பாஜகவால் சிறுபான்மையின வாக்குகள் கிடைக்கவில்லை என்ற சி.வி சண்முகத்தின் கருத்து ஏற்புடையதல்ல என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் கேடி ராகவன் கருத்து. விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம். நாம் பாஜகவை கூட்டணியாக சேர்த்ததால் சிறுபான்மையினர் ஓட்டு நமக்கு கிடைக்கவில்லை. அதனால்தான் தேர்தலில் தோல்வியடைந்துவிட்டோம். பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் சிறுபான்மையினர் நமக்கு வாக்களித்திருப்பார்கள் என்றும் மீண்டும் தமிழகத்தில் அதிமுக […]
தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றைக்கும் ஜீவனுள்ள இயக்கமாகக் காங்கிரஸ் கட்சி விளங்குகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது – கேஎஸ் அழகிரி தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து அதிமுக கூட்டணி 75 இடங்களை கைப்பற்றி ஆட்சியை இழந்தது. திமுக, அதிமுகவை அடுத்து வெற்றி கூட்டணியில் இடம்பிடித்திருந்த காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களை வெற்றி பெற்றது. இதையடுத்து தமிழகத்தின் மூன்றாவது கட்சி எது? […]
மக்கள் மன்றங்களில் வலிமையாகக் குரலை ஒலிக்கச்செய்து எதிர்க்கட்சியாக மக்கள் மனங்களில் நிலைபெறும் என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 30 இலட்சத்திற்கும் மேலான மக்களின் வாக்குகளைப் பெற்று தமிழர் நிலத்தின் தனித்துவமான மாபெரும் அரசியல் அமைப்பாக மாறியிருப்பது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த செய்தியாகும். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப்போட்டியிட்டு 4,58,104 வாக்குகளைப் […]
தமிழக சட்டமன்ற தேர்தல் இறுதி முடிவுகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருபெரும் தலைவர்கள் இல்லாமல் முதல் முறையாக தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் 71.49% வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் பிரதான கட்சிகளான அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக கட்சிகளும், திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ மற்றும் விசிக ஆகிய கட்சிகளும் கூட்டணி அமைத்து களம் […]
வாக்குகளை அளித்த மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களில் அமோக வெற்றியை பெற்றுள்ளது. திமுக மட்டும் 125 தொகுதிகளில் வென்று, வரும் 7ம் தேதி தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ளார். இந்த தேர்தலில் அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார். இதன்பின் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் […]
தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக மு.க ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றி, தனி பெரும்பான்மையுடன் முக ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்கவுள்ளார். திமுகவின் வெற்றிக்கு பலரும் நேரில் சென்றும், சமூகவலைத்தளம் மூலமாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலாலுக்கு சேலத்தில் இருந்தே அனுப்பியுள்ளார். தமிழக […]
சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. திமுக நேரடியாக 125 இடங்களில் முன்னிலையில் பெற்று, தனி பெரும்பான்மையுடன் முக ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்கவுள்ளார். இதையடுத்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார். தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுகவுக்கு […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட 10 அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர். ஆவடி – மாஃபா பாண்டியராஜன், மதுரவாயல் – பென்ஜமின், விழுப்புரம் சிவி சண்முகம், ராயபுரம் – ஜெயக்குமார், கடலூர் – எம்சி சம்பத், சங்கரன்கோயில் – ராஜலக்ஷ்மி, ஜோலார் பேட்டை – கேசி வீரமணி, ராசிபுரம் – சரோஜா, திருச்சி – கிழக்கு, வெல்லமண்டி – நடராஜன், ராஜபாளையம் – ராஜேந்திர பாலாஜிஆகிய அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர். இதனிடையே, தமிழகத்தில் 234 தொகுதிகளில் திமுக […]
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. தேர்தல் முடிவுகளில் திமுக முன்னிலை பெற்ற நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அதில் நாட்டின் வளர்ச்சிக்காகவும், மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்க்காகவும் மற்றும் கொரோனாவை வீழ்த்துவதற்கு இணைந்து செயல்பட வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு […]
சென்னை ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தியிடம் தோல்வி. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் தற்போது வரை திமுக கூட்டணி 158 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணி 76 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ள முக ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை பல சுற்றுகளாக நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை ராயபுரம் தொகுதியில் […]
அதிமுக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி, திமுக வேட்பாளர் துரைமுருகன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக 158 இடங்களிலும், அதிமுக 76 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இதில் திமுக 125 இடங்களில் தனி பெரும்பான்மையுடன் முன்னிலை பெற்று 10 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக திமுக தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சர் பதவியை ஏற்கவுள்ளார். இந்த நிலையில், காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகனும் , அதிமுக சார்பில் ராமும் போட்டியிட்டனர். […]
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மநீம முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் வீழ்ந்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பாக பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் போட்டியிட்டார். நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதி கடுமையான போட்டி நிலவிய தொகுதியாக மாறியது. காரணம் கோவை […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தோல்வி அடைந்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், திமுக 158, அதிமுக 76 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 75,511 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக போட்டியிட்ட அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா 21,485 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
தமிழகத்தின் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து. தமிழக சட்டமன்ற தேர்த்லின் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி 158 இடங்களிலும், அதிமுக 76 இடங்களிலும் முன்னிலை பெற்று பல இடங்களில் வெற்றி அறிவித்து வருகின்றனர். அதிகமான இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளதால், தமிழகத்தில் முக ஸ்டாலின் தனிபெருபான்மையுடன் ஆட்சி அமைக்கிறார். திமுகவின் வெற்றிக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களும், தெரிவித்து வருகின்றனர். […]
ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழக மக்களுக்கு நன்றி என திமுக முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு கட்டங்களை தாண்டி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் வெற்றி பெட்ரா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, திமுக 156 இடங்களிலும், அதிமுக 78 இடங்களிலும், தமிழகத்தில் 234 தொகுதிகளில் திமுக 156 இடங்களிலும், அதிமுக 78 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. திமுக நேரடியாக 124 […]
சட்டமன்ற தேர்தல் முடிவில் பெரும்பான்மையான இடங்களில் திமுக முன்னிலை பெற்று, அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிறார். தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில், 71.49% வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் பிரதான கட்சியான அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணி அமைத்தும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களமிறங்கியிருந்தது. சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றிபெற்றுள்ள முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று காலை 8 மணி முதல் தொடர்ந்து, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்ப முதலே திமுக கூட்டணி முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி 149 இடங்களிலும், அதிமுக கூட்டணி 84 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் 1 இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது. இதில் […]
விஜயபாஸ்கர் போட்டியிடும் விராலிமலை தொகுதியில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை ஒன்றரை மணிநேரமாக நிறுத்திவைப்பு. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை 8 மணிக்கு தொடங்கி சில சுற்றுகளை கடந்து நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அமைச்சர் விஜய பாஸ்கர் போட்டியிடும் விராலிமலை தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டது. முதல் சுற்றில் வைக்கப்பட்டுள்ள 14வது மின்னணு இயந்திரத்தின் வெளியே உள்ள சீரியல் எண்ணில் தவறு இருப்பதால், அந்த இயந்திரத்தில் உள்ள […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முதல் சுற்றில் வெளியாகியுள்ள தகவலின்படி, திமுக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. அதுபோல், கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் 16,136 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். முக ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் ஆதிராஜாராம் 6,471 வாக்குகள் பெற்று பின்னடைவை […]
சென்னை திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வரும் நிலையில் சீமானுக்கு பின்னடைவு. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் சுற்று தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், 129 இடங்களில் திமுகவும், 103 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி பின்னடைவையே சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் […]