விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூர் மரகதம் கந்தசாமி மண்டபம் முன்பு புதிதாக வெண்கலத்தால் அமைக்கப்பட்ட முன்னாள் தமிழக முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவசிலையினை தமிழ்நாடு துணை முதலமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தற்போது திறந்து வைத்தார். சிலையை […]
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் ஆரவாரத்துடன் நடைபெற்று வரும் தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், பாம்பு கதையடன் தனது உரையை தொடங்கியதோடு, கொக்கை விளக்கத்தையும் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், தன் மீதான விமர்சனம், ட்ரோல், தமிழகத்தில் நடக்கின்ற அரசியல் பற்றியும், திராவிடத்தை பற்றியும் பேசியிருக்கிறார். அத்துடன் தான் அரசியலுக்கு வந்தது ஏன்? என்கிற விளக்கத்தையும் அளித்திருக்கிறார். அரசியலுக்கு வந்தது ஏன்? “இந்த அரசியல் நமக்கு எதற்கு…? நடித்தோமா நாலு காசு பார்த்தோமா என்றுதான் ஆரம்பத்தில் […]
விழுப்புரம் : தவெக மாநாட்டு நிகழ்வுகள் ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. கட்சியின் கொள்கை பிரகடனம் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது தலைவர் விஜய்யை உரையாற்ற மேடைக்கு அழைக்கப்பட்டார். ஆனால், நேரே அவர் மைக் முன் செல்லாமல், மேடைக்கு கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்த பெற்றோர் சந்திரசேகர் – ஷோபாவிடம் சென்று கட்டி அணைத்து ஆசிபெற்றார். பின் மேடைக்கு திரும்பிய அவர் அதிரடியாக பேசத் தொடங்கியுள்ளார். மேடையில் பேச தொடங்கிய விஜய், “பாம்பு தான் அரசியல், பாம்பாக இருந்தாலும் பயமில்லை என்பதுதான் […]
விழுப்புரம் : தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடானது தற்போது பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு வருகை தந்த கட்சி தலைவர் விஜய் கொடியேற்றி மாநாட்டைத் தொடங்கினார். அதன்பிறகு, கட்சியின் இரண்டாவது பாடலும் மாநாட்டில் வைத்து வெளியிடப்பட்டது. இந்த பாடல் தொண்டர்கள் வேண்டுகோளுக்கு இணங்க 2 முறை மாநாட்டில் ஒலிக்கப்பட்டது. பாடலில் இடம்பெற்ற வரிகள் அனைத்தும் தொண்டர்களுக்கு உணர்வுப்பூர்வமாக இருந்தது என்றே சொல்லலாம். ஏற்கனவே, மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு காமராஜர், அம்பேத்கார், பெரியார், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோருடைய […]
விழுப்புரம் : தவெக பாடல் பிண்ணனியில் ஒலிக்க 100 அடி உயர கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றினார் கட்சித்தலைவர் விஜய். இதனை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடல் மாநாட்டு மேடையில் வெளியிடப்பட்டது. பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்று தொடங்கிய கொள்கை பாடலில் துப்பார்க்கு துப்பாய என்ற திருக்குறள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற நாடு என்ற கொள்கையை வலியுறுத்தி தவெக செயல்படும் என்றும் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் வழியில் நான் பயணிப்பேன் […]
தூத்துக்குடி : த.வெ.க தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் கட்சியின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக கட்சியின் பொதுச்செயலாளர் N. ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்) தலைமையில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் அந்த மாவட்டங்களின் பொறுப்பாளர் தலைமையில் மாநாட்டுக்கு தொண்டர்கள் கிளம்பி இருக்கிறார்கள். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா அக்னல் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட தொண்டர்கள் பலரும் அக்டோபர் 26 சனிக்கிழமை […]
விழுப்புரம் : தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நாளை பிரமாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டுக்கு வருகை தருபவர்களுக்கு வாகனம் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும், அவர்கள் அமர நாற்காலிகள் போடும் ஏற்பாடுகள் மற்றும் குடிக்க குடிநீர் வசதிகள் என முக்கியமான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மாநாட்டு திடலில் பொதுமக்கள் அமர 50,000 இருக்கைகள் உள்ளது. கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்க 48 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கூட்டம் அதிகரித்தால் வெளியே நின்று காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக […]
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டில் இதுவரை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மேற்கொள்ளாத ஏற்பாடுகள் தவெக மாநாட்டில் மிகவும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு தொடக்கம் முதல் இறுதி வரை முழுக்க முழுக்க கொள்கையை மையப்படுத்தியே அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாநாட்டில் தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் […]
விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் நிலையில், மாநாடுக்கு வருகை தருபவர்கள் வாகனம் நிறுத்தும் இடம் முதல் குடிக்கத் தண்ணீர் வழங்கும் வரை எப்படி எப்படி இருந்தால் அவர்களுக்குச் சிரமம் இல்லாமல் இருக்கும் என்பதை யோசித்து அதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இன்று மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் நந்தகுமார் மாநாடு நடைபெறும் இடத்தில் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். கொடுத்த விதிமுறைகளைச் சரியாகப் […]
விழுப்புரம் : விஜய்யின் தவெக மாநாட்டுக்கு இன்னும் 2 தினங்களே உள்ளன. நாளை மறுநாள் (27)-ஆம் தேதி விழுப்புரம் விக்ரவாண்டியை அடுத்து விசாலையில் அக்கட்சி தலைவர் விஜய் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தவிருக்கிறார். இந்நிலையில், விக்கிரவாண்டியே விழாக்கோலம் பூண்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, மாநாடு நடைபெறும் இடத்தில் பெரியார், அம்பேத்கர், காமராஜரின் கட் அவுட்டுகள் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கின்றன. அவர்களுக்கு நடுவே விஜய் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க, மற்றொரு பிரம்மாண்டத்தை உருவாக்கி வருகின்றனர். அட ஆமாங்க.. […]
விக்ரவாண்டி : த.வெ.க கட்சியின் முதல் மாநாடு நாளை மறுநாள் விழுப்புரம் விக்ரவாண்டியை அடுத்து விசாலையில் உள்ள பிரமாண்ட இடத்தில் நடைபெறுகிறது. மாநாடு நாள் நெருங்கியுள்ள காரணத்தால் இப்போதே பல மாவட்டங்களில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்திற்கு மக்கள் கிளம்பு தயாராகி வருகிறார்கள். மாநாடு நடைபெறும் ஏற்பாடுகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் , விஜய் தனது தொண்டர்களை பார்க்க அந்த அளவுக்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறார் என்பது குறித்து நெகிழ்ச்சியாக கடிதம் ஒன்றை எழுதி அதனை அறிக்கையாக […]
விக்ரவாண்டி : த.வெ.க கட்சியின் முதல் மாநாடு நடைபெறும் நாள் நெருங்கியுள்ள நிலையில், தமிழகத்தினுடைய கண் அனைத்தும் மாநாடை நோக்கி தான் இருக்கிறது. நாளை மறுநாள் (27)-ஆம் தேதி விழுப்புரம் விக்ரவாண்டியை எடுத்து விசாலையில் அக்கட்சி தலைவர் விஜய் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தவிருக்கிறார். கட்சியின் தொண்டர்கள் அனைவரும் விஜயின் பேச்சு மற்றும் கட்சியின் கொள்கை என்னவென்ன என்பதை கேட்க ஆர்வத்துடன் காத்துள்ளனர். இந்நிலையில், மாநாடு நடைபெறுவதையொட்டி அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எப்படி எப்படி வேலை […]
விழுப்புரம் : தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற அக்டோபர் 27 தேதி நடைபெற இருக்கும் சூழ்நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார். இன்றைய தினம், மாநாடு வேலை நடந்து வரும் இடத்தில் இருந்த, அரசமரத்தடி பிள்ளையாரை வழிபட்டு, சூரத்தேங்காய் உடைத்து அதன்பின் விக்கிரவாண்டி வி.சாலை மாநாட்டு பணிகளை பார்வையிட்டார் த.வெ.க பொதுச்செயலாளர் என்.ஆனந்த். பின்னர், கையில் குடையுடன் ஆனந்த், மாநாடுக்கான பணிகளை ஆய்வு மேற்கொண்டார். […]
விக்கிரவாண்டி : அரசியலில் அடுத்த நகர்வாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த அக்கட்சி தலைவர் விஜய் முடிவெடுத்துள்ளார். அதற்கான, ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடைபெற்றுக்கொண்டுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி மாநாடு நடத்த அனுமதிக்கோரி கட்சியின், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகஸ்ட் 28-ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்கான மனுவை வழங்கி இருந்தார். காவல்துறை வைத்த முக்கிய கேள்விகள் மாநாடு நடத்துவதற்கு முன்பே மக்களின் பாதுகாப்புகளை கருதி […]
விக்கிரவாண்டி : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி நடத்த அனுமதிக்கோரி கட்சியின், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகஸ்ட் 28-ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்கான மனுவை வழங்கி இருந்தார். இதனையடுத்து, மாநாடு நடத்துவதற்கு முன்பே மக்களின் பாதுகாப்புகளை கருதி காவல்துறை சார்பில் இருந்து 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸ் ஒன்று த.வெ.கட்சிக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதில் மிகவும் முக்கிய கேள்வியாக ‘மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள்? […]
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சிக் கொடி அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அடுத்த அரசியல் நகர்வாக கட்சியின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார். த.வெ.க கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறவுள்ள விஷயம் அனைவருக்கும் தெரிந்தது தான். இது தொடர்பாக கடந்த, ஆகஸ்ட் 28-ஆம் தேதி கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாடு நடத்த அனுமதிக்கேட்டு, விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்கான மனுவை வழங்கி இருந்தார். முன்னதாக, செப்டம்பர் […]
விக்கிரவாண்டி : த.வெ.க மாநாடு நடத்த அனுமதிக்கோரி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் கட்சி சார்பில் மனுகொடுக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி மற்றும் கட்சி பாடலை கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி விஜய் அறிமுகம் செய்து வைத்ததை தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் முதல் மாநாடு எங்கு எப்போது நடைபெறும் என்பதற்காக தான் காத்திருக்கிறார்கள். ஏனென்றால், கட்சியின் கொடி அறிமுக விழாவில் விஜய் குறைவான நேரம் மட்டுமே பேசினார். எனவே, பேச வேண்டிய பல விஷயங்களை கட்சியின் முதல் மாநாட்டில் பேசுவார் […]
விழுப்புரம் : விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இப்பொழுது, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி சட்டப்பேரவை இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே மக்கள் ஆர்வமுடன் விறுவிறுப்பாக வாக்களித்து வருகிறார்கள். இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில் 1.84 லட்சம் மாலை 5 மணி நிலவரப்படி பேர் வாக்களித்துள்ளனர். 276 […]
விழுப்புரம் : கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தியே உலுக்கி இருக்கும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அடுத்த அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் இருந்து வாங்கிவரப்பட்ட சாராயத்தை குடித்த 7 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகி […]
விழுப்புரம் : நீண்ட நாள்களாகவே அரசியலுக்கு வருவேன் எனக் கூறிக்கொண்டிருந்த நடிகர் தாடி பாலாஜி, மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன் எனக் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் அரசமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்று வருகின்றனர். இந்த பள்ளியில் நடிகர் தாடி பாலாஜி, 12 ஆயிரம் மதிப்பிலான இரும்பு பீரோ ஒன்றினை பரிசாக வழங்கினார். பின்னர், அங்கு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “என்னால் முடிந்ததை பள்ளிக்கு செய்தேன், அரசுப்பள்ளிகள் தற்போது சிறப்பான பள்ளிகளாக […]