டெல்லி : கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் (NDA), காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A எனும் கூட்டணியும் நேரடியாக களம் கண்டன. இதில் NDA கூட்டணி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து வந்த ஹரியானா தேர்தல், மஹாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி, உள்ளிட்ட மாநில சட்டசபைகளிலும் அரசியல் சறுக்கல்களை எதிர்கொண்டு வருகிறது காங்கிரஸ். […]
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகிறது. இதில் பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் காலை 9 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி 110 தொகுதிகளில் […]
சென்னை : காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு தமிழக அரசியல் தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு பற்றியும், விஜயின் அரசியல் பேச்சுக்கள் பற்றியும் பேசினார். அதில் குறிப்பாக ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. இதனை வரவேற்றும், இது இப்போது […]
டெல்லி : ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 17 மாதங்கள் சிறையில் இருந்த சிசோடியாவுக்கு நேற்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் வெளியே வந்த மணீஷ் சிசோடியா இன்று டெல்லியில் நடைபெற்ற ஓர் அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், நான் தற்போது ஜாமீனில் வெளியே வந்தது விடுமுறையை கொண்டாட அல்ல. […]
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மம்தா பானர்ஜியை தவிர இந்தியா கூட்டணியின் மாநில முதல்வர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் மம்தா பேசுகையில், தனக்கு போதிய நேரம் வழங்கப்படவில்லை எனவும், தான் பேசும் போது மைக் அணைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். மேலும், மம்தா பேனர்ஜி பேசுகையில் , பாஜக மற்றும் கூட்டணி கட்சி முதல்வர்களுக்கு 10 -20 நிமிடங்கள் பேச […]
டெல்லி: இன்று பிரதமர் மோடி தலைமையில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் பாஜக ஆதரவு மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். மம்தா பேனர்ஜியை தவிர இந்தியா கூட்டணியில் உள்ள மாநில முதலமைச்சர்கள் பல்வேறு காரணங்களால் கலந்துகொள்ளவில்லை. மத்திய பட்ஜெட்டில் மேற்கு வங்க மாநிலம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தான் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில் […]
டெல்லி : மாநிலங்களின் கோரிக்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்க மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இது தவிர காங்கிரஸ், திமுக உள்ளிட்ட I.N.D.I.A கூட்டணி கட்சிகள் ஆளும் முதல்வர் கலந்துகொள்ளவில்லை. இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு கலந்து கொள்ளும் ஒரே முதல்வர் […]
நிதி ஆயோக் கூட்டம் : இன்று நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (27ம் தேதி ) 9வது நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், நாட்டின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் இலக்கை எட்டுவதில் மாநிலங்களின் பங்கு குறித்து விவாதம் நடைபெற இருக்கிறது. வழக்கமாக முதல்வர்களுக்கு பதில் மாநில அமைச்சர்கள் […]
நிதி ஆயோக் : இன்று பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநில முதலைமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ள அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. இது குறித்து முதலமைச்சரின் விளக்க அறிக்கை மற்றும் வீடீயோ வெளியாகியுள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2024இல் தமிழகத்திற்கு என்று சிறப்பு திட்டம், நிதி ஒதுக்கீடு செய்யாததன் காரணமாகவே நிதி ஆயோக் கூட்டத்தில் தான் […]
டெல்லி: தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ள பாஜக, இம்முறை தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து NDA கூட்டணி தலைமையிலான ஆட்சியை பாஜக அமைத்துள்ளது. ஆட்சி அமைத்த பிறகு கடந்த ஜூன் 24 முதல் ஜூலை 3ஆம் தேதி வரையில் முதல் கூட்டத்தொடர் நடைபெற்றது. அதன் பிறகு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய இன்று கூட்டத்தொடர் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி […]
இடைத்தேர்தல் முடிவுகள் : நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த இடைதேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் விக்கிரவாண்டி உட்பட நாடு முழுவதும் உள்ள 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலின் வாக்கு எணிக்கையானது இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக சென்றது. இதில் 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 10 இடங்களில் நின்று போட்டியிட காங்கிரஸ் […]
இடைத்தேர்தல் முடிவுகள் : நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த இடைதேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி 10 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால், வெறும் இரண்டே இடங்களில் மட்டும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. அதன்படி, மத்தியபிரதேச மாநிலம் அமர்வாரா தொகுதி இடைத்தேர்தலில் 3,027 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். மேலும், இமாச்சல்பிரதேசத்தில் உள்ள ஹமிர்பூர் தொகுதியிலும் பாஜக வெற்றி […]
திரிணாமுல் காங்கிரஸ் : மேற்கு வங்கத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில், அனைத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தின் ரணகத் தக்ஷின், பாக்தா, ராய்கஞ்ச், மணிக்தலா ஆகிய 4 ட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற்றது. இன்று காலை 8 மணி முதல் இதற்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று முடிந்தது. அதன்படி, உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ராய்கஞ்ச் தொகுதியில், கல்யாணி 50,077 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய […]
இடைத்தேர்தல் முடிவுகள்: நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், தமிழகத்தின் விக்கிரவாண்டி உள்ளிட்ட 13இல் 11 தொகுதிகளில் I.N.D.I.A கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர், பாஜக தலைமையிலான NDA கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. 2 தொகுதிகளில் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளன. பஞ்சாபில் காங்கிரஸ், ஆம் ஆத்மி நேரடியாக மோதிய […]
இடைத்தேர்தல் முடிவுகள் : ஹிமாச்சல் பிரதேசத்தில் 2 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் தலா ஒரு தொகுதியிலும், பஞ்சாபில் ஆம் ஆத்மியும் முன்னிலை பெற்று வருகிறது. 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்று முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. காலை 8 மணிமுதல் இதற்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் NDA மற்றும் I.N.D.I.A கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஹிமாச்சல் பிரதேசத்தில், டெஹ்ரா […]
இடைத்தேர்தல் முடிவுகள் : 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ண தொடங்கப்பட்டன. கடந்த ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற்ற அதே நாளில் வடகிழக்கு மாநிலங்களில் 6 மாநிலங்களில் 12 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் ஜூலை 10 அன்று நடைபெற்று முடித்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை மணி முதல் எண்ணப்படுகின்றன. இதில் […]
ராஞ்சி: இன்று மாலை 5 மணிக்கு ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்க உள்ளார். கடந்த ஜனவரி மாதம் நில மோசடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகி கடந்த வாரம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன். அமலாக்கத்துறை சார்பில் சோரனுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது. இதனை அடுத்து மீண்டும் முதல்வராகும் முனைப்பில் ஹேமந்த் சோரன் முயற்சித்து […]
ஜார்கண்ட்: மீண்டும் ஆட்சியமைக்க இன்னும் சற்று நேரத்தில் ஹேமந்த் சோரன் I.N.D.I.A கூட்டணி தலைவர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளார். கடந்த ஜனவரி மாதம் நிலமோசடி புகாரில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அப்போதைய ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். கைது செய்வதற்கு முன்னர் தனது முதல்வர் பதவியை சோரன் ராஜினாமா செய்து இருந்தார். இதனை அடுத்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவர் சம்பாய் சோரன் கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் புதிய […]
புது டெல்லி : பல நாடுகளுக்கு பயணம் செய்யும் பிரதமர் மோடி, மணிப்பூருக்கு மட்டும் இதுவரை செல்லவில்லை என ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். புதுடெல்லி, மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடி, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டு வர அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். கலவரம் தொடர்பாக இதுவரை 1100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் […]
டெல்லி: குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் உரையாற்றினார். கடந்த வாரம் தொடங்கிய 18வது மக்களவை முதல் கூட்டத்தொடரின் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று முடிந்து தற்போது பிரதமர் மோடி பதிலுரை அளித்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்களன்று உரையாற்றியதை தொடர்ந்து, நேற்று மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார். அதனை தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் பிரதமர் […]