வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 14ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன்பின், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது. இந்த […]
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பருவமழையையொட்டி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தென் மண்டல தலைவர் […]
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இதனிடையே, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் […]
தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, 21ம் தேதி மத்திய அரபிக் கடல் பகுதியில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இதன் காரணமாக தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில […]
தமிழ்நாட்டில் இன்று முதல் டிசம்பர் 22-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல். தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் டிசம்பர் 22-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை […]
சூறை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 18-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடன் த 4 […]
மாமல்லபுரம் அருகே நாளை நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், மாமல்லபுரம் அருகே நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காரைக்காலில் இருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் கிளை தென்கிழக்கு திசையில் […]
தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் வரும் 8, 9, 10 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் இருந்து 770 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும். மணிக்கு 15 கி.மீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு […]
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு. தமிழகத்தில் வரும் 5-ஆம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 5-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி […]
அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு அந்தமான் கடலோர பகுதிகளில் புதிதாக வளிமண்டல சுழற்சி ஏற்பட வாய்ப்பு. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து வட தமிழ்நாடு, அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது […]
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவிப்பு. தமிழகத்தில் இன்று முதல் 19-ஆம் தேதி வரை மிதமான மழையும், 20-ஆம் தேதி கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நவம்பர் 20-ஆம் தேதி திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் லேசான பனிமூட்டம் காணப்படும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் […]
நாளை நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய […]
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், கரூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய […]
வங்கக்கடலில் தீவிர புயலாக நிலை கொண்டிருந்த அசானி,தற்போது புயலாக வலுவிழந்து,ஆந்திராவின் மசிலிப்பட்டணத்திற்கு தென்கிழக்கே 40 கிமீ தொலைவில் நிலவுகிறது எனவும்,அடுத்த சில மணிநேரத்தில் கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து,மேற்கு மத்திய வங்காள விரிகுடாவை ஆந்திர கடற்கரைக்கு அருகில் காலை 11 மணிக்கு அடையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்பின்னர்,அசானி புயலானது திசை மாறி ஒடிசா கடலோரத்தை நோக்கி நகர்ந்து நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் எனவும் இந்திய வானிலை […]
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், நீலகிரி, கோயம்புத்தூா் ஆகிய 2 மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுபட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், தென்மேற்கு பருவக் காற்று காரணமாக, […]
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் மீனவர்கள் 12 ம் தேதி வரை வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் ஜூலை 11-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் மீனவர்கள் 12 ம் தேதி வரை வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் […]
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசானது முதல் மிதமானது வரையிலான […]
வளிமண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல். குமரிக் கடல் மற்றும் அதையொட்டியுள்ள இலங்கைக் கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்து வரும் இரு தினங்களைப் பொறுத்தவரையில் தென் தமிழகம் […]
நிவர் புயல் கரையை கடக்க மேலும் 4 மணிநேரம் ஆகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி வடக்கே பலத்த சூறைக்காற்றுடன் மையப்பகுதியை கடந்து வருகிறது. புதுச்சேரி 20 கி.மீ.., சென்னைக்கு 100 கி.மீ தொலைவில் புயலானது கரையை கடந்து வருகிறது. புயல் கரையை கடந்து வருவதால் கடலோர பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், புயல் கரையை கடக்க மேலும் 3 முதல் 4 மணிநேரம் ஆகும் என்று […]
தூத்துக்குடியில் இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக 17 சென்டி மீட்டர் மழை பதிவு. தூத்துக்குடி மாவட்டத்தில் காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று இரவு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து, இன்று காலை பரவலாக மழை பெய்தது. கனமழை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் நேற்று அதிகபட்சமாக 14 செ.மீ […]