INDvENG : பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா! ஆல் அவுட்டை தவிர்த்த இங்கிலாந்து! 

இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

IND vs ENG 3rd T20i 1st innings

ராஜ்கோட் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி வாகை சூடியது.

இன்று 3வது டி20 போட்டியானது, குஜராத் மாநிலம் ராஜ்கோட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியினர் பேட்டிங்கை தொடங்கினர்.

ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது. ஒரு கட்டத்தில் 140 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகிவிடும் நிலையில் இங்கிலாந்து அணியினர் விளையாடி வந்தனர். அதிகபட்சமாக பென் டக்கெட் 28 பந்துகளில் 51 ரன்களும், லிவிங்ஸ்டன் 24 பந்துகளில் 43 ரன்களும், ஜோஸ் பட்லர் 24 ரன்களும், எடுத்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர்.பிலிப் சால்ட் 5 ரன்களும், ஹாரி புரூக் 8 ரன்களும், ஜேமி ஸ்மித் 6 ரன்களும், ஜேமி ஓவர்டன் (டக் அவுட்) ரன் ஏதும் எடுக்காமலும்,  பிரைடன் கார்ஸ் 3 ரன்களும், ஜோஃப்ரா ஆர்ச்சர் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர். அடில் ரஷித் 10 ரன்களுடனும், மார்க் வூட் 10 ரன்களுடனும் களத்தில் ஆல் அவுட் ஆகாமல் நின்றனர்.

இறுதியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து உள்ளது இங்கிலாந்து அணி. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் 172 ரன்கள் எனும் வலுவான இலக்கை இந்திய அணிக்கு இங்கிலாந்து அணி நிர்ணயம் செய்துள்ளது.

இந்திய அணி சார்பில் வரும் சக்கரவர்த்தி அபாரமாக பந்துவீசி 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாண்டியா 2 விக்கெட்டுகளையும்,  ரவி பிஷ்னோய் , அக்சர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்