ஈ.பி.எஸ். ஆட்சியை கவிழ்க்க ஓ.பி.எஸ் தினகரனுடன் திட்டம் ...!ஆட்சியை கவிழ்க்க தினகரனிடம் நேரம் கேட்ட ஓ.பி.எஸ்..!தினகரன் அணி பகீர் தகவல்

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக டிடிவி தினகரனிடம் பேச வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டார் என்று அம்மா மக்கள்

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக டிடிவி தினகரனிடம் பேச வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டார் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

unknown node

ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார்.

unknown node

இதன் பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .இதனால் தினகரன் தனக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.

unknown node

தினகரன் தற்போது ஆர்.கே.நகர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார்.தினகரன் அணியில் அவ்வப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கருத்து கூறி வருகின்றார்.

unknown node

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் ஒரு பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக டிடிவி தினகரனிடம் பேச வேண்டும் என்று நேரம் கேட்டார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.ஆனால் திரை மறைவில் எங்களிடம் பேசும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மேடையில் எங்களை விமர்சிக்கிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை வேடம் போடுவது ஏன்?”  என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இவ்வாறு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.