டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள் அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மிக முக்கிய நிகழ்வான மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இதில் NDA கூட்டணி சார்பில் முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லா போட்டியிட்டார். I.N.D.I.A கூட்டணி சார்பாக காங்கிரஸ் எம்பி கொடிக்குன்னில் சுரேஷ் போட்டியிட்டார். இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களில் சபாநாயகர் தேர்தல் தொடங்கியது. அதில், ஓம் பிர்லாவை பிரதமர் மோடி சபாநாயகராக முன்மொழிந்தார். […]
டெல்லி: 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றும் இன்றும் புதிய எம்பிக்கள் பதவி பிராமணம் நிகழ்வு நடைபெறுகிறது. இதனை அடுத்து நாளை மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு இன்றுடன் நிறைவுபெறுகிறது. மக்களவை சபாநாயகரை ஒரு மனதாக தேர்வு செய்ய பாஜக தலைமையிலான NDA கூட்டணி முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தையை இன்று நடத்தியது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதற்காக காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளிடம் […]