பிறந்த நாளை கொண்டாடும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர்,துணை முதல்வர்,திமுக தலைவர் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இவருக்கு இது 69-வது பிறந்த நாள் ஆகும்.இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி , துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து:

unknown node

முதலமைச்சர் பழனிசாமியின் ட்விட்டர் பதிவில்,நாட்டிற்கும்,மக்களுக்கும் சேவை செய்ய கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் ,பலத்தையும் அளிப்பார் என்று தெரிவித்துள்ளர்.

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வாழ்த்து:

unknown node

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் ட்விட்டர் பதிவில்,இந்தியாவில் உள்ள இளைஞர்கள் நாட்டிற்காக உங்களது சேவையை கண்டு பெருமிதம் கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து:

unknown node

அதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது பதிவில் ,இன்னும் பல ஆண்டுகள் பொதுச்சேவை செய்ய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.