வேலூர் :காட்பாடி அருகே நாராயணபுரத்தைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் (CRPF) பெண் வீரர் கலாவதி (32), ஜம்மு-காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்பில் பணியாற்றி வருகிறார். கடந்த ஜூன் 24ம் தேதி அன்று, அவரது தந்தை குமாரசாமி (65) விவசாய வேலைக்காக வெளியே சென்றிருந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 25 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொன்னை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது, ஆனால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கலாவதி குற்றம்சாட்டியுள்ளார். தனது திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த நகைகள் திருடப்பட்டதால் வேதனையடைந்த கலாவதி, சீருடையில் கதறி அழுதபடி வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டு, காவல்துறையின் மெத்தனப்போக்கு குறித்து வேதனை தெரிவித்தார்.
இந்த வீடியோ இணையத்தில் பரவி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் பதிவில், தேசத்தின் எல்லைகளைப் பாதுகாக்கும் ஒரு பெண் வீரரை நீதிக்காக கெஞ்ச வைத்திருப்பது திமுக ஆட்சியின் தோல்வி என விமர்சித்துள்ளார்.
A CRPF jawan from Tamil Nadu, serving with honour at our nation’s borders in J&K, is forced to take to social media on police inaction on the case of jewellery theft from her residence near Katpadi in June this year.
What kind of governance forces a woman in uniform to beg for… pic.twitter.com/BnU6WtT99l
— K.Annamalai (@annamalai_k) August 4, 2025
இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தாலும், இதுவரை நகைகள் மீட்கப்படவில்லை. இந்த நிலையில், இந்தச் சம்பவம் காவல்துறையின் செயல்பாடு மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.
