டெல்லி : தலைநகர் டெல்லியில் ரோகினி செக்டார் பகுதியில் செயல்பட்டு வரும் சிஆர்பிஎப் பள்ளியில் நேற்று பயங்கர சத்தத்துடன் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது. நல்வாய்ப்பாக இந்த வெடி விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து டெல்லி சிறப்புபிரிவு போலீசார், தேசிய புலனாய்வு குழுவினர், தேசிய பாதுகாப்பு படையினர் என பல்வேறு விசாரணை குழுவினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு சம்பவம் எப்படி நிகழ்ந்தது என வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து […]
டெல்லி : ரோகிணி நகர் பிரகாஷ் விஹாரில் இயங்கி வரும் CRPF பள்ளி முன்பு இன்று காலை 9.30 மணிக்கு பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அடுத்த சில நொடிகளிலேயே அங்கு புகை மண்டலம் சூழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை அடுத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வெடித்தது வெடிகுண்டா? அல்லது மர்மப்பொருளா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, தேசிய புலனாய்வுத் துறையினர் டெல்லி காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் […]
ஜம்மு-காஷ்மீர்: நேற்று நள்ளிரவு ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் பயங்கர வாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஒருவர் பலியானதுடன், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீரின் உள்ள ரியாசி மாவட்டத்தில் ஷிவ் கோரி எனும் குகைக் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஒரு பேருந்து மீது பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் அதில் அந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 9 பக்தர்கள் உயிரிழந்த நிலையில் 33 பேர் படுகாயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். […]
Manipur : மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பதற்றம் குறைவாக உள்ள மாநிலங்களில் தேர்தலை ஒரே கட்டமாகவும், பாதுகாப்பு கூடுதலாக தேவைப்படும் மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாகவும் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் முதல் பல்வேறு தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 2 தொகுதிகளுக்கும் 2 கட்டமாக தேர்தல் […]
ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை நடை பயணம் போது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக கூறும் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு CRPF மறுப்பு தெரிவித்துள்ளது. டிசம்பர் 24ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஒற்றுமை யாத்திரையின் போது, ராகுல் காந்தி நடை பயணத்தில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து CRPF தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை நடை பயணம் போது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக கூறும் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு […]
பிரபல நடிகர் சித்தார்த் நேற்று தந்து இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அந்த பதிவில் ” நேற்று நானும் என்னுடைய பெற்றோர்களும் மதுரை விமான நிலையத்தில் ‘CRPF’ அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானோம். அங்கிருந்த ‘CRPF’ அதிகாரிகள் என்னுடைய பெற்றோர்களிடம் பையிலிருக்கும் நாணயங்களை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் முழுக்க முழுக்க ஹிந்தியில் தான் பேசினார்கள். நான் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறினேன். அவர்கள் அதெல்லாம் கேட்காமல் தொடர்ந்து […]
எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந் சின்காவுக்கு,மத்திய அரசு ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுவுள்ளது. இதனை முன்னிட்டு,குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் […]
சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு. ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் உயிரிழந்துள்ளார் என தகவல் கூறப்படுகிறது. உயிரிழந்த எம்என் மணி திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே, உள்ள அதிமஞ்சரைப்பேட்டையை சேர்த்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழக வீரர் எம்என் மணி உள்பட சிஆர்பிஎப் வீரர்கள் 12 சென்ற பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. ஹைடர்போரா என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த வீரர் மணி […]
காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் காயமடைந்தார். தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் ஜைனாபோரா கிராமத்தின் கிரால் செக் பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது இன்று காலை நான்கு பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு சிஆர்பிஎஃப் வீரர் காயமடைந்தார். இந்த தாக்குதலில் 178 பட்டாலியனைச் சேர்ந்த கான்ஸ்டபிள் அஜய் குமார் காயமடைந்தார். காயமடைந்தவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதை அடுத்து, படையினரும் […]
சிஆர்பிஎஃப் உதவி கமாண்டன்ட் காலியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள், தகுதியும் ஆர்வமுமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சிபிஆர்எஃப் உதவி கமாண்டன்ட் 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு செயல் முறையை மத்திய ரிசர்வ் போலீஸ் படை கடந்த ஜூன் 23ஆம் தேதி தொடங்கியது. இன்றுடன் சிபிஆர்எஃப் விண்ணப்பிக்கும் செயல்முறை மூடப்பட உள்ளது. எனவே தகுதியானவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்கள் crpf.gov.in எனும் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த சிபிஆர்எஃப் பணிக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையில் உடல் தர சோதனை, எழுத்துத்தேர்வு, விரிவான […]
மத்திய பிரதேசத்தில் சிஆர்பிஎப் வீரர் உடல் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட நிலையில் ,அவர் தற்கொலை செய்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் காந்த்லா பகுதியில் சி.ஆர்.பி.எப் வீரரான ராஜீவ் பணியில் இருந்து விடுப்பில் இருந்து வந்துள்ளார். ஐந்து நாட்களுக்கு முன்பு காந்த்லா பகுதியில் உள்ள தனது சொந்த ஊரிற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் கடந்த சனிக்கிழமை மாலை ஒரு மரத்தில் தூக்கில் தொங்கியபடி அவர் உடல் மீட்கப்பட்டது.இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை ‘என்று காவல்துறை ஒரு […]
தெற்கு காஷ்மீர் மாவட்டமான அனந்த்நாக் நகரில் இன்று தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர் ஒருவர் காயமடைந்தார். இன்று அனந்த்நாக் பிஜ்பெஹாரா மருத்துவமனைக்கு அருகே பாதுகாப்பு படையினர் மீது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசினர். இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர் 40-வது பட்டாலியனைச் சேர்ந்த பாட்டீல் பர்மகர் என்பவர் காயமடைந்தார், காயமடைந்தவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். குண்டுவெடிப்பு போது ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக தீவிரவாதிகள் […]
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கங்கூ அருகே இன்று காலை பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த சிஆர்பிஎஃப் வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தற்போது தெரியவில்லை.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹாரா பகுதியில் நெடுஞ்சாலை பாதுகாப்பில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தி உள்ளனர். சிஆர்பிஎஃப் மீதான பயங்கரவாத தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஒரு சிஆர்பிஎஃப் வீரர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து , இவர்களை பிஜ்பெஹாரா மருத்துவமனையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த குழந்தைக்கு ஆறு வயது என கூறப்படுகிறது. இதற்கிடையில், புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவின் டிரால் பகுதியில் […]
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹாரா பகுதியில் நெடுஞ்சாலை பாதுகாப்பில் நிறுத்தப்பட்டுள்ள சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் காயமடைந்ததாகவும் அவரை மாவட்ட மருத்துவமனை அழைத்து சென்றுதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று 73-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இதை தொடர்ந்து நாடு முழுதும் சகோதரத்துவ சகோதரத்துவத்தை போற்றும் வகையில் நேற்று ரக்ஷா பந்தன் விழாவும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி பிரதமர் மோடிக்கு சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என பலர் ராக்கி கட்டினர்.இந்நிலையில் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள தனோடு ஒரு பகுதியில் உள்ள சிஆர்பி எஃப் வீரர்களுக்கு ஏராளமான மாணவிகள் ராக்கி கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இந்த ராக்கி கட்டும் நிகழ்ச்சியில் சிஆர்பி எஃப் வீரர்கள் கலந்துகொண்டு ராக்கி […]
ஜம்மு காஸ்மீர் மாநிலம் ஸ்ரீ நகர் பகுதியில் பணியில் இருக்கும் சி ஆர் பி எப் பெண் போலீசாருக்கு நவீன உடையும் வழங்கியுள்ளனர். ஸ்ரீ நகர் பகுதியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் 300 பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுவர். அடிக்கடி கலவரங்கள் ஏற்படும் போது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறுவதால் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்களும் காயமடைகின்றனர். இந்நிலையில், காவலர்களது பாதுகாப்பிற்காக புதிதாக நவீன் பாதுகாப்பு ஆடை வழங்கியுள்ளனர். சி ஆர் பி எப் […]
இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் சிஆர்பிஎஃப் வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசு மட்டும் மவுனம் […]
தாக்குதல் தொடர்பாக போலியான தகவல்களை வெளியிடுபவர்களுக்கு சி.ஆர்.பி.எப் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குல்: கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீரில் உள்ள ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் ஸ்ரீநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் அவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் […]
ஜம்மு காஷ்மீரில் உள்ள சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், இரண்டு வீரர்கள் காயம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வமா மாவட்டத்தின் ககபுரா பகுதியில் சி.ஆர்.பி.எப் முகாம் உள்ளது. இந்த முகாம் மீது நேற்று இரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், முகாமில் இருந்த இரண்டு வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதலையடுத்து, நிகழ்விடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் பணியில் […]