கடந்த வருடம் டிசம்பர் மாதம் தமிழகத்தில் இரண்டு பேரிடர்கள் ஏற்பட்டது டிசம்பர் தொடக்கத்தில் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாகவும், அதன் பிறகு தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாகவும் லட்சக்கணக்கான மக்கள் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகினர். இதற்கு மத்திய அரசு சார்பில் குழுக்கள் ஆய்வு செய்து இருந்தன. மாநில அரசு சார்பில் 6 ஆயிரம் மற்றும் ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை அளிக்கப்பட்டது. பேரிடர் நிவாரண நிதி : இந்த நிவாரண தொகை குறித்து இன்று […]
மிக்ஜாம் புயல் நிவாரணம் கோரி விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. மிக்ஜாம் புயல் – கனமழை காரணமாக சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருவள்ளூர் ஆகிய மாவட்ட பகுதிகள் வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டது. கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அளித்தது. அதில் குறிப்பாக ரேஷன் கார்டுதரர்களுக்கு தலா ரூ.6000 நிவாரண உதவித்தொகை வழங்கப்டும் என அறிவிக்கப்பட்டது. ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு தலா 6000 ரூபாய் பெரும்பாலும் […]
மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன்காரணமாக சென்னை பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்தது. பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் கடல் போல தேங்கி நின்றதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் வெள்ளப்பாதிப்பை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பல பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து இயல்புநிலை திரும்பினாலும், சில இடங்களில் இன்னும் வெள்ளநீர் வடியாமலே இருக்கிறது. எண்ணூர் எண்ணெய் கழிவு.. சிபிசிஎல் நிறுவனமே காரணம்.! வெளியான […]
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், தமிழ்நாட்டில் டிச.3 மற்றும் 4ம் தேதிகளில் வீசிய “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. “மிக்ஜாம்” புயலின் தாக்கம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது. மீட்புப் […]
அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படாததே சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு காரணம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட துறைமுகம் பகுதிக்கு உட்பட்ட ராயபுரத்தில் இன்று காலை ஆய்வு மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அப்பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதன்பின் சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மழை, வெள்ளம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு […]
சென்னை பெருவெள்ளம் பொதுமக்களை புரட்டி போட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளுடன் நடிகர்கள் சிலரும் தற்போது களப்பணியில் ஈடுபட்டுள்ளது பாராட்டுக்களை பெற்றுள்ளது. புயல் வீசிய அடுத்த நாளே நடிகர்கள் கார்த்தி, சூர்யா, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் தங்களால் முயன்ற நிதிகளை வழங்கினர். அதையும் தாண்டி நடிகர்கள் பார்த்திபன், KPY பாலா போன்றவர்கள் களத்தில் இறங்கி மக்களுக்கு பண உதவி மற்றும் உணவு வழங்கி வருவது கவனத்தை ஈர்த்துள்ளது. லேடி சூப்பர் ஸ்டார்னு கூப்பிடாதீங்க! நடிகை நயன்தாரா […]
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக சென்னையில் வெள்ளமும் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் சிக்கி மக்கள் தத்தளித்து வரும் நிலையில். பிரபலங்கள் பலரும் தங்களுடைய உதவிகளை செய்து கொடுத்து வருகிறார். உதவி செய்து கொடுக்க முடியாத பிரபலங்கள் அனைவரும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனவும் கேட்டு கொண்டு வருகிறார். ஆனால், இந்த சூழலிலும் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன் சென்னை […]
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கி அத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதன்படி, புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அமைச்சரின் பதிவில்,கடந்த 3ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுவெடுத்து 4ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக […]
புயல் மற்றும் மழை பாதிப்பு மீட்பு பணியில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், தமிழ்நாட்டில் “மிக்ஜாம்” புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, அதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு […]
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகனமழையை கொடுத்தது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அதனை வெளியேற்றும் வேலைகளிலும் , அங்குள்ள மக்களை மீட்கும் வேலைகளிலும் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விஜயவாடாவில் இருந்து 5 குழுக்கள் தமிழகம் வருகை.. மீட்பு, நிவாரணத்துக்கான உதவி எண்கள் அறிவிப்பு! மழைநீர் வெளியேற்றம் குறித்தும் , மீட்பு பணிகள் […]
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாகசென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழைநீர் தேங்கி, பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாக உள்ளது. ஒரு சில இடங்களில் மழைநீர் வடிந்த நிலையில், பல இடங்களில் இன்னும் மழைநீர் வடியாமல் தெரிவிக்கின்றனர். தண்ணீரை அகற்றும் பணி, […]
சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) கரையை கடக்கும் போது ஆந்திர மாநிலத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திர பிரதேசத்தம் கடற்கரையில் கரையை கடக்கும் என கூறப்பட்டு இருந்தது. அதே போல கரையை கடக்கையில் பலத்த காற்றுடன் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. சித்தூர், நெல்லூர், பிரகாசம், குண்டூர், பாபட்லா மற்றும் கிருஷ்ணா ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. மேலும் 90 முதல் 110 […]
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை பகுதிகளில் பெய்த கனமழை பொதுமக்கள் தினசரி வாழ்வை வெகுவாக பாதித்துள்ளது. பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் திறந்துவிடப்பட்டன. மழைநீர் சாலைகளில் தேங்கியது. இதனால் இதுவரை மழைநீர் தேங்காத இடங்களில் கூட தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. அதனை மீட்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள், மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான இடங்களில், குறிப்பாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரையில் […]
சென்னை பெருங்குடியில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். அதன்பின், மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். இதனைத்தொடர்ந்து சென்னை பள்ளிக்கரணையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், திமுக ஆட்சியில் நடக்கிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே நடவடிக்கை எடுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் திட்டமிட்டு செயல்படாததே மக்களின் இன்னல்களுக்கு காரணம். வானிலை ஆய்வு மையம் அறிவித்த பிறகு கூட தற்போதைய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை […]
மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தில் சென்னை தற்போது திணறி வருகிறது. கனமழை கொட்டித்தீர்த்து மழைநீர் தேங்கி நிற்கின்றது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்திருப்பதால், பலரும் தங்குவதற்கு இடம் இல்லாமல் சாப்பிட உணவு இல்லாமல் சிரமத்தில் இருக்கிறார்கள். பல இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும்பாலான சாலை போக்குவரத்து சேதமடைந்துள்ளது. குறிப்பாக, தமிழ் சினிமா பிரபலங்களான விஷால், வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா போன்ற […]
ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே பாபட்லா கடற்கரையில் மிக்ஜாம் புயல் கரையை கடந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர் புயலாக வலுப்பெற்றது. இதையடுத்து, தீவிர புயலாக மிக்ஜாம் புயல் மாறியது. இதனால், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத மழை பொழிந்துள்ளதால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழைநீர் தேங்கி […]
டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஃபாா்முலா ரேஸிங் சா்க்யூட் இந்தியாவின் முதல் ஸ்ட்ரீட் சா்க்யூட் பந்தயங்களான ‘பாா்முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப்’ மற்றும் ‘இந்தியன் ரேசிங் லீக்’ காா் பந்தயங்கள் இம்மாதம் சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. அதன்படி, வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் இந்த பந்தயம் சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ. சுற்றளவு சாலைகளில் இரவுப் […]
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்த்தத்தால் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சில இடங்களில் மழைநீர் வடிந்த நிலையில், பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியாமல் உள்ளது. புயல் சென்னை விட்டு விலகி சென்றதால் மழை சற்று குறைந்துள்ளது. மறுபக்கம் மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சென்று […]
கடந்த சில நாட்களாக வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டத்தில் கனமழை முதல் அதி கனமழை வரை கொட்டி தீர்த்து புரட்டி போட்டது. இதில் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக அதி கனமழை பொழிந்தது. சென்னை, திருவள்ளூரில் வரலாறு காணாத கனமழை கூடி தீர்த்தத்தால், பல இடங்களில் நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியது. தற்போது, மிக்ஜாம் புயல் சென்னையை விட்டு விலகி சென்றதால், மழை […]
மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் புயல் சென்னையை விட்டு விலகி சென்ற நிலையில், மழையின் தீவிரம் குறைந்து, தற்போது […]