திருச்சி : மாவட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பெயரிலான நூலகத்தை திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான நிர்வாக அனுமதியை முதல்வர் வழங்கியதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எக்ஸ் வலைத்தள பக்கதில் நன்றியும் தெரிவித்து இந்த திட்டத்திற்கான அரசு ஆணையையும் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் […]
சென்னை: சூப்பர் ஸ்டார்ப்பி ரஜினிகாந்த் இன்று தனது 74ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது 74 வயதில் 50 ஆண்டு சினிமா வாழ்க்கையில், 170 படங்களை கடந்து புகழின் உச்சத்தில் இருக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ‘தளபதி’ படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில், புதுப்படம் ரிலீஸ் போல ‘தளபதி’ படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்துள்ளனர். பல திரையரங்குகளில் பட்டாசு வெடித்து ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தற்பொழுது, இவரது பிறந்தநாளுக்கு […]
சென்னை: ஃபெஞ்சல் புயல், வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புயலின் காரணமாக, திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதோடு நிலச்சரிவு ஏற்பட்டு பரிதாபமாக 7 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக 12 பேர் இந்த ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், […]
சென்னை : சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் சென்றிருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படிப்பை முடித்துவிட்டு, இன்று (டிச.1) நாடு (தமிழகம்) திரும்பியுள்ளார். இந்நிலையில், மூன்று மாதத்திற்கு பின்னர் தமிழகம் திரும்பிய அண்ணாமலையை சென்னை விமான நிலையத்தில், ‘பாரத் மாதா கி ஜே’ என்று கோஷம் எழுப்பி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். லண்டனில் இருந்து தாயகம் திரும்பிய பின், முதல் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தலைவர் அண்ணாமலையிடம், விஜய் அரசியல் வருகை குறித்து […]
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி அமைக்குமா என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த இபிஎஸ், “ஒன்றை நல்லா புரிஞ்சுக்கணும். அரசியல் சூழலை பொறுத்துதான் கூட்டணி அமைக்கப்படும். தேர்தல் நெருங்கும் போதுதான் அது முடிவு செய்யப்படும்” என்றார். இது பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்பதை மறைமுகமாக சொல்வதாக உள்ளது. எந்த சந்தர்ப்பத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது […]
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பிறகு மேடையில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது நாமக்கல் மாவட்டம் தான் எனவும் நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் சிலை அமைவது மிகவும் பொருத்தமானது எனவும் உறையற்றினார். தமிழ்நாட்டில் திமுகவின் மதிப்பு சரிந்து விட்டதாக முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்தும் முதலவர் ஸ்டாலின் […]
நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்துக்கு வருகை தந்திருந்தார். அதன்பிறகு காரின் மூலம் நாமக்கல் சென்ற அவர் மதியம் 12.30 மணியளவில் பரமத்தி சாலையில் உள்ள செலம்பக்கவுண்டா் பூங்காவில் திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் உருவச் சிலையைத் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, 5 மணி அளவில் நாமக்கல்லில் ரூ. 810.28 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு […]
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி நடைபெறுவது இந்தி திணிப்பு எனப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. அரசியல் காட்சிகளின் தலைவர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் இந்தி மாத கொண்டாட்டம் வேண்டாம் எனவும் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற […]
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று நடைபெறும் எனவும் , இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து இப்போது வரை இது இந்தி திணிப்பு எனப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. குறிப்பாக, இதனை பார்த்த தமிழ் ஆர்வலர்கள் கடும் கோபத்துடன் இந்தி பேசாத மாநிலங்களில் என்ன காரணத்துக்காக இந்தி […]
சென்னை : வடகிழக்கு பருவமழை இந்த முறை மிகத் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (14.10.2024) தலைமைச் செயலகத்தில், கனமழை எச்சரிக்கை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பங்கேற்னர். இந்த ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதில், “ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியுங்கள். ஆதரவற்றோர் […]
சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. இரண்டு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், பல்வேறு அரிசியல் தலைவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளனர். மு.க ஸ்டாலின் முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,”மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் ரஜினிகாந்த், விரைந்து நலம் பெற விழைகிறேன்.”என்று குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள […]
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனைத்துக்கட்சிகளும் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இதனிடையே, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக அமைச்சரவை மாற்றம் நேற்று முன்தினம் அரங்கேறியது. அதன்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். மேலும், தமிழக அமைச்சரவை 5-வது முறையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி, கோவி.செழியன், நாசர் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் நேற்று புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். […]
கோயம்புத்தூர் : மேட்டுப்பாளையம் அருகே பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் (108) உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவரது உடல் தேக்கம்பட்டியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட பாப்பம்மாள் 100 வயதைக் கடந்தும் விவசாயம் செய்து வந்தார். இதற்காக, இவருக்கு 2021-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அப்போது, பாப்பம்மாளின் காலில் விழுந்து பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர், தான் விவசாயம் கற்ற […]
சென்னை : தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி கொடுக்காமலும், அனுமதி வழங்காமலும் மத்திய அரசு இருந்து வருவதாக அமைச்சர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டிற்கான நிதியை உடனே விடுவிக்க முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார். அதன்படி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சற்று முன் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார். டெல்லிக்கு செல்லும் ஸ்டாலின், நாளை காலை 11 மணிக்கு பிரதமரை நாளை சந்திக்கவுள்ளார். அப்போது தமிழக திட்டங்கள் […]
சென்னை : பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் இந்திய அணிக்காக 4-வது தங்கம் உறுதியாக கிடைக்கும் என நேற்றைய நாள் முதலே எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை பொழுதில் இறுதி போட்டிக்கு முன் உடல் தகுதியில் 100 கிராம் எடை கூடுதலாக உள்ள காரணத்தால் வினேஷ் போகத்தை சர்வேதச ஒலிம்பிக் கமிட்டி தகுதி நீக்கம் செய்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த இந்தியர்களின் இதயங்களும் நொறுங்கி போனதென்றே கூறலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் பல கட்சி […]
சென்னை : அரசுப் பள்ளி மாணவர்களின் உயர் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை சார்பில், உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளைப் பாராட்டிச் சான்றிதழ் மற்றும் மடிக்கணிணிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின். முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய […]
கோவை : கோயம்பத்தூரில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த ராகேஸ்வரி மற்றும் தனப்பிரியா மற்றும் பொள்ளாச்சியில் சுவர் இடிந்து உயிரிழந்த ஹரிஹரசுதனுக்கு இரங்கல் தெரிவித்ததோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து வெளியாகி இருக்கும் அறிக்கையில் ” கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், சோலையார் அணை, இடதுகரை பகுதியில் மழுக்குப்பாறை செக்போஸ்ட்டிலிருந்து பன்னிமேடு செல்லும் பொதுப்பணித் துறைச் சாலையின் அருகில் உள்ள வீட்டின் அருகே இன்று (30.7.2024) அதிகாலை சுமார் 4.00 […]
கட்டட சான்றிதழ் : தமிழகம் முழுவதும் நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை எளிதாக்க உதவும் வகையில் கட்டட அனுமதியை ஆன் லைன் மூலம் உடனடியாக வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்த கையோடு, 10 பயனாளிகளுக்கு கட்டுமான அனுமதி ஆணைகளை வழங்கினார். 2024-2025-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சுயசான்றிதழ் மூலமாகப் பொதுமக்கள் கட்டட அனுமதி பெறுவதற்குப் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை எளிதாக்கும் […]
சென்னை : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, இன்று சபாநாயகர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி உயிரிழந்த நிலையில், அங்கு கடந்த ஜூலை-10 ம் தேதி (புதன்கிழமை) அன்று விக்கிரவாண்டி தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டார். இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, […]
சென்னை : அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம், காமராஜர் பிறந்த நாளன்று (ஜூலை 15) தொடங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனை திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி, காலை உணவுத் திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் சூழலில், இந்தத் திட்டம் தற்போது அரசு உதவி பெறும் […]