறை மாநாட்டில் ஒலிக்கப்பட்டது. பாடலில் இடம்பெற்ற வரிகள் அனைத்தும் தொண்டர்களுக்கு உணர்வுப்பூர்வமாக இருந்தது என்றே சொல்லலாம். ஏற்கனவே, மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு காமராஜர், அம்பேத்கார், பெரியார், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோருடைய […]
விழுப்புரம் : தவெக பாடல் பிண்ணனியில் ஒலிக்க 100 அடி உயர கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றினார் கட்சித்தலைவர் விஜய். இதனை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடல் மாநாட்டு மேடையில் வெளியிடப்பட்டது. பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்று தொடங்கிய கொள்கை பாடலில் துப்பார்க்கு துப்பாய என்ற திருக்குறள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற நாடு என்ற கொள்கையை வலியுறுத்தி தவெக செயல்படும் என்றும் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் வழியில் நான் பயணிப்பேன் […]
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டில் இதுவரை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மேற்கொள்ளாத ஏற்பாடுகள் தவெக மாநாட்டில் மிகவும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு தொடக்கம் முதல் இறுதி வரை முழுக்க முழுக்க கொள்கையை மையப்படுத்தியே அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாநாட்டில் தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் […]
விழுப்புரம் : தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற அக்டோபர் 27 தேதி நடைபெற இருக்கும் சூழ்நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார். இன்றைய தினம், மாநாடு வேலை நடந்து வரும் இடத்தில் இருந்த, அரசமரத்தடி பிள்ளையாரை வழிபட்டு, சூரத்தேங்காய் உடைத்து அதன்பின் விக்கிரவாண்டி வி.சாலை மாநாட்டு பணிகளை பார்வையிட்டார் த.வெ.க பொதுச்செயலாளர் என்.ஆனந்த். பின்னர், கையில் குடையுடன் ஆனந்த், மாநாடுக்கான பணிகளை ஆய்வு மேற்கொண்டார். […]
சென்னை : மெரீனா கடற்கரையில் நேற்று நடைபெற்ற விமானப் படையின் 92-ஆவது ஆண்டு விழா சாகச் நிகழ்ச்சியைப் பார்வையிட வந்தவர்களில் ஐந்து பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 7 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான […]
சென்னை : இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் “தளபதி 69” படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கடந்த 2 தினங்களாக படக்குழு தளபதி 69-ல் நடிக்கக்கூடிய நடிகர்களின் போஸ்ட்டர்களை வரிசையாக வெளியிட்டு வருகின்றனர். தளபதி 69 நடிகர்கள் குழுமம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது. படம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத மாதிரியும் தெரிகிறது. விஜய் கடைசி படம் என்பதால், லிஸ்ட் ரொம்ப பெரிசாகவே போகிறது. அட ஆமாங்க… ஏற்கெனவே, இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, […]
சென்னை : இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி வெளியான ‘G.O.A.T’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் அதிகப்படியான வசூலை ஈட்டிய இப்படத்தின் OTT பிளாட்ஃபார்ம் Netflix-ல் விரைவில் வெளியிடப்படும் என கூறப்பட்டது. அதன்படி, நாளை மறுநாள் (அக்டோபர் 3 ஆம் தேதி) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், முதலில் […]
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது. நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், […]
சென்னை : விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. முன்னதாக, கடைசியாக ஒரு படத்தில் நடித்து விட்டு சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாக விஜய் அறிவித்தார். தற்போது, விஜய்யின் கடைசி படத்தை எச்.வினோத் இயக்குவது உறுதியாகி உள்ளது. இது விஜய்க்கு 69-வது படம். இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் விவரம் மற்றும் இந்த படத்தில் விஜய் பெறக்கூடிய சம்பளம் விவரங்கள் தகவல்கள் […]
சென்னை : தளபதி விஜய்யின் கடைசிப் படமான தற்காலிகமாக ‘தளபதி 69’ என்று பெயரிடப்பட்ட படத்தின் அப்டேட் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தி கோட’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலக பாக்ஸ் ஆபிஸில் 400 கோடியை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே, விஜய் தனது ‘தளபதி 69’ படம் குறித்த அப்டேட் குறித்து பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக […]
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் மாதத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, விக்கிரவாண்டியில் தவெக மாநாடு இம்மாதம் 22ம் தேதி நடக்கலாம் எனக் கூறிய நிலையில், 23ஆம் தேதி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும், குறுகிய காலமாக இருப்பதால் தேதி மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மாநாடு தேதி குறித்த தகவலை விஜய் இன்று அறிவிப்பார் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, செப்டம்பர் 23இல் மாநாடு […]