டெல்லி: நேற்று மக்களவையில் நான் பேசியதில் நீக்கிய பகுதிகளை மீண்டும் அவை குறிப்பில் சேர்க்க வேண்டும் என ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். மக்களவையில் நேற்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்களாகவே தற்போதும் உள்ளனர். பிரதமர் மோடி, பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் இல்லை என்று கருத்து தெரிவித்து இருந்தார். மேலும், […]
டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் இன்று ஓம் பிர்லா புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். தேர்வு செய்யப்பட்ட அவருக்கு பிரதமர் மோடி , எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட அவசரகால (எமெர்ஜென்சி) நிலை பற்றி குறிப்பிட்டு கண்டனங்களை பதிவு செய்தார். அவர் மேலும் கூறுகையில், 1975ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலை முடிவை இந்த அவை வன்மையாகக் கண்டிக்கிறது. […]
டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மக்களவையில் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இதில் NDA கூட்டணி வேட்பாளர் பாஜக எம்பி ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவையில் பேசிய ராகுல் காந்தி, மக்களவையில் மக்களின் குரலை எதிர்க்கட்சிகள் எழுப்ப அனுமதிக்கப்படுவார்கள் […]
டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள் அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மிக முக்கிய நிகழ்வான மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இதில் NDA கூட்டணி சார்பில் முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லா போட்டியிட்டார். I.N.D.I.A கூட்டணி சார்பாக காங்கிரஸ் எம்பி கொடிக்குன்னில் சுரேஷ் போட்டியிட்டார். இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களில் சபாநாயகர் தேர்தல் தொடங்கியது. அதில், ஓம் பிர்லாவை பிரதமர் மோடி சபாநாயகராக முன்மொழிந்தார். […]
டெல்லி: 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை மக்களவை சபாநாயகரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி வேட்பாளரை ஒரேமனதாக தேர்வு செய்ய அக்கட்சி முயற்சி செய்தது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஒருமித்த முடிவு எட்டப்படாத நிலையில், NDA கூட்டணி சார்பாக ஓம் பிர்லாவும், I.N.D.I.A கூட்டணி சார்பாக கே.சுரேஷும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, […]
டெல்லி: 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றும் இன்றும் புதிய எம்பிக்கள் பதவி பிராமணம் நிகழ்வு நடைபெறுகிறது. இதனை அடுத்து நாளை மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு இன்றுடன் நிறைவுபெறுகிறது. மக்களவை சபாநாயகரை ஒரு மனதாக தேர்வு செய்ய பாஜக தலைமையிலான NDA கூட்டணி முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தையை இன்று நடத்தியது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதற்காக காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளிடம் […]
டெல்லி: மக்களவை சபாநாயகர் யார் என்பது குறித்த ஆலோசனையை பாஜக, NDA கூட்டணி கட்சிகளுடன் வரும் ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவை தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதம மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்ற முக்கிய அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், இன்னும், மக்களவை சபாநாயகர் யார் என்று அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது. இதுகுறித்து பல்வேறு தகவல்கள் […]
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்று 4 பேர் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிராவை சேர்ந்த சாகர் சர்மா, டி.மனோரஞ்சன் என்பவர்கள் நடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து மக்களவையில் உள்ளே குதித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது மஞ்சள் வண்ண பூச்சை பரப்பவிட்டனர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பதற்றம் உண்டானது. நாடாளுமன்ற அத்துமீறல்.! இனி பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.. சபாநாயகர் அறிவிப்பு.! அதே போல நாடளுமன்ற வளாகத்தில் வெளியே ஹரியானவை சேர்ந்த நீலம் என்ற பெண் உட்பட […]
நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தை தொடர்ந்து இனி பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 22வது ஆண்டு பாராளுமன்ற தாக்குதல் நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இன்றைய தினம் நாடளுமன்றத்தில் பார்வையாளர்களாக அரங்கில் அமர்ந்து இருந்த 2 இளைஞர்கள் திடீரெனபாதுகாப்பு வளையத்தை மீறி மக்களவையில் இறங்கினார். பெரும் பதற்றம்.! நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த நபர்கள்.. பாதுகாப்பு அத்துமீறல்.? மேலும் அவர்கள், மஞ்சள் நிற வண்ணப்புகை வரும் சிறிய வகை பட்டாசு […]
மக்களவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை கூட்டத்தொடர், அடுத்த வாரம் நிறைவடைய இருந்த நிலையில், 4 நாட்களுக்கு முன்னதாக இன்று அலுவல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள், கிறிஸ்த்துமஸ் – புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு முன்கூட்டியே விடுமுறை அளிக்க கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தற்போது மக்களவை தேதி குறிப்பிடாமல் தற்போது முடித்துவைக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
சுவாமி விவேகானந்தரின் சிலை மெக்சிகோவில் நிறுவப்பட்டது. மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் முதல் சிலையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று(செப் 3) திறந்து வைத்தார். “இந்தச் சிலை மக்களுக்கு உத்வேகமாக இருக்கும், குறிப்பாக இப்பகுதியின் இளைஞர்கள் தங்கள் நாட்டை புதிய தலைமைக்கு கொண்டு செல்லும் மாற்றத்தை கொண்டு வருவதற்கு உத்வேகத்தை அளிக்கும்” என்று ஓம் பிர்லா ட்வீட் செய்துள்ளார். மேலும் “மனிதகுலத்திற்கான சுவாமி விவேகானந்தரின் செய்தி மற்றும் போதனைகள் மிக முக்கியமான ஒன்று. மெக்சிகோவில் அவரது சிலையை […]
நாடாளுமன்றத்தின் மழை கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஜூலை மாதம் கூட நடைபெறவேண்டிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காலதாமதாக செப்டம்பர் மாதம் நடைபெற்றது. 18 நாட்கள் நடைபெற வேண்டிய கூட்டத்தொடர் 11 நாட்கள் மட்டுமே நடந்தது. பின்னர், டிசம்பர் மாதம் நடைபெறவேண்டிய குளிர்கால கூட்டத்தொடர் பல்வேறு காரணங்களுக்காக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த ஆண்டுக்கான […]
வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், மக்களவை ஒத்திவைப்பு. மக்களவையில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து, அமளியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடும் அமளி காரணமாக சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவை மீண்டும் ஒத்திவைத்துள்ளார். தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு அரசியல் பிரபலங்கள் பலரும் கோரிக்கை வைத்து […]
சபாநாயகர் ஓம்பிர்லா நாடாளுமன்ற கூட்டத்தொடர் திட்டமிட்டப்படி நடைபெறும் என தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரசால் நேற்று வரை 62939 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19358 ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2109 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவை தடுக்க விதமாக மே 17ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூன் மாத மத்தியில் அல்லது ஜூலை முதலில் நடைபெறும். […]
காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேரை தற்காலிக நீக்கம் செய்த நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். சபாநாயகர் பொறுப்பில் இருந்த ரமாதேவி கையில் இருந்த காகிதங்களை கிழித்து எறிந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதித்தார் . இந்நிலையில் மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேரை தற்காலிக நீக்கம் செய்த நடவடிக்கை ரத்து செய்துள்ளார் சபாநாயகர் […]
அன்பழகன் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன்என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் அன்பழகன் மறைவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை முன்னாள் உறுப்பினரும் முதுபெரும் அரசியல் தலைவரும், சிறந்த நிர்வாகியும் தி.மு.க பொதுச்செயலருமான திரு க. அன்பழகன் அவர்களின் மறைவு குறித்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் […]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 2-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள்முதல் டெல்லி கலவரம் தொடர்பாக உடனடியாக விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு சபைகளையும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மக்களவை சபாநாயகரின் மேஜையில் இருந்த காகிதங்களை கிழித்து வீசி ரகளையில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது என சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். […]
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார். 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்தார்.எனவே பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது.இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை அமைதியாக நடத்துவது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார்.
குளிர்கால கூட்டத்தொடர் மக்களவையில் நடைபெற்று வருகிறது. இதில் எம்பி ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அடுத்து நீங்கள் அவரை பேச அழைக்க வேண்டும் என பாஜக MP சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். இதற்கு சபாநாயகர் அந்த பாஜக எம்பியை எச்சரித்து பதிலளித்தார். மக்களவையில் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்தின் போது அலீக்ரா மக்களவை தொகுதி எம்பி சதீஸ் குமார் கௌதம் பேசுகையில், ஒரு எம்பியின் பெயரை குறிப்பிட்டு அடுத்து அவரை பேச அழைக்குமாறு குறிப்பிவிட்டார். […]
வருகின்ற 17 -ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,வருகின்ற நவம்பர் 18-ஆம் தேதி முதல் டிசம்பர் 13-ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று தெரிவித்தது. இந்த நிலையில் இதனையொட்டி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதாவது குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள வருகின்ற 17 -ஆம் தேதி அனைத்து கட்சி […]