ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். காஜல் ஹீரோயினாக நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
unknown nodeஇப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில காட்சிகளால் திரையுலகில் சின்ன அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இப்படம் முழுவதும் 90களில் நாம் பெற்ற சின்ன சின்ன அனுபவங்களை தற்போது ஞாபகப்படுத்தும் வண்ணம் தயாராகி உள்ளது. தற்போது உள்ள நவீன உலகில் என்னென்ன சந்தோசங்களை இழந்தோம் என காட்டும் வண்ணம் இருக்கும் என படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தின் பாடல்கள் அண்மையில் ரிலீஸ் ஆனது. தற்போது அந்த பாடல்களை பாட்டு புத்தகமாக மாற்றி சென்னை முக்கிய திரையரங்குகளில் விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம் படத்திற்கு புதிய ப்ரோமோஷன் ஏற்படுத்தியுள்ளனர்.