ஒருவரை வீழ்த்த நினைத்தால் அது முடியாது – முதல்வர் பழனிசாமி

Chief Minister Palanisamy has said that he has overcome all the anarchy and entered the fifth year.

அத்தனை அராஜகங்களையும் முறியடித்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறேன் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தேர்தல் பிரச்சாரத்தில் நெல்லை மாவட்டத்தில் ஈடுபட்ட போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேர்மையான முறையில் தான் ஆட்சி அமைக்க முடியும். ஒருவரை வீழ்த்தி வர வேண்டும் என நினைத்தால் முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தனை அராஜகங்களையும் முறியடித்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் ஆட்சி செய்தாலும், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் தான் பொற்காலம் என்றும் தமிழகத்தில் யாருக்கும் வீடு இல்லை என்ற நிலையை உருவாக்க குடியிருப்புகள் கட்டித்தரப்படும் எனவும் மக்கள் மத்தியில் பேசியுள்ளார்.