இஸ்ரோ பெண்மணி அண்டார்டிகாவில் சாதனை!
56 வயதான மங்கள மணி என்ற இஸ்ரோ விஞ்ஞானி பனிப்பிரதேசமான அண்டார்டிகாவில் ஓராண்டுக்கும் மேல் தங்கி சாதனை படைத்துள்ளார்.
அண்டார்டிகாவில் பாரதி என்ற ஆராய்ச்சி மையத்தை இந்தியா நிறுவியுள்ளது. இதில் பணியாற்றுவதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் அடங்கிய 23 பேர் கொண்ட குழு 2016ஆம் ஆண்டு நவம்பரில் அங்கு சென்றது. அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே பெண்மணி மங்கள் மணி தான். மைனஸ் 90 டிகிரி அளவுக்கு கடும் குளிர் வதைக்கும் சூழலில் இவர் அங்கு 403 நாட்களை கழித்து விட்டு இந்தியா திரும்பியுள்ளார்.
இதன் மூலம் அதிக நாட்கள் அண்டார்டிகாவில் தங்கிய முதல் இஸ்ரோ பெண் என்ற பெருமையை இவர் பெற்றார். ஆண்களுக்கு உடல் அளவில் வலிமை என்றால், பெண்கள் மனதளவில் வலிமையுடன் இருக்க வேண்டும் என்று மங்கள மணி கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.