இந்தந்த தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் வரும் 8, 9, 10 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் இருந்து 770 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும். மணிக்கு 15 கி.மீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. இன்று மாலை உருவாகும் புயல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும். இதனால் தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், நாளை டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தகவல் கூறியுள்ளது. இந்த நிலையில், புயல் காரணமாக 8, 9, 10 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.