சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக் கொள்கை மாநாட்டிற்கு திடல் மற்றும் பார்க்கிங்காக நிலம் தந்த விவசாயிகளை அழைத்து நன்றி கூறும் வகையில் விருந்தும் வழங்கிட தவெக தலைவர் விஜய் ஏற்பாடு செய்திருக்கிறார். சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அட ஆமாங்க.. தவெக மாநாட்டுக்காக பார்க்கிங் மற்றும் மாநாட்டு திடலுக்காக […]
சென்னை : முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு நேரில் சென்று தங்களுடைய மரியாதையை செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்ட பலரும் தங்களுடைய மரியாதையை செலுத்தி இருந்தார்கள். அந்த வகையில், த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது மரியாதையை செலுத்தியுள்ளார். அதில் ” அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் […]
சென்னை : கடந்த அக்-27ம் தேதி தவெக முதல் மாநில மாநாடானது பிரம்மாண்டமாக விக்கிரவாண்டி, வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு யானை சின்னம் பொறிக்கப்பட்ட வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது. அந்த வாள், சோழர் காலத்தில் போர் வீரர்கள் பயன்படுத்திய வாளை போன்று, அதாவது அந்த வாள் சோழர்களின் வாளின் வடிவமைப்பை போல உருவாக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. விஜய்க்கு அளிக்கப்பட்ட இந்த பரிசு வாள், தஞ்சை மாவட்டம் சுவாமி மலையில் உள்ள தேசிய […]
சென்னை : நடந்து முடிந்த த.வெ.க மாநாட்டில் அக்கட்சி தலைவர் விஜய் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என தொடங்கி, பிளவுவாத அரசியல், ஊழல்வாத அரசியல் தனது எதிரிகள் எனவும், திராவிட மாடல் அரசு என மக்களை ஏமாற்றுகின்றனர் என நேரடி விமர்சனங்களை முன் வைத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. விஜயின் பேச்சுக்கு திமுகவை சேர்ந்த தலைவர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை […]
திண்டுக்கல் : த.வெ மாநாட்டில் விஜய் திமுகவை நேரடியாக விமர்சித்துப் பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பாசிசம்னா, நீங்க என்ன பாயாசமா.? நீங்களும் அவர்களுக்கு ஒன்னும் சளச்சவங்க இல்ல என திமுக அரசை நேரடியாகவும், பாஜகவை மறைமுகமாகவும் விமர்சித்துப் பேசியிருந்தார். எனவே, விஜய் பேசிய விஷயத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் , திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலரும் எதிர்மறையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்கள். அவர்களை […]
கிருஷ்ணகிரி : விக்கிரவாண்டி வி.சாலையில் விஜய் நடத்திய பிரமாண்ட த.வெ.க மாநாட்டை பார்ப்பதற்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்திருந்தார்கள். அதில் ஒருவர் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரன். இவர் மாநாட்டில் கலந்து கொள்ள அந்த மாவட்டத்தில் இருந்து மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் வந்த வேனில் வருகை தந்துள்ளார். பிறகு மாநாடு நடந்து முடிந்தபின் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் எந்த இடத்தில் தாங்கள் வந்த வேன் பார்க்கிங் செய்யப்பட்டது என்பது தெரியாமல் காணாமல் போகியுள்ளார். தன்னுடைய […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27-ஆம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெற்று முடிவடைந்தது. மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசிய பல விஷயங்களும் அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் பேசுபொருளாகவும் மாறியிருக்கிறது. குறிப்பாக, அவர்கள் பாசிசம்னா, நீங்க என்ன பாயாசமா.? நீங்களும் அவர்களுக்கு ஒன்னும் சளச்சவங்க இல்ல என திமுக அரசை நேரடியாகவும், பாஜகவை மறைமுகமாகவும் விமர்சித்துப் பேசியிருந்தார். Read More- “அவங்க பாசிசம்னா., நீங்க பாயாசமா.?” திமுகவை […]
சென்னை : தவெக மாநாடு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள அதே சமயத்தில், அதிக விமர்சனங்களையும் ஈர்த்து வருகிறது. அது மட்டுமின்றி, விஜய் மாநாடு குறித்து தமிழக அரசியல் வட்டாரத்திலும், கோலிவுட்டிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருவதாக தெரிகிறது. அந்த வகையில், விஜய்யின் பேச்சை, திமுக ஆதரவாளரும் நடிகருமான போஸ் வெங்கட் கிண்டல் செய்துள்ளார். அவரது தனது எக்ஸ் தள பதிவில், “யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும். பாவம் அரசியல். பள்ளிக்கூட ஒப்பிப்பு. சினிமா நடிப்பு மற்றும் அதீத […]
சென்னை : திரைத்துறையில் உச்சத்தில் இருந்த நடிகர் விஜய், அடுத்தடுத்த படங்களில் எவ்வளவு அதிகமாக ஊதியம் கேட்டாலும் தயாரிப்பாளர்கள் கொடுக்க தயாராக இருந்த சூழலிலும், அதனை முழுதாக விடுத்து இனி நடிப்பு வேண்டாம்., முழுநேர அரசியல் மட்டுமே என களம் கண்டிருக்கிறார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். மேடை அரசியல் பேச்சுக்கள் பல கண்டாலும் , நேரடி கள அரசியலில் முதற்படி, முதல் மாநாடு , லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகை இதனை வெற்றிகரமாக செயல்படுத்தி, தான் […]
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்ற தவெகவின் முதல் அரசியல் மாநாடு சில குறைபாடுகள் இருந்த போதிலும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மாநாட்டில் விஜய்யின் பேச்சு பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. அவரின் பேச்சு எளிமையாகவும், இளைஞர்களுக்கு புரியும் மொழியிலும் இருந்தது. தவெக கொள்கை விளக்க மாநாட்டில் விஜய்யின் பேச்சு மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, கடவுள் மறுப்பு தவிர்த்து பெரியாரின் மற்ற கொள்கைகளை ஏற்பதாக அறிவித்திருப்பது மக்களின் மனநிலையை அவர் அறிந்திருப்பதைக் காட்டுகிறது. இந்நிலையில், அரசியல் […]
சென்னை : நேற்று விக்கிரவாண்டியில் தவெக முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 13 லட்சம் பேர் கலந்து கொண்டனர் என தகவல் வெளியானது. எதிர்பார்த்ததை விட அதிகளவு கூட்டம் கூடியதால் மாநாட்டை முன்கூட்டியே தொடங்கி நடத்தினர். இந்த மாநாட்டில் காலை முதலே தொண்டர்கள் காத்திருந்த்தால் கடும் வெயில் தாக்கம் காரணமாக சிலர் அங்கங்கே மயங்கி விழும் நிலையும் ஏற்பட்டது. சென்னை கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த சார்லஸ் என்பவர் மாநாட்டு திடலில் மயங்கி விழுந்தார். அவருக்கு முதலுதவி […]
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வெற்றிகரமாக நிறைவுபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் 13 லட்சம் பேர் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று அதிகாலை முதலே தொண்டர்கள் வருகை அதிகமாகி நண்பகலில் கூட்டம் இன்னும் அதிகரிக்கவே, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மாநாடு தொடங்கியது. கிராமிய கலைகளுடன் தவெக முதல் மாநில மாநாடு தொடங்கியது. முதன் முதலாக பரை இசையுடன் மாநாடு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. விஜயின் வருகையை எதிர்நோக்கி […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட த.வெ.க தலைவர் விஜய் ” மக்கள் விரோத ஆட்சிய திராவிட மாடல் அரசுனு சொல்லிட்டு மக்களை ஏமாத்துறீங்க. எங்களுக்கு எந்த சாயமும் நீங்க பூச வேண்டாம். நாங்க ஏற்கனவே எங்களுக்கு ஒரு கலர் கொடுத்திருக்கோம். ஏ.பி, சி.டி டீம்னு எங்க மேல அவதூறு பரப்ப முடியாது. திராவிட மாடல்னு சொல்லி., தந்தை பெரியார், அறிஞர் […]
விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடானது இன்று வெற்றிகரமாக விக்கிரவாண்டி, வி.சாலையில் நடைபெற்றது. இந்த முதல் மாநில மாநாடு அறிவிப்பு வெளியானது முதல், விஜய் அரசியலில் பங்கேற்கப் போகும் முதல் விழா என்பதால் அவர் என்ன பேசுவார்? அவரது கட்சிக் கொள்கைகள் என்னென்ன? என்பது தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் பேச்சாகவும் இருந்து வந்தது. அதே போல, கட்சித் தொடங்கிய நாள் முதல், அவர் யாருடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் காண்பார்? என்ற கேள்வியும் […]
விழுப்புரம் : த.வெ.க மாநாடு இன்று நடைபெறுவதை முன்னிட்டு இந்த அளவுக்கு கூட்டம் வருமா? என பலரையும் வியக்க வைக்கும் வண்ணம் தவெக தொண்டர்கள் கூட்டம் இன்றுஅலைமோதியது. இன்று அதிகாலை முதலே பலரும் கூட்டம் கூட்டமாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்தனர். காலை 9 மணி நிலவரப்படி 1.50 லட்சம் மக்கள் கூடியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத்தொடர்ந்து மாநாடு நடைபெறும் நேரம் நெருங்க நெருங்கமாநாட்டிற்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டிருந்தது. குறிப்பாக, மாநாடு தொடங்கியவுடன் காவலர்கள் கொடுத்த […]
விழுப்புரம் : ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ கட்சித் தொடங்கி அதன் கொடி அறிவிக்கப்பட்டது முதல், அதற்கான விளக்கத்தை மக்கள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் என பலரும் இணையத்தில் அவர்களது கருத்தை தெரிவித்து வந்தனர். மேலும், அதற்கான விளக்கத்தை முதல் மாநாட்டில் விளக்கிக் கூறுவேன் என சமீபத்தில் நடைபெற்ற தவெக கல்விப் பரிசு வழங்கும் விழாவில் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று தவெகவின் முதல் மாநாடானது நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது, கொடிக்கான விளக்கத்தை மேடையில் […]
விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தவெக கட்சித் தலைவர் விஜய் மிக ஆவேசமாக தனது முதல் அரசியல் உரையை பேசி முடித்தார். அப்போது மதவாத பிளவுவாத அரசு பாசிச அரசு என பாஜகவையும், முகமூடி அரசு என ஆளும் திமுக அரசையும் மறைமுகமாகவும், நேரடியாகவும் கடுமையாக விமர்சனம் செய்தார். விஜய் பேசுகையில், “மதவாத அரசியல் பேசுறவங்கல நாம கண்டுபிடிச்சிறலாம். ஆனால்., ஊழல் […]
விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடானது விழுப்புரத்தில் உள்ள வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், செயல்திறன்களை மேடையில் அறிவித்தனர். அதன்பின், இறுதியாக தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். அதில், தான் அரசியலுக்கு வந்த காரணம், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த காரணம் என அனைத்தையும் விளக்கி கூறினார். அதன் பிறகு, வீடியோவாக தவெக கட்சியின் பெயர் விளக்கத்தை கூறியிருந்தார் விஜய். தவெக பெயர் காரணம் : தமிழக […]
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் ஆரவாரத்துடன் நடைபெற்று வரும் தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், பாம்பு கதையடன் தனது உரையை தொடங்கியதோடு, கொக்கை விளக்கத்தையும் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், தன் மீதான விமர்சனம், ட்ரோல், தமிழகத்தில் நடக்கின்ற அரசியல் பற்றியும், திராவிடத்தை பற்றியும் பேசியிருக்கிறார். அத்துடன் தான் அரசியலுக்கு வந்தது ஏன்? என்கிற விளக்கத்தையும் அளித்திருக்கிறார். அரசியலுக்கு வந்தது ஏன்? “இந்த அரசியல் நமக்கு எதற்கு…? நடித்தோமா நாலு காசு பார்த்தோமா என்றுதான் ஆரம்பத்தில் […]
விழுப்புரம் : தவெக மாநாட்டு நிகழ்வுகள் ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. கட்சியின் கொள்கை பிரகடனம் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது தலைவர் விஜய்யை உரையாற்ற மேடைக்கு அழைக்கப்பட்டார். ஆனால், நேரே அவர் மைக் முன் செல்லாமல், மேடைக்கு கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்த பெற்றோர் சந்திரசேகர் – ஷோபாவிடம் சென்று கட்டி அணைத்து ஆசிபெற்றார். பின் மேடைக்கு திரும்பிய அவர் அதிரடியாக பேசத் தொடங்கியுள்ளார். மேடையில் பேச தொடங்கிய விஜய், “பாம்பு தான் அரசியல், பாம்பாக இருந்தாலும் பயமில்லை என்பதுதான் […]