சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாடு பிரமாண்டமாக நடத்தவேண்டும் என்பதால் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுப் பலத்த ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு திருவிழா போல நடைபெற்றது என்றே சொல்லலாம். இந்த மாநாடு நடத்துவதற்கு அந்த பகுதியில் நிலம் வைத்திருந்த விவசாயிகள் மற்றும் சிலர் அனுமதி கேட்கப்பட்டு அவர்கள் அனுமதி வழங்கிய பிறகு தான் மாநாடும் நடைபெற்றது. எனவே, […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் சுமார் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் விவசாய நிலங்களும் அடங்கும். அதனை மாநாட்டிற்கு பயன்படுத்திவிட்டு மீண்டும் விவசாய பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல ஏற்பாடு செய்து கொடுப்ப்பதாகவும் த.வெ.க சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து , அண்மையில், நிலம் வழங்கிய அப்பகுதி விவசாயிக்கு […]
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் தனது கட்சி கொள்கை மற்றும் அரசியல் நிலவரம் என பல்வேறு கருத்துக்களை கூறினார். இந்த மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் சுமார் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் விவசாய நிலங்களும் அடங்கும். அதனை மாநாட்டிற்கு பயன்படுத்திவிட்டு மீண்டும் விவசாய […]
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் நீண்ட நேரம் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், விஜய்யின் அரசியல் வருகை சீமானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர் ரஜினியை சந்தித்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல், 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆயத்தமான ரஜினிகாந்தை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு […]
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் கட்சி ஆரம்பித்து தனது முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27இல் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். இதுவரை திரையில் கண்ட தங்கள் ஆஸ்தான ஹீரோவை கட்சித் தலைவராக காண மாநாட்டிற்கு ரசிகர்கள் தொண்டர்களாக வெள்ளம் போல திரண்டனர். சுமார் 13 லட்சம் பேர் தவெக முதல் மாநாட்டில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாநாட்டில் விஜய் பேசிய திராவிடம், […]
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக் கொள்கை மாநாட்டிற்கு திடல் மற்றும் பார்க்கிங்காக நிலம் தந்த விவசாயிகளை அழைத்து நன்றி கூறும் வகையில் விருந்தும் வழங்கிட தவெக தலைவர் விஜய் ஏற்பாடு செய்திருக்கிறார். சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அட ஆமாங்க.. தவெக மாநாட்டுக்காக பார்க்கிங் மற்றும் மாநாட்டு திடலுக்காக […]
சென்னை : விஜய் கட்சி தொடங்குவதாக அறிவித்ததிலிருந்து தன்னுடைய தம்பி..தம்பி என ஆதரவு தெரிவித்து வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் த.வெ.க மாநாட்டுக்குப் பிறகு விஜய்யைத் தாக்கி பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, நேற்று விஜய் மாநாட்டில் வைத்திருந்த வேலுநாச்சியார் கட்அவுட் நான் வரைந்தது…நான் வரலன்னா வேலுநாச்சியார் யார் என்று தெரிந்திருக்காது. வேலு நாச்சியார் வரலாறு தெரியுமா என்று விஜய்யை நோக்கி கேள்வியையும் எழுப்பி…கை குழந்தையை உப்புமூட்டை போல தோளில் […]
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய் , தேசியமும் திராவிடமும் தவெக கொள்கை என்றும், தந்தை பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரை தனது கட்சி கொள்கை தலைவர்களாக முன்னிறுத்தினார். ஏற்கனவே, அவர் கூறிய ‘கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு ‘ என்ற கூற்றுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், தவெக […]
சென்னை : கடந்த அக்டோபர் 27-ம் தேதியன்று தவெகவின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார் அக்கட்சி தலைவர் விஜய். அப்போது, கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விசிகாவின் கோரிக்கையை ஆதரிக்கும் வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த கருத்துக்கு முதலில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆதரவு தெரிவித்து இருந்தாலும், அடுத்தடுத்து விசிக தலைவர் திருமாவளவன், மற்ற விசிக தலைவர்கள் இதனை கடுமையாக விமர்சித்தனர். ஆஃபர் கூறுவது போல இருக்கிறது. முதலில் […]
சென்னை : கடந்த அக்டோபர் 27 அன்று விக்கிரவாண்டில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் விஜய் பேசிய கருத்துக்கள் தான் தற்போது வரையில் தமிழக அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக திமுக கூட்டணி வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. பாசிசமா பாயாசமா.? ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என விசிக முன்வைத்த கோரிக்கையை மறைமுகமாக குறிப்பிட்டு விஜய் கூட்டணி பற்றியும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விதத்திலும் பேசினார். மேலும், […]
சென்னை : நடந்து முடிந்த த.வெ.க மாநாட்டில் அக்கட்சி தலைவர் விஜய் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என தொடங்கி, பிளவுவாத அரசியல், ஊழல்வாத அரசியல் தனது எதிரிகள் எனவும், திராவிட மாடல் அரசு என மக்களை ஏமாற்றுகின்றனர் என நேரடி விமர்சனங்களை முன் வைத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. விஜயின் பேச்சுக்கு திமுகவை சேர்ந்த தலைவர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை […]
திண்டுக்கல் : த.வெ மாநாட்டில் விஜய் திமுகவை நேரடியாக விமர்சித்துப் பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பாசிசம்னா, நீங்க என்ன பாயாசமா.? நீங்களும் அவர்களுக்கு ஒன்னும் சளச்சவங்க இல்ல என திமுக அரசை நேரடியாகவும், பாஜகவை மறைமுகமாகவும் விமர்சித்துப் பேசியிருந்தார். எனவே, விஜய் பேசிய விஷயத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் , திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலரும் எதிர்மறையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்கள். அவர்களை […]
சென்னை : அக்-27ம் தேதி விழுப்புரம் விக்ரவாண்டியில் தவெகவின் முதல் மாநாடு மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று முடிவடைந்தது. மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் மற்றும் கட்சியின் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டது. அதைப்போல மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்களும் பெரிய அளவில் தொண்டர்களுக்கு மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில். மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்கள் அவர்களுடைய தொண்டர்களிடையே எவ்வளவு ஆதரவு பெற்று வந்ததோ அதே சமயம் அதற்கு எதிராக அரசியல் தலைவர்களிடம் எழுந்த கருத்துக்கள் பல விஜயின் பேச்சுக்கு எதிர்மறையான […]
சென்னை : கடந்த அக்-27ம் தேதி விழுப்புரம் விக்ரவாண்டியில் தவெகவின் முதல் மாநில மாநாடானது பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சகணக்கான தொண்டர்கள் பங்கேற்று தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். அந்த மாநாட்டில் விஜய் பேசியது தான் அடுத்த 2 நாளாக தமிழகத்தில் தவெகவின் முதல் மாநாடு தான் பேசுபொருளாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், மாநாடு முடிந்து 2 நாட்களுக்கு பிறகு விஜய் அவரது எக்ஸ் பக்கத்தில், தனது தவெக கட்சித் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து […]
கிருஷ்ணகிரி : விக்கிரவாண்டி வி.சாலையில் விஜய் நடத்திய பிரமாண்ட த.வெ.க மாநாட்டை பார்ப்பதற்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்திருந்தார்கள். அதில் ஒருவர் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரன். இவர் மாநாட்டில் கலந்து கொள்ள அந்த மாவட்டத்தில் இருந்து மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் வந்த வேனில் வருகை தந்துள்ளார். பிறகு மாநாடு நடந்து முடிந்தபின் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் எந்த இடத்தில் தாங்கள் வந்த வேன் பார்க்கிங் செய்யப்பட்டது என்பது தெரியாமல் காணாமல் போகியுள்ளார். தன்னுடைய […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27-ஆம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெற்று முடிவடைந்தது. மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசிய பல விஷயங்களும் அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் பேசுபொருளாகவும் மாறியிருக்கிறது. குறிப்பாக, அவர்கள் பாசிசம்னா, நீங்க என்ன பாயாசமா.? நீங்களும் அவர்களுக்கு ஒன்னும் சளச்சவங்க இல்ல என திமுக அரசை நேரடியாகவும், பாஜகவை மறைமுகமாகவும் விமர்சித்துப் பேசியிருந்தார். Read More- “அவங்க பாசிசம்னா., நீங்க பாயாசமா.?” திமுகவை […]
சென்னை : கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் வெயிலின் தாக்கம், விபத்துகள் என சில உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்து தவெகவினரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. சென்னை பாரிஸ் கார்னர் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் மாநாட்டிற்கு புறப்படுகையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அடுத்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் […]
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். முதல் மாநாட்டில் பேசிய அவர், “அவங்க பாசிசம்னா., நீங்க என்ன பாயாசமா.?., குடும்ப ஊழல் ஆட்சி, திராவிட மாடல் என ஏமாற்றுகின்றனர் ” என ஆளும் திமுக அரசை நேரடியாகவே கடுமையாக விமர்சித்தார். மேலும், ஆட்சி – அதிகாரத்தில் பங்கு என்று கூட்டணிக்கும் மறைமுக அழைப்பு விடுத்தார். விஜயின் இந்த […]
சென்னை : விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக மாநாட்டில் திமுக குறித்து விஜய் பேசியதற்கு திமுக ஆதரவாளர்கள் எதிர்வினையாற்றி வருகிறனர். அதாவது, திமுக தான் அரசியல் எதிரி.. பாஜக கொள்கை எதிரி என விஜய் வெளிப்படையாக பேசியிருந்தார். மேலும், “திராவிட மாடல் என பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள், என்ன தான் மோடி மஸ்தான் வேலை செய்தாலும் ஒன்னும் நடக்கப்போவதில்லை. திராவிட மாடல் என்ற பெயரில், பெரியார், அண்ணா பெயரில் நம்மை சுரண்டி கொள்ளையடிக்கும் குடும்ப, சுயநல கூட்டம் தான் […]
சென்னை : விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாளை உள்ளிட்ட தலைவர்களின் கட்அவுட்கள் வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் தான் கட்சியின் வழிகாட்டி என்றும் தவெக தலைவர் விஜய் கூறினார். அதனுடே, பெரியாரின் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டாலும் , அவரின் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், யாருடைய மத நம்பிக்கையையும் நாங்கள் தலையிடப்போவதில்லை என்றும் கூறினார். மேலும், […]