நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து கேன் வில்லியம்சன் விலகல்.!
நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து கேன் வில்லியம்சன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்காக வெற்றிகரமான கேப்டனாக இருந்துவரும் கேன் வில்லியம்சன், அதன் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டிம் சவுதி புதிய டெஸ்ட் கேப்டனாகவும், டாம் லேதம் துணை கேப்டனாகவும் நியமிக்கப்படவுள்ளனர்.
வில்லியம்சன் தொடர்ந்து அனைத்து வித போட்டிகளிலும் கவனம் செலுத்தப்போவதாகவும் இதனால் டெஸ்ட் அணியின் கேப்டனிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்தார். மேலும் ஒருநாள் மற்றும் டி-20 அணியில் தொடர்ந்து கேப்டனாக இருக்கப்போவதாக வில்லியம்சன் கூறியுள்ளார்.
வில்லியம்சன், நியூசிலாந்து அணிக்காக 38 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து 22 போட்டிகளில் வெற்றி, மேலும் 2021 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை நியூசிலாந்து அணிக்காக வென்றுள்ளார்.