T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1 முதல் 29 வரை அமெரிக்கா மாற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் அனைத்தும் தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் அனைவரும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா தலைமையிலான 15 கொண்ட இந்திய அணியை […]
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வந்த பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருடன் உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டனர். இதன்பின் […]
Covishield: கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர் உலக முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பறித்தது. கடந்த 2019ல் பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் இரண்டுகளாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் கொரோனா வைரஸை ஒழிக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும் உலக நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளை கண்டுபிடித்தன. அதில் இங்கிலாந்து […]
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை 2024 தொடர் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை அமெரிக்கா மாற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த சூழலில் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள அனைத்து […]
Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் 2 பெண்கள் உள்பட 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு ஏகே 47 துப்பாக்கி உட்பட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாகவும், கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் […]
Heat Wave: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. முன்பு இதுவரை இல்லாத வகையில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதில் சில இடங்களில் இயல்பைவிட வெயிலின் அளவு உச்ச நிலையில் காணப்படுவதால் வெப்ப அலை வீசியும் வருகிறது. இதுதொடர்பாக இந்திய வானிலை […]
Khalistan: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்ற நிகழ்ச்சியில் காலிஸ்தான் கோஷம் எழுப்பப்பட்டதுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. கனடாவில் சீக்கியர்கள் பாரம்பரியமாக கொண்டாடப்படும் கல்சா தின விழா நேற்று ஒட்டாரியோ என்ற பகுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேச தொடங்கியபோது காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுந்துள்ளது. இருந்தாலும் தொடர்ந்து பேசிய ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் சீக்கிய மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை எப்போதும் பாதுகாப்பதாகவும், வெறுப்பு மற்றும் […]
Election2024: மணிப்பூரில் வன்முறை வெடித்த 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் முதல்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்றது. இதன்பின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா, மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் கடந்த 26ம் தேதி நடைபெற்று நிறைவு பெற்றது. இந்த சூழலில் மணிப்பூரில் […]
Heat wave Alert: வெப்ப அலை காரணமாக தமிழகத்துக்கு அடுத்த 5 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கடுமையான கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதில் குறிப்பாக தமிழகத்தில் இயல்பான அளவைவிட வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சில பகுதிகளில் வெப்பநிலை உட்சபட்சத்தை தொட்டு வெப்ப அலை வீசுகிறது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் […]
Amit Shah: மத்திய அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் திடீரென சமநிலையை இழந்ததால் பரபரப்பு. மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜகவின் மூத்த தலைவர்கள் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து நல்வாய்ப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயிர் தப்பியுள்ளார். அதாவது, தேர்தல் பரப்புக்காக இன்று பீகார் மாநிலம் சென்றிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கு நடந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர். […]
Arvind Kejriwal: ஜாமீன் கேட்டு ஏன் மனுதாக்கல் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு கேள்வி. கடந்த மாதம் 21ம் தேதி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதன்பின் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலிடம் விசாரணை மேற்கொண்டு இருந்தது. அதன்படி அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் இருந்து வருகிறார். இதனிடையே, அமலாக்கத்துறை கைதை எதிர்த்தும், காவலில் அனுப்பியதை எதிர்த்தும் […]
Delhi high court: பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பரப்புரையில் பாஜகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாறி மாறி விமர்சனம் செய்து கொள்கின்றனர். இதனால் இரு கட்சி தலைவர்கள் மீதும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த […]
T20 World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி மே 1ம் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் முடிந்த உடனே அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. அதன்படி, ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை அமெரிக்கா மாற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், 4 பிரிவாக பிரிக்கப்பட்டு […]
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவி குற்றசாவளி என்று தீர்ப்பு. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்த நிர்மலா தேவி என்பவர் மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக புகார்கள் எழுந்தன. இந்த புகாரை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு நிர்மலா தேவி மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை கைது செய்தது. கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கு தொடர்பாக மதுரை பல்கலைக்கழக உதவி […]
PM Modi: அரசியலுக்கு அப்பாற்பட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு உதயவியதை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பரப்புரையில் பாஜகவும், காங்கிரஸும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேபோல் ராகுல் காந்தியும் பிரதமர் மோடி அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதனால் தேர்தல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. இந்த சூழலில் தனது அரசியல் எதிரிகளான காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் […]
Senthil balaji: செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாத்துறை கைது செய்தது. இதன்பின் பல்வேறு கட்ட விசாரணைகளை அடுத்து இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது நீதிமன்ற காவலில் கடந்த ஆண்டு முதல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து […]
PM Modi: மக்களவை தேர்தல் பரப்புரையில் ஔரங்கசீப்பை குறிப்பிட்டு பிரதமர் மோடி ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார். ஏழு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இதுவரை இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. மூன்றாம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் மே 7ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தலை முன்னிட்டு ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் பரப்புரையில் […]
IPL 2024: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதமடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 46 போட்டிகள் முடிவடைந்த நிலையில், நேற்று சென்னை அணியும், ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பீல்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் […]
TN Govt: தமிழகத்தில் 1,000 இடங்களில் ORS பாக்கெட்டுகள் வழங்கும் நீர்சத்து குறைபாட்டை போக்கும் மையங்களை அமைக்க உத்தரவு. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அடுத்த சில நாட்கள் தமிழகத்தில் கடுமையான வெப்ப அலை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய […]
IPL2024: மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் இளம் வீரர் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தல். ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் டெல்லி அணியின் தொடக்க […]