#BharatJodoYatra: ராகுல் யாத்திரையில் பங்கேற்றார் கமல்ஹாசன்!

ராகுல் காந்தி நடத்தி வரும் “பாரத் ஜோடோ” யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்பு. டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நடத்தி வரும் “பாரத் ஜோடோ” என்ற இந்திய ஒற்றுமை யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியினருடன் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சமயத்தில், டெல்லியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் அரசியல்வாதியாக இல்லாமல், ஒரு இந்தியனாக பங்கேற்கவுள்ளேன் … Read more

ம.நீ.மய்யத்தில் மீண்டும் இணைந்தார் அருணாச்சலம்!

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய அருணாச்சலம் மீண்டும் கட்சியில் இணைந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் நிறுவன பொதுச்செயலாளர் அருணாச்சலம், கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து மீண்டும் அக்கட்சியில் இணைந்தார். அருணாச்சலம் 2020-ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான சுற்றறிக்கையில், அரசியலில் ஆழங்காற்பட்ட அனுபவம் மிக்க அருணாச்சலம் தமிழக அரசியலில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த நம்மவர் அவர்களால் தான் முடியும் என்பதை உணர்ந்து … Read more

அம்பேத்கரின் லட்சியத்தைத் தொடர உறுதி பூணுவோம் – ம.நீ.ம.தலைவர் கமல்

அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட். சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அவ்வப்போது, அம்பேத்கர் குறித்து பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில், அம்பேத்கரின் லட்சியத்தைத் தொடர உறுதி பூணுவோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் … Read more

சாதி, மதம், இனம், மொழி கடந்து, மனிதம் நேசிக்கும் அனைவரும் உறுதியேற்போம் – மநீம

மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியலமைப்பின் மாண்புகளை போற்றுவது நம் கடமை என மக்கள் நீதி மய்யம் ட்வீட். கடந்த 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அரசியல் சாசனம் நாடாளுமன்றத்தில் முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை நினைவில் கொள்ளும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இன்றைய தினம் அரசியல் சாசன தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. டெல்லி உச்சநீதிமன்ற வளாகத்தில் அரசியல் சாசன தின விழா இன்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, மெய் … Read more

கமல்ஹாசனின் உடல்நிலைக்கு என்னதான் ஆயிற்று.? மருத்துவமனை கொடுத்த புதிய விளக்கம்….

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் விஸ்வநாத்தை சந்திக்க ஹைதராபாத்திற்கு சென்று அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பின்னர் நேற்று மதியம் சென்னை திரும்பினார். ஹைதராபாத்தில் இருந்து கமல்ஹாசன் சென்னை திரும்பிய நிலையில், நேற்று உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் விரைவில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று காலை … Read more

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் மநீம தலைவர் கமல்ஹாசன்!

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமல்ஹாசன் வீடு திரும்பினார். ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய நிலையில், உடல்நல குறைவு காரணமாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மநீம தலைவர் கமல்ஹாசன் விரைவில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமல்ஹாசன் இன்று காலை … Read more

மக்களவை தேர்தல் – கமல்ஹாசன் ஆலோசனை!

2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுப்பது தொடர்பாக கமல்ஹாசன் கருத்து கேட்பு. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை அண்ணா நகரில் நடைபெறும் ஆலோசனையில் மக்கள் நீதி மய்யம் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுப்பது தொடர்பாக கமல்ஹாசன் கருத்து கேட்டு வருகிறார்.

கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து!

அன்புத்தோழர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என முதலமைச்சர் முக ஸ்டாலின் ட்வீட். தமிழ் திரையுலகில் கடந்த 63 ஆண்டுகளாக தனது கலைப் பயணத்தை மேற்கொண்டு வரும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனின் 68-ஆவது பிறந்தநாள் நவம்பர் 7-ஆம் இன்று கொண்டாடப்படுகிறது. நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து … Read more

ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து ஆளைக்கடிக்க முனையும் அண்ணாமலை – மநீம கண்டனம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆடுமேய்க்கும் தொழிலுக்குத்தான் போக வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கண்டனம். ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து ஆளைக்கடிக்க முனையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் என மாநில செயலாளர் முரளி அப்பாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக பாஜக கட்சித் தலைவர் அண்ணாமலை வழக்கமாக பேசும் பொறுப்பற்ற பேச்சுக்களில் ஒன்றை அண்மையில் அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவில் பேசிய காணொலி ஒன்றை காண நேர்ந்தது. வழக்கமான குப்பைகளில் ஒன்று … Read more

இனிமேல் உயராது என்ற உறுதிமொழி தான் உண்மையான தீர்வு – மநீம

விலைவாசி உயர்வை மறைக்க மத்திய அரசு நாடகம் அரங்கேற்றுவதாகவே எண்ணத் தோன்றும் என மக்கள் நீதி மய்யம் ட்வீட். பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைப்பதாகவும், இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என்றும், அனைத்து மாநில அரசுகளும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இருப்பினும், பெட்ரோல், டீசல் … Read more