மிக்ஜாம் புயலால்.. சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைப்பு..!
வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 24 மணி நேரத்தில் புயலாக உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5-ம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் (Michaung) புயல் கரையை கடக்கும்போது, தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்கட்கிழமை (டிசம்பர் 04) நடைபெறுவதாக இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதி நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.