நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு மாயாண்டி என்பவரை 7 பேர் கொண்ட ஒரு கும்பல் வெட்டி கொடூரமாக கொலை செய்தது. வழக்கு விசாரணைக்கு வந்த மாயாண்டியை நீதிமன்ற வளாகம் முன்பு அந்த கும்பல் வெட்டி கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்டம் கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டியை வெட்டிக் கொலை […]
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற வாசல் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் பட்டப் பகலில் நடந்த இந்த கொடூரம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மாயாண்டி என்ற அந்த இளைஞரை வெட்டி கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் காரில் தப்பி சென்றனர். பின்னர், காவல் துறையினர் அவர்களை […]
சென்னை: சென்னை பெரம்பூரில் ரவுடி அறிவழகனை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடியை சேர்ந்த ஏ பிரிவு ரவுடியான அறிவழகனை பிடிப்பதற்காக பனந்தோப்பு சென்ற போலீசாரை, அவர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், தற்காப்புக்காக அவரை காலில் சுட்டு காவல் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் டித்துள்ளார். இன்று அதிகாலையில் பொது இடத்தில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சென்னை: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்-ஐ போலீசார் பல மணி நேர விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் கஞ்சா மற்றும் மெத் விற்பனை செய்ததாக சென்னையில் 10 பேர் கைதானார்கள். அவர்களுடன் அலிகான் துக்ளக்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறி விசாரணை நடத்திவந்த போலீசார், இன்று காலை அவரை கைது செய்தனர். சில தினங்களுக்கு முன், கைதான கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். ஏற்கனவே, […]
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை சவரன் தங்க ஜிமிக்கி திருடப்பட்டிருப்பதாக அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, அந்த புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மற்ற நகைகள் திருடு போகாமல் ஜிமிக்கி மட்டும் தொலைந்திருப்பதால் தெரிந்தவர்கள் எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. இரண்டரை பவுன் ஜிமிக்கி திருட்டு நகை திருட்டு குறித்து போலீசாரிடம் நடிகை […]
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு பேசும் சமூகத்தினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கஸ்தூரி சங்கரை ஹைதராபாத்தில் போலீஸார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி, ஹைதராபாத்தில் படத் தயாரிப்பாளர் வீட்டில் மறைந்திருந்தாக தகவல் கிடைத்தது. இந்த தகவல் தனிப்படை போலீசாருக்கு […]
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 2,153 போலீசாருக்கு பணியிட மாறுதல் வழங்கி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். முதல் நிலை காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாறுதல் கோரி மனு அளித்திருந்தனர். அந்த மனுவின் அடிப்படையில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு அளித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், ” இரண்டாயிரத்து ஐம்பத்து மூன்று (2153) காவலர்கள், அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மாற்றப்பட்டு, அவர்களின் கோரிக்கையின் பேரில் ஒவ்வொருவருக்கும் […]
சென்னை : ராயப்பேட்டை அருகே மெத்தபெட்டமைன் என்கிற போதைப்பொருளுடன் சீரியல் நடிகை எஸ்தர் என்பவரை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர். உடனே, எஸ்தரை போலீசார் மருத்துவனை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். தற்பொழுது, கைதான நடிகை எஸ்தர், சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் நடிகை மீனா என்பது தெரிய வந்துள்ளது. இவர் ராயப்பேட்டை அருகே, போதைப் பொருளை விற்க வந்தபோது கையும் களவுமாக சிக்கி கொண்டார். போலீசார் கைது செய்தபோது, அவரிடம் 5 […]
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது. அது என்ன சம்பவம் என்றால், அந்த பகுதியில் ட்ராபிக் காவல்துறையினர் எந்தெந்த வாகனங்களில் கருப்பு நிற ஸ்டிக்கர்ஸ் ஒட்டி இருக்கிறது என்பதைச் சோதனை செய்துகொண்டிருந்தார்கள். அப்போது, சையத் மஜூத்தீன் நசீர் என்ற நபர் ஓட்டிய ஒரு கார் அந்த பகுதிக்கு வந்துள்ளது. அதனைப் பார்த்த காவல் அதிகாரி ஒருவர் காரை நிறுத்து சோதனை செய்யவேண்டும் என்பது […]
திருவள்ளூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. ஒரு பக்கம், மாநாடுக்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முதல் மாநாடு வெற்றி பெற கொடியை வைத்து பூஜை செய்வதற்காக திருத்தணி முருகன் மலைக் கோயிலில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் 100 அடி நீளம் கொண்ட கட்சிக் கொடி ஏந்தி மாடவீதியில் விதிகள் மீறி ஊர்வலம் நடத்தினர். இதனை […]
நாமக்கல் : கேரளாவில் ATM-களில் கொள்ளையடித்த கொள்ளைக்கும்பல் தப்பி வந்த கண்டெய்னர் லாரி நாமக்கல் – பச்சாபாளையம் அருகே பிடிபட்டது. பச்சாபாளையம் அருகே லாரி பிடிக்கப்பட்டு கண்டெய்னரை திறக்கும் போது உள்ளே ஆயுதங்களுடன் இருந்த கொள்ளையர்கள் தாக்க, போலீசார் பதிலுக்கு துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். அதில், ஒரு கொள்ளையன் உயிரிழந்தனர். பின்னர், ஓட்டுநர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர், அந்த லாரியின் கண்டெய்னர் பெட்டியை திறந்து பார்க்கையில், அதனுள்ளே ஒரு சொகுசு கார் இருந்ததும், அதிலும் கொள்ளையர்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது. […]
உத்தரப்பிரதேச மாநிலம் : லக்னோ இந்திரா நகரைச் சேர்ந்த டாக்டர் சுனில் பாண்டே என்பவருக்குச் சொந்தமான வீட்டில் யாரும் இல்லாத நிலையில், நபர் ஒருவர் திருடுவதற்காக வீட்டிற்குள் சென்று வெப்பம் தாங்காமால் அங்கு இருந்த ரூமில் ஏசியை போட்டுகொண்டு சுகமாக தூங்கினார். வீடு திறந்து கிடைத்ததை கவனித்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவலை கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டிற்குள் சென்று அசந்து தூங்கி கொண்டு இருந்த அந்த திருடனை புகைப்படம் எடுத்தார். […]
சென்னை:பாலியல் தொல்லை அளித்த மருத்துவரை கைது செய்ய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு வரை காரிலேயே சென்ற போலீசாரால் பரபரப்பு. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் சதீஷ்குமார் என்பவரை கைது செய்ய, உணர்ச்சிவசப்பட்ட காவல்துறையினர் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் தங்களது போலீஸ் வாகனத்தை ( xuv ) ஓட்டிச் சென்றதால் பரபரப்பானது. The cops drove their car inside AIIMS Rishikesh.pic.twitter.com/rZDkCvHipM […]
சென்னை: புதுச்சேரியில் லேசான மழை, கடல் சீற்றம் காரணமாக கடலில் இறங்க சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரியில் ஏப்ரல் மாதத்தில் இருந்து […]
தமிழ்நாட்டில் தலைமை காவலர்கள், முதல்நிலை காவலர்கள் உட்பட 1,847 பேரை இடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறுவதையொட்டி, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில், குறிப்பாக ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும், அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை இடமாற்றம் செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. அதன்படி, தேர்தல் நடத்தை விதிகளின் படி தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே […]
கிறிஸ்துமஸ் (Christmas) என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழா வருகின்ற 25-ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டப்படுகிறது. இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவித்துள்ளார். அதன்படி, கிறிஸ்துவ தேவாலயங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், கன்னியாகுமரி […]
சேலம் அருகே கோவை தேசிய நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் இருசக்கர வாகனத்தின் பின் டயர்கள் திடீரென கழன்று ஓடியதால், பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பாஜக ஆட்சியில் ஜனநாயகம் வேகமாக இறந்து வருகிறது – ஜவாஹிருல்லா பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் டயர் கழன்ற உடன் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தியத்தால், பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பேருந்தின் முன்சக்கரம் பஞ்சரான காரணத்தால், அதன் பின் சக்கரம் கழன்று ஓடியுள்ளது. இதனையடுத்து பேருந்தில் […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையடிப்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலை ஜெயபால் என்பவருக்கு சொந்தமானது. இந்த ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகள் காணப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் பட்டாசு உற்பத்தி செய்ய பணியாளர்கள் வேலைக்கு வரவிருந்த நிலையில், அவர்கள் பட்டாசு தயாரிக்க தேவையான பொருட்களை ஒரு தொழிலாளி மட்டும் தயார் செய்து வைத்துக் கொண்டு இருந்துள்ளார். ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு இன்று தேர்தல்..! […]
பொதுவாக காவலர்கள் தாங்கள் வைத்திருக்கும் இருசக்கர வாழுங்கள் மற்றும் கார்களில் காவல் அல்லது போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை பார்த்திருப்போம். தற்போது இந்த ஸ்டிக்கர் ஒட்ட கூடாது என சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார். தேசவிரோதிகள், குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு ‘போலீஸ்’ ஸ்டிக்கரை தவறாகப் பயன்படுத்துவதால், காவல் அல்லது போலீஸ் என ஸ்டிக்கர் பயன்படுத்துவதற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சுற்றறிக்கை […]
இந்திய தேர்தல் ஆணையம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை வெளியிடப்பட்டது. நாளை ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் தங்களது ஆட்சியை தக்க வைப்பதற்கான முயற்சிகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளனர். அதைப்போல் பாஜகவும் மக்களை கவரும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடியான […]