இன்று 19 மாவட்டங்களில் கனமழை.. நாளை 14 மாவட்டங்களில்.. – வானிலை மையம்
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், கரூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை மறுநாள் 20 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ஜூலை 31-ஆம் தேதி பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.