அடுத்த 7 நாட்கள் வானிலை இப்படி தான் இருக்கும்! ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Hero Image

சென்னை : நேற்று (05-07-2026) வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா–மேற்கு வங்கக்கடல் கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா கடலோர பகுதிகளை பாலசோர் பகுதிகளுக்கு அருகில் 1430 மணி அளவில் கரையை கடந்தது.

06-07-2026 முதல் 08-07-2026 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

09-07-2026 முதல் 12-07-2026 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:

06-07-2026 மற்றும் 07-07-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றமின்றி காணப்படக் கூடும், எனினும் சற்று உயரக்கூடும்.

08-07-2026 முதல் 10-07-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றமின்றி காணப்படக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (06-07-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38–39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28–29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (07-07-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37–38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28–29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 7 நாட்கள் வானிலை இப்படி தான் இருக்கும்! ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!