ஏப்ரல் முதல் வாரத்தை குறிவைக்கும் முக்கியமான மூன்று திரைப்படங்கள்

இந்த வாரம் நயன்தாராவின் ஐரா படமும், விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படமும் வெளியாக உள்ளது. அடுத்த வாரம் இசையமைப்பாளர் நடிகர் என இரு முகம் கொண்ட சினிமா

இந்த வாரம் நயன்தாராவின்ஐராபடமும், விஜய் சேதுபதியின்சூப்பர் டீலக்ஸ்படமும் வெளியாக உள்ளது. அடுத்த வாரம் இசையமைப்பாளர் நடிகர் என இரு முகம் கொண்ட சினிமா பிரபலன்களான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஹிப்ஹாப் ஆதி ஆகியோர் நடிப்பில் குப்பத்து ராஜா படமும், நட்பே துணை படமும் ரிலீஸிற்கு காத்திருக்கிறது.

இதில்ஜி.வி.பிரகாஷ்படத்தை பாபா பாஸ்கர் என்பவர் இயக்கி உள்ளார். இதில்ரா.பார்த்திபன்வில்லன் ரோலில் நடித்துள்ளார். யோகிபாபு, காமெடி வேடத்தில் நடித்துள்ளார். இந்த பட ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படம் ஏப்ரல் 5இல் வெளியாக உள்ளது.

இதே போலமீசைய முறுக்குபடம் மூலம் நடிகராக அறிமுகமானவர்ஹிப்ஹாப் ஆதி. இவர் நடிப்பில் இரண்டாவதாக ரெடியாகி உள்ள திரைப்படம்நட்பே துணை. இந்த படத்தையும் முதல் படத்தை தயாரித்தஇயக்குனர் சுந்தர்.சிதயாரித்து உள்ளார் இந்த படம் ஏப்ரல் 4ஆம் தேதியே வெளியாக உள்ளது.

unknown node

இந்த படங்களை அடுத்து நடிகர்சூர்யாதனது சொந்த தயாரிப்பு நிறுவனமான2D என்டெர்டெயின்ட்மென்ட்மூலம் தயாரித்திருக்கும் திரைப்படம்உறியடி-2.இப்படத்தின் முதல் பாகமானஉறியடிபடம் பார்த்து பிடித்து போய் இந்த படத்தை தயாரித்துள்ளார் நடிகர்சூர்யா. இந்த படமும் ஏப்ரல் 5இல் வெளியாகும் என படக்குழு சற்றுமுன் தெரிவித்திருந்தது. இப்படம் சென்சார் செய்யப்பட்டு யு சான்று பெற்றுள்ளது.

DINASUVADU