ஓம் பிர்லா vs கொடிக்குன்னில் சுரேஷ்.! சபாநாயகர் வேட்பாளர்களை அறிவித்த NDA, I.N.D.I.A ! 

டெல்லி: 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றும் இன்றும் புதிய எம்பிக்கள் பதவி பிராமணம் நிகழ்வு நடைபெறுகிறது. இதனை அடுத்து

BJP MP Om Birla - Congress MP Kodikunnil Suresh

டெல்லி:18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றும் இன்றும் புதிய எம்பிக்கள் பதவி பிராமணம் நிகழ்வு நடைபெறுகிறது. இதனை அடுத்து நாளை மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு இன்றுடன் நிறைவுபெறுகிறது.

மக்களவை சபாநாயகரை ஒரு மனதாக தேர்வு செய்ய பாஜக தலைமையிலான NDA கூட்டணி முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தையை இன்று நடத்தியது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதற்காக காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உறுதியான முடிவு எட்டப்படவில்லை என தெரிகிறது.

இதனை அடுத்து, தற்போது வெளியான தகவலின்படி, பாஜக தலைமையிலான NDA கூட்டணி மக்களவை சபாநாயகர் வேட்பாளராக ஓம் பிர்லா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் கடந்த முறை மக்களவை சபாநாயகராக பொறுப்பில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல, I.N.D.I.A கூட்டணி சார்பாக கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி கொடிக்குன்னில் சுரேஷ் (கே.சுரேஷ்)  மக்களவை சபாநாயகர் வேட்பாளராக வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரளாவில் மாவேலிக்காரா மக்களவை தொகுதி எம்பியாக பொறுப்பில் உள்ளார். இவர் 8 முறை தொடர்ச்சியாக எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.