காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூட்டத்தில் காளை மாட்டை அவிழ்த்து விட்ட பாஜக. குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 இடங்களில் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக டிச. 1ம் தேதி 89 தொகுதிகளுக்கும், 2 கட்டமாக 93 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. டிசம்பர் 1-ஆம் தேதி முதற்கட்டமாக நடைபெறும் 89 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று […]
சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜீரோ வாங்கும் என்பதால் அவர்களை பாஜக பயன்படுத்த முடியாது என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை இன்னும் சிறிது நேரத்தில் நிறைவடைய உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதி கட்ட பிரச்சாரத்தை மும்மரமாக மேற்கொண்டு வருகின்றனர். இன்று சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் முக ஸ்டாலின், தற்போது திரு.வி.க.நகர் தொகுதியில் தாயகம் கவிக்கு ஆதரவு கோரி பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி […]
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்றுவரை 28 நாட்கள் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 28வது நாளாக தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். கடந்த மார்ச் 7ம் தேதி 234 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்தபின் பரப்புரையை தொடங்கிய சீமான், அவர் போட்டியிடும் சொந்த தொகுதியான திருவொற்றியூர் தொகுதியில் இதுவரை 8 முறை பரப்புரையாற்றியுள்ளார். மீதமுள்ள […]
வெற்றியை தடுக்கும் வகையில் திமுக மீது குறை கூறி பத்திரிக்கைகளில் அதிமுக விளம்பரம் செய்து வருகிறது என ஸ்டாலின் குற்றசாட்டு. இன்று மாலை 7 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவு பெறுவதால், அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதி கட்ட பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர். இன்று சென்னையில் பரப்புரை மேற்கொண்டு வரும் திமுக தலைவர் முக ஸ்டாலின், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி மற்றும் துறைமுகம் தொகுதி திமுக வேட்பாளர் திரு.சேகர்பாபு ஆதரவு கோரி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். […]
எனது மகளின் திருமணம் முடிந்த பிறகு கோவில்பட்டியிலேயே வீடு எடுத்து தங்கி விடுவேன் என டிடிவி தினகரன் பரப்புரையில் தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று கரிசல்குளம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நீங்கள் என்னை தான் வெற்றி பெறச் செய்வீர்கள். ஆனால், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வாரந்தோறும் கோவில்பட்டிக்கு வந்து மக்களின் குறைகளை கேட்டறிவேன் என கூறினார். எனது […]
குஷ்பு உள்ளிட்ட பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் மத்திய உள்துறை அமித்ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைய உள்ளது. தேர்தல் பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், குறிப்பாக மாநில தலைவர்களும், தேசிய தலைவர்களும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று இரவு சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துறைமுகம் தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்துக்கு வாக்கு சேகரித்தார். இந்த நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதியில் […]
தேர்தலில் வெற்றி பெற்றால் 100 நாட்களில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ளது. தேர்தல் பிரச்சாரம் நாளை 7 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்கல் ஆதரவாளர்களை ஆதரித்தும், தாங்கள் போட்டியிடும் தொகுதியிலும் இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட போட்டியிடும் மக்கள் நீதி […]
நேர்மையான, வெளிப்படையான ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நெல்லை, நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாடு எத்தனை பிரச்னைகளை சந்திக்கிறது, அத்தனைக்கும் பிள்ளையார் சுழிபோட்டது திமுக தான் என்று குற்றசாட்டியுள்ளார். காவிரி, முல்லை பெரியார், கச்சத்தீவு, நீட் தேர்வு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் திமுக தான் காரணம் என்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா […]
தமிழகத்தில் 200 இல்ல, 234 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பரப்புரையில் தெரிவித்துள்ளார். தேனியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, முக ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இத்தனை நாட்களாக ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என்று தனக்குத்தானே விளம்பரம் தந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று பிரதமர் மோடி முன்பு பேசும்போது, உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான் என்கிறார், என்று கூறிய ஸ்டாலின், […]
அதிமுக – பாஜக கூட்டணியின் நோக்கம் வேலை வாய்ப்பு, முன்னேற்றம், பெண்களுக்கு பாதுகாப்பு போன்றவைதான் என உத்தரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனை ஆதரித்து, உத்தரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தமிழகத்தில் இருந்து ரூ.120 கோடி நிதி வந்துள்ளது. தமிழக மக்கள் ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள் […]
ஏப்ரல் 4ம் தேதி மாலை 7 மணி வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனுமதி வழங்கியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஏப்ரல் 4ம் தேதி மாலை 7 மணி வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி […]
தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி உளறிக் கொண்டிருக்கிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போடிநாயகனுரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி உளறி கொண்டிருக்கிறார். உள் ஒதுக்கீடு சட்டம் தற்காலிகமானது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என கூறுகிறார். முதல்வருடன் தொலைபேசியில் பேசிய போது உள் ஒதுக்கீடு நிரந்தரமானது தான் என ராமதாஸ் தெரிவித்துள்ளார் என முக ஸ்டாலின் பரப்புரையில் விமர்சித்து பேசியுள்ளார். இதனிடையே, நேற்று பிரபல நாளிதழ் […]
சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கும் அதிமுக ஆட்சியில், பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்வதற்கு நா கூசவில்லையா? என முக ஸ்டாலின் பேச்சு. வேலூர் மாவட்டத்தில் இன்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஏதோ தேர்தலுக்காக மட்டும் வரும் ஸ்டாலினாக நான் வரவில்லை, எப்பொழுதும் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன்தான் இந்த ஸ்டாலின் என்ற உரிமையோடு உங்களிடம் வாக்குக் […]
திமுகவினருக்கு மக்கள் தேர்தல் மூலம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி பெண்களை மிகவும் கீழ்த்தரமாக கொச்சைப்படுத்தி பேசுவதாக கூறி, தேர்தல் பரப்புரைகளில் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக பேசும் திமுகவினருக்கு மக்கள் தேர்தல் மூலம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுபோன்று பெண்களை தரக்குறைவாக பேசும் பேச்சாளர்களை எல்லாம் தட்டி கேட்க தைரியம் இல்லாத […]
தமிழகத்தின் தலையெழுத்தை சரி செய்ய வேண்டுமானால் பணமூட்டைகளுக்கு வாக்களித்து விடாதீர்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் சின்னமனூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அரசியலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எனக்கு அடையாளம் காட்டியது தேனி மாவட்டம். தஞ்சாவூர் எப்படி எனது சொந்த மாவட்டமோ, அதேபோன்று இதுவும் எனது சொந்த மாவட்டம் தான் என தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தலையெழுத்தை சரி செய்ய வேண்டுமானால் […]
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினால் மோடியை முதல்வராக்குவதாகவே பொருள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாபநாசத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மீண்டும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினால் மோடியை முதல்வராக்குவதாகவே பொருள். ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் அல்ல, அமித்ஷா தான் துணை முதல்வர் என விமர்சித்துள்ளார். மேலும் பாஜக, அதிமுக பற்றி மக்கள் நீதி மய்யம், நா.த.க., அமமுக உள்ளிட்ட கட்சிகள் பேசுவதே கிடையாது […]
எத்தனை முறை நட்டா வந்தாலும் நோட்டாவிற்கு கீழ்தான் வாக்கு விழும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் அரங்குறிச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அனிதா பர்வீனை ஆதரித்து, அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் தங்கள் இனத்தை அழித்தது என்றும் பாஜக மனிதகுல எதிரி எனவும் தெரிவித்துள்ளார். அதனால் இந்த இரண்டு கட்சிகளையும் ஒருபோதும் ஏற்கமாட்டேன் என்றும் […]
கொரோனா தடுப்பு விதிகள் பற்றி வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். தேர்தல் பரப்புரை, வாக்குபதிவின் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, தேர்தல் நடவடிக்கைகளின் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தேர்தல் பரப்புரையின்போது கொரோனா தடுப்பு விதிகள் பற்றி வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த […]
அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே தனது லட்சியம் என்று பரப்புரையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சார்பில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். முதல்வர் பிரச்சாரத்தில் எதிர்கட்சியான திமுகவை விமர்சிக்கும் வகையில் உள்ளது. அதிமுக அரசின் சாதனை திட்டங்களை பட்டியலிடும் சில நேரங்களில் எதிர்கட்சியினருக்கு எதிராக ஆவேசமான கருத்துகளை முன் வைத்தும் பிரசாரம் செய்து வருகிறார். அந்தவகையில் இன்று காலை திருப்பத்தூர் தொகுதியில் மருது அழகுராஜை ஆதரித்து […]
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற எம்ஜிஆர் பாடலைபாடி பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார். ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும் இடமெல்லாம் சாலையோர கடைகளில் டீ குடித்தும், மேளம் அடித்தும் மற்றும் குடத்தில் தண்ணீர் பிடித்து நூதன முறையில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இன்று பிரச்சாரத்தின்போது எம்ஜிஆர் பாடலை பாடினார். தம்மை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களுக்கு சவால்விடும் வகையில் வெற்றி […]