புது டெல்லி : பல நாடுகளுக்கு பயணம் செய்யும் பிரதமர் மோடி, மணிப்பூருக்கு மட்டும் இதுவரை செல்லவில்லை என ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். புதுடெல்லி, மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடி, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டு வர அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். கலவரம் தொடர்பாக இதுவரை 1100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் […]
டெல்லி: குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் உரையாற்றினார். கடந்த வாரம் தொடங்கிய 18வது மக்களவை முதல் கூட்டத்தொடரின் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று முடிந்து தற்போது பிரதமர் மோடி பதிலுரை அளித்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்களன்று உரையாற்றியதை தொடர்ந்து, நேற்று மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார். அதனை தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் பிரதமர் […]
டெல்லி: கடந்த 3 தேர்தல்களில் 100ஐ கூட தாண்டாத காங்கிரஸ் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இனி வரும் தேர்தல்களிலும் பாஜக கூட்டணியே வெல்லும் என பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றினார். 18வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நேற்று முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர். நேற்று எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து […]
டெல்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். 18வது மக்களவை கூட்டத்தொடர் முதல் கூட்டம் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், குடியரசு தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று மற்றும் இன்று மக்களவை உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர் . நேற்று எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றியதை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி, குடியரசு தலைவர் […]
டெல்லி: நேற்று மக்களவையில் நான் பேசியதில் நீக்கிய பகுதிகளை மீண்டும் அவை குறிப்பில் சேர்க்க வேண்டும் என ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். மக்களவையில் நேற்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்களாகவே தற்போதும் உள்ளனர். பிரதமர் மோடி, பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் இல்லை என்று கருத்து தெரிவித்து இருந்தார். மேலும், […]
டெல்லி: மோடியின் உலகில் வேண்டுமானால் உண்மையை அகற்ற முடியும். ஆனால், நிஜ உலகில் அதனை செய்ய முடியாது என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். நேற்று மக்களவை கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் மோடி, பாஜகவை சேர்ந்தவர்கள் மட்டும் இந்துக்கள் அல்ல. சகிப்பு தன்மை கொண்ட இந்துக்கள் பாஜகவினர் அல்ல என்று பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டார். ராகுல் காந்தி பேசிய கருத்துக்களுக்கு பல்வேறு […]
மகாராஷ்டிரா: பணியின் போது உயிரிழந்த அக்னிவீரரின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் 1.08 கோடி ரூபாய் நிவாரணம் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நிகழ்ந்த மக்களவை கூட்டத்தொடரில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி, இந்துக்கள், பாஜக என பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டு விமர்சனம் செய்து இருந்தார். மேலும், நீட் தேர்வு முறைகேடு, அக்னிவீரர் திட்டம் பற்றியும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். மத்திய அரசு அக்னிவீரர் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எரிந்து (Use and […]
டெல்லி: மக்களவையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசிய பகுதிகளில் சில கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளன. நேற்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தொடர், விறுவிறுப்புக்கும் , பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் உறுப்பினர்களிடையே விவாதங்கள் அனல் பறந்தது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியது இன்னும் சில நாட்கள் பேசுபொருளாகவே இருக்கும்படி அமைந்தது. அதற்கு பாஜகவினர் தற்போது வரையில் தங்கள் எதிர் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். நேற்று ராகுல் காந்தி பேசுகையில், இந்தியாவில் இந்து […]
டெல்லி: பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது M வரிசையில் மணிப்பூர் என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தவில்லை என மக்களவையில் TMC எம்பி மஹுவா மொய்த்ரா விமர்சித்துள்ளார். இன்று மக்களவை கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவை உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர். அப்போது பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா ஆளும் பாஜக அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், கடந்த முறை என்ன யாரும் பேச அனுமதிக்கவில்லை. […]
டெல்லி: ஒட்டுமொத்த இந்துக்களும் பாஜக, பிரதமர் மோடி இல்லை என ராகுல் காந்தி பேசியதற்கு பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக உறுப்பினர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். 18வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த வாரம் நடைபெற்று வரும் வேளையில், இன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதலை எதிர்த்தவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. எங்களில் (எதிர்க்கட்சிகளின்) பலர் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டோம். இன்னும் எங்கள் தலைவர்கள் சிலர் சிறையில் […]
டெல்லி: கள்ளக்குறிச்சி விவகாரத்தை குறிப்பிட்டு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தமிழக எம்பிக்களை விமர்சனம் செய்துள்ளார். 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், குடியரசு தலைவர் உரையுடன் வழக்கமான நாடாளுமன்ற விவாதங்களுக்காக தொடங்கிய கூட்டத்தொடர் முழுவதும் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர் கடந்த வாரம் ஒத்திவைக்கப்பட்டு இன்று மீண்டும் கூடியது. இன்றைய நாள் அவையின் தொடக்கத்திலேய நீட் விவகாரம் […]
டெல்லி: நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படத்தால் எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளியேறினர். மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக இந்தியா முழுக்க பொதுவாக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வில் இந்தாண்டு பல்வேறு சர்ச்சைகள், புகார்கள் எழுந்தன. இந்த முறைகேடுகள் தொடர்பாக மாநில நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை வழக்குகள் பதியப்பட்டன. இதனை அடுத்து நீட் முறைகேடுகள் குறித்த விசாரணையை மேற்கொள்ள சிபிஐ விசாரணை குழுவை நியமித்தது மத்திய அரசு. நாடு முழுவதும் […]
டெல்லி: மருத்துவ படிப்புகளுக்காக நாடுமுழுவதும் நடத்தப்படும் போட்டித்தேர்வான நீட் நுழைவு தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நேர்ந்ததாக உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடரப்பட்டு தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நாடாளுமன்றத்தில் நீட் விவகாரம் குறித்து விவாதம் நடத்த அனுமதி அளிக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து […]
டெல்லி: பாராளுமன்றத்தில் இன்று காலை முதலே நீட் முறைகேடுகள் தொடர்பான விவாதம் நடத்த வேண்டும் என இந்தியா கூட்டணி எம்பிக்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் இரு அவைகளும் முதலில் பகல் 12 மணி வரையிலும், பின்னர் பிற்பகல் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டன. பிற்பகல் 2 மணிக்கு சபை கூடிய போதும் இதே கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் சபை நடவடிக்கைகள் பிற்பகல் 2.30 மணி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன. பின் பிற்பகல் 2.30 மணிக்கு சபை […]
டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், முதல் 2 நாட்கள் எம்பிக்கள் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து புதன்கிழமை அன்று மக்களவை சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது. நேற்றைய நாளில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார். அதில் பல திட்டங்களை அவர் முன்மொழிந்தார். அதன்பின் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது. இதைத் தொடர்ந்து எதிர்கட்சிகள் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் […]
டெல்லி: இந்த வார தொடக்கத்தில் 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. எம்பிக்களின் பதவியேற்பு, சபாநாயகர் தேர்தல் ஆகியவை முடிந்து நேற்று குடியரசு தலைவர் உரை நிகழ்ந்தது. அதனை தொடர்ந்து இன்று குடியரசு தலைவர் உரைக்கு பதிலளிக்கும் நிகழ்வு நடைபெற இருந்தது. இதனை தொடர்ந்து, இன்று காலை நாடாளுமன்றம் துவங்கும் முன்னரே எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, குடியரசு தலைவர் உரைக்கு பதில் அளிக்கும் நிகழ்வை ஒத்திவைத்து விட்டு நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து […]
டெல்லி: புதிய நாடாளுமன்றம் துவக்க நாளின் போது பிரதமர் நரேந்திர மோடியால் செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. இந்த செங்கோல் குறித்து சமாஜ்வாடி எம்பி ஆர்.கே.சவுத்ரி கூறுகையில், மக்களவையில் செங்கோல் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது என்ன மன்னராட்சியா.? ஜனநாயக ஆட்சியில் செங்கோலை நீக்கி விட்டு அதற்கு பதிலாக அரசியல் சாசன புத்தகத்தை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தார். இந்த கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்க மறுத்துவிட்டார். செங்கோல் குறித்து பல்வேறு உறுப்பினர்களும் கருத்து […]
டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி 4வது நாளான இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அப்போது, 3முறையாக பாஜக ஆட்சி அமைத்ததற்கும், நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆனதற்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும் பாராட்டி பேசியிருந்தார். அப்போது மத்திய அரசால் நிறைவேற்றம் செய்யப்பட்டு வரும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் பற்றி பேசினார். அதில், 70 வயதை கடந்த அனைத்து இந்திய […]
டெல்லி: 18வது மக்களவை தேர்தல் முடிந்து முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள் அன்று துவங்கியது. திங்கள், செவ்வாய் என இரு தினங்களிலும் புதியதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அதன் பிறகு நேற்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்று குரல் வாக்கெடுப்பில் NDA வேட்பாளர் பாஜக எம்பி ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யபட்டார். இதனை அடுத்து, இன்று குடியரசு தலைவர் உரையுடன் வழக்கமான நாடாளுமன்ற நிகழ்வுகள் தொடங்கின. குடியரசு தலைவர் உரை முடிந்த உடன் […]
டெல்லி: 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் கடந்த திங்களன்று தொடங்கி , புதிய எம்பிக்கள் பதவி ஏற்பு, பின்னர் சபாநாயகர் தேர்தல் என நிறைவு பெற்று இன்று குடியரசு தலைவர் உரையுடன் வழக்கமான நாடாளுமன்ற நிகழ்வுகள் தொடங்கியது குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேசுகையில், 3வது முறையாக பிரதமரான நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சி பற்றி பல்வேறு பாராட்டுக்களை தெரிவித்தார் அப்போது குறிப்பிடுகையில், மக்கள் இந்த அரசாங்கம் மீது […]