வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று இருந்த வேலூர் மாவட்ட ஆலய மேம்பாட்டு பிரிவு நிர்வாகி விட்டல்குமார் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விட்டல்குமார் உயிரிழப்பு கொலை என்றும் இதற்கு வேலூர் மாவட்டம் நாகல் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பாலா சேட் என்பவர் தான் காரணம் என்றும் பாஜகவினர் வேலூர் அரசு மருத்துவமனையில் தொடர் […]
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை மும்மரமாகச் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று வேலூர் மாவட்டத்தின் காட்பாடி தொகுதியில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் தி.மு.க தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன் தன்னை கொல்ல வந்தார்கள் என்றால் கூட அவர்களை […]
சென்னை : வந்தே பாரத் ரயில் சேவையை தொடர்ந்து வந்தே பாரத் மெட்ரோ ரயில் சேவையும் தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளது. சென்னை பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் ஏற்கனவே வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வரும் சூழலில், வந்தே பாரத் மெட்ரோ ரயில் பெட்டி தயாரிக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, வந்தே பாரத் ரயில் பெட்டி தயாரித்து முடித்து சோதனை ஓட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்ததாக வந்தே பாரத் மெட்ரோ ரயில் பெட்டி […]
ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், முன்பதிவு கட்டணங்கள் திருப்பி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருவலத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இன்று 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. ஜோலார்பேட்டை, சென்னை, வேலூர், பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கோவை, ரேணிகுண்டா, அரக்கோணம் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே, புறப்பட்டு சென்ற ரயில்கள் மற்றொரு வழித்தடத்தில் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. பொன்னையாற்றில் […]
சென்னை:காட்பாடி அருகே ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக இன்று 23 ரயில்கள் ரத்து செய்யப்பதுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருவலத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக,இன்று 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி,ஜோலார்பேட்டை,சென்னை,வேலூர்,பெங்களூரு,மைசூரு,மங்களூரு,கோவை,ரேணிகுண்டா,அரக்கோணம் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியூர்களுக்கு செல்ல இருந்த பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.எனினும்,ஏற்கனவே புறப்பட்டு சென்ற ரயில்கள் மற்றொரு […]
காட்பாடி அதிமுக வேட்பாளர் ராமு உட்பட 9 பேர் மீது வாக்காளர்களுக்கு பணம் தர முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. தமிழகத்தில் இன்னும் 3 நாட்களிலேயே சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து வருகிறது. அந்தவகையில், வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த ரூ.18.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காட்பாடி […]