தமிழகத்தில் மழை தொடரும் – வானிலை மையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவிப்பு.
தமிழகத்தில் இன்று முதல் 19-ஆம் தேதி வரை மிதமான மழையும், 20-ஆம் தேதி கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நவம்பர் 20-ஆம் தேதி திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் லேசான பனிமூட்டம் காணப்படும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.