100 நாட்களில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் – கமல்ஹாசன், ம.நீ.ம.

Kamal Haasan, chairman of the People's Justice Center, said the plans would be implemented in 100 days if he won the election.

தேர்தலில் வெற்றி பெற்றால் 100 நாட்களில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ளது. தேர்தல் பிரச்சாரம் நாளை 7 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்கல் ஆதரவாளர்களை ஆதரித்தும், தாங்கள் போட்டியிடும் தொகுதியிலும் இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தேர்தலில் வெற்றி பெற்றால் 100 நாட்களில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் தேவை அனைத்தையும் ஒரே நேரத்தில் நிறைவேற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

நல்ல அரசியலுக்கு முன்னுதாரணமாக கோவை தெற்கு தொகுதி மாறவேண்டும். அது தான் என்னுடைய விருப்பம் என கூறி, மக்களுக்கு என்ன தேவையோ, எது முதலில் முக்கியமோ அதை மக்கள் உணர்ந்ந்து பட்டியலிட்டு சொல்ல வேண்டும் என்றும் அதை மக்களின் உதவியுடன் செயல்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.