நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி! தங்கம் மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்வு...!

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.1,05,840-க்கும், கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.13,230-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hero Image

சென்னை : கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து சரிவைக் கண்டு வந்த தங்கத்தின் விலை, நேற்று (ஜூலை 29) சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,240-க்கு விற்பனையானது. இதன் மூலம் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ஒட்டுமொத்தமாக ரூ.1,720 வரை சரிந்து நகைப் பிரியர்களுக்குப் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அதேவேளையில், வெள்ளியின் விலையானது எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.235 என்ற அளவிலேயே நீடித்து வந்தது. இந்நிலையில், நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 30) தங்கத்தின் விலை மீண்டும் மளமளவென உயர்ந்துள்ளது.

அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,840 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராம் ஒன்றுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,230-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ள நிலையில், வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,35,000 (ரூ.2.35 லட்சம்)-க்கும் மாற்றமின்றித் தொடர்ந்து விற்பனையாகி வருகிறது.