டெல்லி : நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22இல் தொடங்கப்பட்டது. ஜூலை 23ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று நிறைவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் , குறிப்பிட்ட தேதிக்கு முன்னராகவே நேற்று (ஆகஸ்ட் 9) நாடாளுமன்ற கூட்டத்தொடர் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டு […]
டெல்லி : 1995இல் திருத்தம் செய்யப்பட்டு இருந்த வக்பு வாரிய சட்டத்திருத்தமானது, தற்போது மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு வக்பு வாரிய திருத்த சட்டம் 2024 என மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டதிருத்தத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். இந்த திருத்த சட்டத்தமானது இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாதங்களை மக்களவையில் முன்வைத்தனர். இந்த மசோதா மூலம், முஸ்லிம் அல்லாதவர்களும் வக்பு வாரிய குழுவில் உறுப்பினர்களாக இருக்க […]
டெல்லி : இன்று மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். அதன் மீதான கராசரா விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. இந்த திருத்த சட்டத்தமானது இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாதங்களை முன்வைத்து வருகின்றனர். 1995இல் வக்பு வாரியம் : வக்பு வாரிய சட்டத்திருத்தம் 1995இன் படி, இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக நிலங்களை வழங்குவார்கள். அந்த நிலங்கள் மூலம் கிடைக்கும் […]
டெல்லி : வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய போராட்டம் பின்னாளில் கலவரமாக மாறி நூற்றுக்கணக்கானோர்கள் உயிரிழக்கும் நிலையை உருவாக்கிவிட்டது. நாட்டின் நிலைமை கட்டுப்படுத்த முடியாத நிலையில் ராணுவம் அந்நாட்டின் ஆட்சியை கைப்பற்றியது. அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா தப்பி வந்துள்ளார். இந்தியாவில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஷேக் ஹசீனா, பிரிட்டன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்த விவகாரம் குறித்தும், வங்கதேச […]
டெல்லி : இந்தியன் ரயில்வேயில் உள்ள ரயில் பெட்டி இருக்கைகள் அனைத்தும் பெரியவர்கள் வசதிக்கேற்ப படுக்கை வசதி அமைக்கப்பட்டு இருக்கும். ரயிலில் பச்சிளம் குழந்தைகளை அழைத்து செல்லும் தாய்மார்களுக்கு எதுவாக படுக்கை வசதிகளை ஏற்படுத்த இந்தியன் ரயில்வே துறை தற்போது புதிய முயற்சியை கொண்டுவந்துள்ளது இதுகுறித்து இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில், பாஜக எம்பி சுமர் சிங் சோலங்கி இந்தியன் ரயில்வேயில் தாய்மார்கள் செல்லும் வகையில், படுக்கை வசதி ஏற்படுத்தி தருவது பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு […]
மதுரை எய்ம்ஸ் : கடந்த 2019 மக்களவை தேர்தலுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த திட்டம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை, திருமங்கலம் அருகே தோப்பூரில் 222 ஏக்கரில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு 2019, 2024 தேர்தல் என இரு தேர்தல்கள் கடந்தும் இன்னும் மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் முழுவீச்சில் ஆரம்பிக்கப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் குறித்து திமுக எம்பி ஆ.ராசா மக்களவையில் இன்று பேசுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு […]
டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த வார செவ்வாய் அன்று மத்திய பட்ஜெட் 2024-ஐ நிதியமைச்சர் தாக்கல் செய்தார் . அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். திமுக எம்பி கனிமொழி இன்று மக்களவையில் மத்திய பட்ஜெட் பற்றி தனது கருத்தை எடுத்துரைத்தார். அதில், மத்திய அரசு கல்விக்கு போதிய நிதியை ஒதுக்கவில்லை என […]
டெல்லி: கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 180க்கும் அதிகமானோர் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளதால் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகமாகும் என கூறப்படுகிறது. இந்த மீட்பு பணிகளில் மாநில பேரிடர் மீட்பு குழுவினருடன், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், இந்திய ராணுவத்தினரும் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். சூரல்மலை , முண்டக்கை […]
டெல்லி : கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 23-ம் தேதி நடந்த கூட்டத்தொடரின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து அந்த கூட்டத்தில் மத்திய படஜெட் தாக்கல் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்தி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்த […]
டெல்லி : கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் நிலச்சரிவில் சிக்கியுள்ள பலரை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வயநாடு நிலச்சரிவு குறித்து பிரதமர் மோடி தனது வருத்தத்தை தெரிவித்து மத்திய அரசு சார்பில் நிவாரண உதவிகளையும் அறிவித்தார். அதே போல ராகுல் காந்தி , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், […]
டெல்லி : நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் கடந்த ஜூலை 23ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2024ஐ தாக்கல் செய்தார். அதன் பிறகான கூட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், மத்திய பட்ஜெட் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது, கல்விக்கு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான நிதி […]
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் இன்று மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றி வருகிறார். அவர் பேசுகையில், நாடு முழுக்க அச்சம் நிறைந்த சூழல் நிலவுகிறது. அந்த அச்சம் நம் நாட்டின் அனைத்து பக்கமும் பரவியுள்ளது என குறிப்பிட்டார். மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு நாட்டின் இளைஞர்களை பாதித்த மிகப்பெரிய பிரச்சினையாகும். ஆனால் அதுபற்றி நிதியமைச்சர் தனது உரையில் எதையும் குறிப்பிடவில்லை. சிறு வணிகங்களை […]
டெல்லி : கடந்த சனிக்கிழமை அன்று டெல்லியில் ஏற்பட்ட வெள்ளத்தில் பழைய ராஜிந்தர் நகரில் உள்ள ஓர் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் அடித்தளத்தில் வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி தானியா சோனி, ஸ்ரேயா யாதவ் மற்றும் நவீன் டெல்வின் ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மாணவர்கள் உயிரிழப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் நேற்று முதல் போராட்டத்தில் […]
புது டெல்லி : பல நாடுகளுக்கு பயணம் செய்யும் பிரதமர் மோடி, மணிப்பூருக்கு மட்டும் இதுவரை செல்லவில்லை என ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். புதுடெல்லி, மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடி, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டு வர அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். கலவரம் தொடர்பாக இதுவரை 1100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் […]
டெல்லி: குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் உரையாற்றினார். கடந்த வாரம் தொடங்கிய 18வது மக்களவை முதல் கூட்டத்தொடரின் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று முடிந்து தற்போது பிரதமர் மோடி பதிலுரை அளித்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்களன்று உரையாற்றியதை தொடர்ந்து, நேற்று மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார். அதனை தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் பிரதமர் […]
டெல்லி: கடந்த 3 தேர்தல்களில் 100ஐ கூட தாண்டாத காங்கிரஸ் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இனி வரும் தேர்தல்களிலும் பாஜக கூட்டணியே வெல்லும் என பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றினார். 18வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நேற்று முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர். நேற்று எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து […]
டெல்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். 18வது மக்களவை கூட்டத்தொடர் முதல் கூட்டம் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், குடியரசு தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று மற்றும் இன்று மக்களவை உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர் . நேற்று எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றியதை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி, குடியரசு தலைவர் […]
டெல்லி: நேற்று மக்களவையில் நான் பேசியதில் நீக்கிய பகுதிகளை மீண்டும் அவை குறிப்பில் சேர்க்க வேண்டும் என ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். மக்களவையில் நேற்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்களாகவே தற்போதும் உள்ளனர். பிரதமர் மோடி, பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் இல்லை என்று கருத்து தெரிவித்து இருந்தார். மேலும், […]
டெல்லி: மோடியின் உலகில் வேண்டுமானால் உண்மையை அகற்ற முடியும். ஆனால், நிஜ உலகில் அதனை செய்ய முடியாது என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். நேற்று மக்களவை கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் மோடி, பாஜகவை சேர்ந்தவர்கள் மட்டும் இந்துக்கள் அல்ல. சகிப்பு தன்மை கொண்ட இந்துக்கள் பாஜகவினர் அல்ல என்று பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டார். ராகுல் காந்தி பேசிய கருத்துக்களுக்கு பல்வேறு […]
மகாராஷ்டிரா: பணியின் போது உயிரிழந்த அக்னிவீரரின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் 1.08 கோடி ரூபாய் நிவாரணம் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நிகழ்ந்த மக்களவை கூட்டத்தொடரில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி, இந்துக்கள், பாஜக என பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டு விமர்சனம் செய்து இருந்தார். மேலும், நீட் தேர்வு முறைகேடு, அக்னிவீரர் திட்டம் பற்றியும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். மத்திய அரசு அக்னிவீரர் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எரிந்து (Use and […]