புது Kawasaki பைக் சாலையில் சிக்கியது... 2027-ல் மாஸ் என்ட்ரியா?

948cc இன்லைன்-4 எஞ்சின் மற்றும் Cruise Control உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்த பைக் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hero Image

டெல்லி : கவாசகி (Kawasaki) நிறுவனத்தின் வரவிருக்கும் புதிய டூரிங்-ஃபோகஸ்டு அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிளான வெர்சிஸ் 900 (Versys 900) வெளிநாட்டில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் லீக்கான புகைபடங்கள் வெளியாகியுள்ள போதிலும், இதன் எஞ்சின் மற்றும் பிற முக்கிய அம்சங்கள் குறித்த பல தகவல்கள் கசிந்துள்ளன.

எஞ்சின் மற்றும் செயல்திறன்

இந்த புதிய அட்வென்ச்சர் டூரிங் பைக்கில் 948சிசி திறன் கொண்ட, லிக்விட்-கூல்டு இன்லைன்-4 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே எஞ்சின் தான் ஏற்கனவே Z900 மாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் மூலமாக பைக் 123.6 bhp பவர் மற்றும் 98.6 Nm டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் அதன் தூய்மையான செயல்பாட்டிற்கும், மிகச்சிறந்த செயல்திறனுக்கும் பெயர் பெற்றது. இதனால் நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வதற்கு இந்த பைக் மிகவும் சிறப்பாக இருக்கும்.

சக்கரங்கள் மற்றும் பிரேக்கிங் அமைப்பு

இப்போது லீக்கான புகைப்படங்களின்படி, இந்த பைக் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என இரண்டு முனைகளிலும் 17 இன்ச் அலாய் வீல்களைக் கொண்டுள்ளது. மேலும் இதில் சாலை பயன்பாட்டிற்கு உகந்த டயர்கள் (Road-biased tyres) பொருத்தப்பட்டுள்ளன. பிரேக்கிங் அமைப்பைப் பொறுத்தவரை, ஏற்கனவே உள்ள வெர்சிஸ் 1100 மாடலில் வழங்கப்பட்டுள்ளதைப் போன்றே இதிலும் பிரேக் செட்டப் கொடுக்கப்படலாம். அதாவது முன்பகுதியில் 310 மிமீ அளவிலான டூயல்-டிஸ்க் பிரேக்கும், பின்பகுதியில் 260 மிமீ அளவிலான சிங்கிள்-டிஸ்க் பிரேக்கும் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

தொழில்நுட்ப அம்சங்கள்

பழைய வெர்சிஸ் 1100 மாடலில் எளிய செமி-டிஜிட்டல் கன்சோல் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது சற்று பழைய பாணியாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இந்த புதிய வெர்சிஸ் 900 மாடலில் பல நவீன தொழில்நுட்ப அம்சங்களைக் கவாசகி நிறுவனம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக Z900 மாடலில் இருப்பது போன்ற நவீன TFT கன்சோல் இதில் வழங்கப்படும் எனத் தெரிகிறது. இது தவிர, பைக்கை எளிமையாக இயக்கவும் பாதுகாப்பாகப் பயணிக்கவும் குவிக்சீட்டர் (Quickshifter), டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் நீண்ட தூரப் பயணங்களுக்கு மிகவும் அவசியமான க்ரூஸ் கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற பல நவீன உதவி அம்சங்களும் இதில் இடம்பெற வாய்ப்புள்ளது.

அறிமுகம் எப்போது?

தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்களின் தோற்றத்தைப் பார்க்கும்போது, பைக் முற்றிலும் உற்பத்திக்குத் தயாரான நிலையில் (Production-ready) இருப்பது தெளிவாகிறது. இந்தச் சூழலில், இந்த புதிய கவாசகி வெர்சிஸ் 900 பைக் வரும் 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் அல்லது 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாகச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை கவாசகி நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புது Kawasaki பைக் சாலையில் சிக்கியது... 2027-ல் மாஸ் என்ட்ரியா?